வைலத்தூர்
வைலத்தூர்
വൈലത്തൂർ | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 10°57′0″N 75°56′45″E / 10.95000°N 75.94583°E | |
Country | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 676106 |
தொலைபேசி குறியீடு | 0494_258**** |
வாகனப் பதிவு | KL-10, KL-55 |
அருகில் உள்ள நகரம் | திரூர் |
மக்களவைத் தொகுதி | பொன்னாணி |
தப்பவெட்பம் | வெப்ப மண்டலம் (கோப்பென்) |
கோடைக்கால சராசரி வெப்பநிலை | 35 °C (95 °F) |
குளிர்கால சராசரி வெப்பநிலை | 20 °C (68 °F) |
வைலத்தூர் (Vailathur) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது திரூரிலிருந்து மலப்புறம் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து மேற்குப் பகுதியில் தனுருக்குச் செல்லும் சாலை உள்ளது. வலத்தூரானது தானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. [1]
அமைவிடம்
[தொகு]இட்டிலக்கல் (அய்யய்யா சாலை வழியாக) (திருப்பும் இடம். நேரான சாலை தானூருக்கும் வலதுபுறம் திரும்பும் சாலை செம்மடத்துக்கும் செல்கிறது), வெள்ளச்சல், சூரங்கரா, புல்பரம்பா, தெய்யால, பாண்டிமுட்டம் வழியாகச் செல்லும் தானுர் சாலை செம்மடத்துக்கும் எளிதான வழியாகும். இந்த வழியாக பேருந்துகள் உள்ளன. வெள்ளச்சல், சுரங்கரா, இட்டிலக்கல், தலக்கடத்தூர், கடுங்கத்துக்குண்டு, குட்டிப்பாலா, கரிங்கப்பாரா, தனலூர் ஆகியவை அருகிலுள்ள சில சிறிய நகரங்கள் ஆகும்.
போக்குவரத்து
[தொகு]வையத்தூர் கிராமம் திரூர் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 திரூர் வழியாக செல்கிறது. இச்சாலையின் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோவைக்கு செல்கிறது.
- தொடருந்து நிலையம்: மலபார் பகுதியில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்களில் ஒன்று திரூர் தொடருந்து நிலையம் ஆகும். மலப்புறம் மாவட்டத்தை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வகையில், ஏறக்குறைய அனைத்து தொடருந்துகளும் இங்கு நிற்கின்றன.
- அருகிலுள்ள வானூர்தி நிலையம்: கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
- அருகிலுள்ள நகரங்கள்: திரூர், கோட்டக்கல்
முக்கிய கல்வி நிறுவனங்கள்
[தொகு]- ஏஎம்எல்பி பள்ளி அத்தாணிக்கல், வைலத்தூர்
- எஸ்சி ஆங்கிலப் பள்ளி, வைலத்தூர்
- திப்யன் முன்பள்ளி, வைலத்தூர்
- ஏஎம்எல்பி பள்ளி, இட்டிலக்கல்
பள்ளிவாசல்களும், கோயில்களும்
[தொகு]- ஜும்ஆ மசூதி, அத்தாணிக்கல்-தெய்யால வீதி, சிலாவில்
- நகர ஜும்ஆ மசூதி, வைலத்தூர்
- மசூதி அல் ஃபலாஹ்,
- மசூதி உஸ்மான் பின் அஃப்பான், கவனத்துச்சோலை
- கவனத்துச்சோழ தேவி கோவில், நவுசெரிபாடி
- மகாதேவர் கோவில், சிலாவில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Local Self Government Department | Local Self Government Department". பார்க்கப்பட்ட நாள் 2019-09-23.