வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி, தேனி
Appearance
வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி, (College of Agricultural Technology) தேனி என்பதுதமிழ்நாட்டில் தேனியில் உள்ள வேளாண்மைக் கல்லூரியாகும். இது 2010இல் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் வைகை அணை அருகே உள்ள குலபுரத்தில் நிறுவப்பட்டுள்ளது.[1] இக்கல்லூரி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இணைவுப்பெற்ற கல்லூரியாகும். இக்கல்லூரியின் வளாகத்தில் 15 வகுப்பறைகள், 8 ஆய்வகங்கள், 1 தேர்வு அறை, நூலகம் மற்றும் கணினி/மொழி ஆய்வகம் உள்ளது. மாணவர்கள் தங்கிப் படிக்கும் நிறுவனமாக இருப்பதால், ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கான தனித்தனியாகத் தங்கும் விடுதிகள் உள்ளன. நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் யோகா போன்றவை பாடத்திட்டத்துடன் கற்பிக்கப்படுகின்றன.
பயிற்றுவிக்கும் பாடம்
[தொகு]இங்கு நான்காண்டு வேளாண்மை இளம் அறிவியல் பாடத்தினை மாணவர்கள் கற்கின்றனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CAT - College Of Agricultural Technology". youth4work.com (in ஆங்கிலம்). Retrieved 2021-07-31.
{{cite web}}
: Text "Youth4work" ignored (help) - ↑ "College of Agricultural Technology - CAT, Theni About Us Courses, Fees, Admission, Ranking, Placement 2021". https://www.universitydunia.com/ (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2021-07-31.
{{cite web}}
: External link in
(help)|website=