வைநிறமாதல்
வைநிறமாதல் (Etiolation)/iːtɪəˈleɪʃən/ என்பது முழுமையாக ஒளி கிடைக்காத அல்லது பகுதியளவு ஒளி கிடைக்கும் பூக்கும் தாவரங்களில் காணப்படும் ஒரு நிலைமை ஆகும்.[1] இத்தாக்கத்தினால் தாவரத் தண்டு பலவீனமாகி நீட்சியடைந்து காணப்படுவதுடன் அடர்த்தியில்லாத சிறிய இலைகளைக் கொண்டதாகவும் காணப்படும். பசுமை வளர்ச்சி (de-etioloation) என்பது இதற்கு எதிர்மறையாக செறிவான பசுமையுடம் தாவரம் சடைத்து வளர்வதைக் குறிக்கும்.
தாக்கங்கள்
[தொகு]வைநிறமாதல் காரணமான நீட்சியடைதல் காரணமாகத் தாவரம் மண்ணின் கீழ் அல்லது போட்டித் தாவரங்களின் கீழிருந்து மற்றும் இலைச் சருகுகளிலிருந்து ஒளியை நோக்கி வளரவும் முடிகின்றது. இதன் வளரும் முனை ஒளிக்கு அதீத உறுத்துணர்ச்சி கொண்டதாகவும் கவரப்படக் கூடியதாகவும் காணப்படும்.
இங்கு நிகழும் மாற்றங்கள்:
- இலைகளும் தண்டுகளும் நீட்சியடைதல்.
- இலை மற்றும் தண்டுகளில் உள்ள கலச்சுவர் பல்வீனமடைதல்.
- நீளமான கணுவிடைவெளி காரணமாக ஐதான இலை ஒழுங்கு.
- பச்சயம் அழிதல் காரணமாக வெளிறிய மஞ்சள் நிறம் காணப்படுதல்.
இந்நிகழ்வு தாவர ஓளிவாங்கி நிறமிகள் ஒளிக்கு ஆட்படுவதால் கட்டுப்படுத்தப்படுகின்றன. குருத்து முளைக்கும்போது, தாவர நிறமி A-யும் B-யும் சிவப்பு, அப்பாலைச் சிவப்புக் கதிர்களுக்கு நேர்விகிதத்தில் ஆட்பட்டு துலங்குகின்றன. அதேவேளையில் குருத்து மேற்பரப்புக்கு வரும்போது மறைநிறமி 1 நீல ஒளிக்குத் துலங்குகின்றது.[2]
காரணிகள்
[தொகு]வைநிறமாதல் ஆக்சின் எனப்படும் தாவர இயக்குநீர் மூலம் கட்டுப்படுத்தப் படுகின்றது. இது உச்சியாட்சியைப் பேணுவதற்காக தவர உச்சி மூலம் சுரக்கப்படுகின்றது. ஆக்சின் சுரக்கப்ப்டும் இடத்திலிருந்து கீழ் நோக்கிக் கடத்தப்படுவத்ன் மூலம் கக்கவரும்புகளில் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதற்கும் செயற்படுகின்றாது.[3] ஆக்சின்கள் ஒளியின் முன்னிலையில் வினைத்திறன் கொண்டவையல்ல. இவை வினைத்திறனுள்ளவையாயுள்ளபோது இவை கலச்சுவர்களில் புரத்தொன்களை வெளியேற்றச்செய்கின்றன. இது காடித்தன்மையை அதிகரிப்பதன் மூலம் கலச்சுவர்களில் எக்பான்சன் எனப்படும் இயங்குநீரைத் தூண்டுகின்றது. இவை கலச்சுவரை நலிவடையச் செய்து விரிவடையச் செய்கின்றன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Burgess, Jeremy (1985). An Introduction to Plant Cell Development. CUP Archive. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-31611-1. பார்க்கப்பட்ட நாள் 2011-01-17.
- ↑ "Plant Physiology 4th Edition" Taiz and Zeiger (2006)
- ↑ Whippo, CW; Hangarter, RP (2006). "Phototropism: Bending towards enlightenment". The Plant cell 1 8 (5): 1110–9. doi:10.1105/tpc.105.039669. பப்மெட்:16670442.
- ↑ Purves, William K.; Sadava, David; Orians, Gordon H. (2004). Life: The Science of Biology. Volume III: Plants and Animals. Macmillan. p. 745. பார்க்கப்பட்ட நாள் 2011-01-17.