வேலம்மா வலசு கோப்பிணேஸ்வரர் கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வேலம்மா வலசு கோப்பிணேஸ்வரர் கோயில் சேலம் மாவட்டம் சங்ககிரிக்கும் எடப்பாடிக்கும் இடையில் வேலம்மா வலசு அருகில் அமைந்துள்ளது.
இவ்வாலயம், 1765 ஆம் ஆண்டு ஆம் வருடம் கட்டப் பெற்று, பிற்காலங்களில் சிதைவடைந்துள்ளது. 1980களில், இக்கோவிலின் வரலாறு பற்றி கேள்விப்பட்டு, கோவை மாவட்டத்தை சேர்ந்த பீளமேடு விசுவநாதன் என்பவர் முயற்சியெடுத்து இக்கோயிலினை 1982ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அவர் காலத்தில் கோவிலின் உடைந்த சிற்பங்களையும், மதில் சுவரும் கண்டுபிடிக்கப்பட்டு, தொல்லியல் ஆய்வின் மூலம் இக்கோவில் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என சான்றளிக்கப் பட்டுள்ளது[சான்று தேவை]. அவர்தம் முயற்சியில், கருவறை கட்டப்பட்டு நித்திய பூஜை செய்யப்பட்டது. தற்பொழுது, கோவில் மீண்டும் சிதிலமடைந்து செட்டியார்களின் கவனமும், பொது மக்களின் கவனமும் இல்லாமல் உள்ளது.
தலவரலாறு
[தொகு]காவிரி படுகையில் வாழ்ந்து அரசருக்கு உறுதுணையாய் நின்ற செட்டியார்கள் 17ஆம் நூற்றாண்டில் மராட்டியர்களின் படையெடுப்பின் பொழுது நாயக்க மன்னர்களுக்கு படை, பொருள், குதிரை, யானை, போர் கருவிகள், என பல உதவிகள் செய்ததால், மராட்டியர்களுக்கு மிகுந்த சேதம் ஏற்பட்டது. தமிழ் நாட்டின் ஆட்சியை பிடித்த மராட்டியர்களின் கோபத்தினால் செட்டியார்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆண் செட்டிகளை சிரச் சேதம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. மூத்த அப்பச்சியின் யோசனைப்படி, 500 இளம் தம்பதிகளை (பால்ய விவாகம் செய்வித்து) இரகசியமாய் சங்ககிரி நாயக்க மன்னர்களுக்குட்பட்ட பகுதிக்கு குடியமர்த்தினர். இதனால் இக்குடும்பங்கள் ஐநூற்று செட்டிமார் எனவும், கொங்கு பகுதியில் குடிஅமர்த்தப் பட்டதால் கொங்கு செட்டியார் எனவும் அழைக்கப் பெற்றனர். செட்டிமார்கள் சிறந்த சிவ பக்தர்கள். கொங்கு பகுதியில் உள்ள பெரும்பாலான சிவன் கோயில்கள் செட்டியார்களின் பொருளுதவியினாலேயே கட்டப்பட்டது.
இவர்களில் ஒரு பகுதியினர் செட்டியார் குட்டை எனும் பகுதியில் ( தற்பொழுது சேலம் மாவட்டம் சங்ககிரிக்கும் எடப்பாடிக்கும் இடையில் வேலம்மா வலசு அருகில்) தங்கி விவசாயம் மற்றும் வியாபாரம் செய்தனர். அவர்களின் குடும்பத்திற்காக அருகிலேயே சிவன் கோயிலையும் கட்டினர். இச்சமயத்தில் சங்ககிரி நாயக்க மன்னர்களும் மராட்டியர்களின் ஆட்சிக்கு அடி பணிந்தனர். மராட்டியர்களுடன் சமரசம் செய்துகொள்ள செட்டிமார்கள் வழி தேடினர்
மராட்டியர்களின் குலதெய்வம் சிவன். சல்சட்டே என்று அழைக்கப்பட்ட பம்பாய் நகர், மராட்டிய தேசம், தட்சிண திராவிட நாடுகள் எல்லாம் மீண்டும் மராட்டியர் வசம் வந்ததை கொண்டாடும் வகையில்,பம்பாய் அருகிலுள்ள தானே எனும் ஊரில் உள்ள கோப்பிணேஸ்வரர் கோயில், 1760 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
அந்த ஈஸ்வரன் பெயரையே செட்டியார்களின் புதிய கோயிலின் சிவபெருமானுக்கும் வைத்து வணங்கினர். இறைவிக்கு அங்கயற்கண்ணி என பெயரிட்டனர். ஈசன் எப்பெயரில் இருந்தாலும் ஈசனே. பக்தர்களை காத்து நிற்பதில் முதன்மையான கடவுளல்லவா?. ஈசன் மராட்டிய மன்னரின் கனவில் தோன்றி தான் செட்டியார் குட்டையில் எழுந்தருளியிருப்பதாகவும், தன்னருளால் இந்நாட்டு மக்கள் விவசாயம் செழித்து, பசி, பட்டினி இன்றி, குலம் தழைத்து, உடல் பிணியின்றி, நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் எனச் சொல்லி மறைந்தார். தூக்கம் கலைந்த மன்னர், அரண்மனையிலிருந்து உடனே செட்டிகுட்டை சென்று, ஈசனை வழிபட்டு, செட்டியார்களுக்கு அனைத்து உதவிகளும் செய்தார்.