உள்ளடக்கத்துக்குச் செல்

வேளாண்மை உயிர்ப்பன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்காச்சோளத்தின் இயல்பற்ற வகைகள் பயிர் பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டுகளாகும், மேலும் புதிய வகைகளை இனப்பெருக்கம் செய்வதற்கான அடிப்படையாக இதைப் பயன்படுத்தலாம்.

வேளாண்மை உயிர்ப்பன்மை (Agricultural biodiversity) என்பது வேளாண்மை தொடர்பான பொதுவான பல்லுயிர் பெருக்கத்தின் துணைக்குழு ஆகும். மரபணு, இனம், சுற்றுச்சூழல் மட்டங்களில் தாவரங்கள், நுண்ணுயிரிகளின் வகைகளையும் வேறுபாட்டையும் இது குறிக்கும். சுற்றுச்சூழல் கட்டமைப்புகள், செயல்பாடுகள், செயல்முறைகளை விளைச்சல் அமைப்புகளிலும் அதைச் சுற்றியுள்ளவற்றிலும் பேணி, உணவும் உணவு அல்லாத வேளாண் பொருட்களை வழங்குகின்றன. இது உழவர்கள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள் காட்டுவாசிகளால் ஆளப்படுகிறது வேளாண் பல்லுயிர்ப் பெருக்கம் நிலைத்தன்மை, தகவமைப்பு, ஏற்புதிறம் ஆகியவற்றை வழங்குகிறது. உலகெங்கிலும் உள்ள ஊரகச் சமூகங்களின் வாழ்வாதார உத்திகளின் முதன்மைக் கூறாக உள்ளது. பேணுதிற உணவு அமைப்புகளுக்கும் உணவுகளுக்கும் வேளாண் பல்லுயிர்ப் பெருக்கம் மையமாக உள்ளது. வேளாண் பல்லுயிர்ப் பெருக்கம் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு, வாழ்வாதாரப் பாதுகாப்புக்கு பங்களிக்க முடியும். மேலும் இது காலநிலை தழுவல், காலநிலைத் தணிப்புக்கு முதன்மையானது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Frison, E.A.; Cherfas, J.; Hodgkin, T. (2011). "Agricultural Biodiversity Is Essential for a Sustainable Improvement in Food and Nutrition Security". Sustainability 3: 238–253. doi:10.3390/su3010238. http://www.bioversityinternational.org/e-library/publications/detail/agricultural-biodiversity-is-essential-for-a-sustainable-improvement-in-food-and-nutrition-security. 
  2. Mijatović, Dunja; Van Oudenhoven, Frederik; Eyzaguirre, Pablo; Hodgkin, Toby (2013). "The role of agricultural biodiversity in strengthening resilience to climate change: towards an analytical framework" (in en). International Journal of Agricultural Sustainability 11 (2): 95–107. doi:10.1080/14735903.2012.691221. பன்னாட்டுத் தர தொடர் எண்:1473-5903. 

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாண்மை_உயிர்ப்பன்மை&oldid=3809725" இலிருந்து மீள்விக்கப்பட்டது