உள்ளடக்கத்துக்குச் செல்

வேத சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேத சாரம் எனப்படுவது இந்து சமயத்தின் அறிவு நூலான வேதம் கூறும் சாரமாகும். அதாவது, எவ்விதமான இடையீடும் இன்றி அனைவரும் உள்ளும் புறமும், பரம்பொருளை அறிந்து களிப்புற வேதமானது எல்லார்க்கும் சொல்கின்றது.

வேதத்தின் சாரங்களாவன:

  • அந்தராத்மாவாக விளங்கும் அந்த பரமன் ஒருவனே;
  • அந்த ஒருவனை அன்றி வேறில்லை;
  • அவன் வானாகி மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி, உயிர்க்கு உயிராய் ஆகி நிறைந்து உள்ளான்;
  • உயிர்கள் உள்ளந்தோறும் இடம் கொண்டுள்ளான்;
  • அவன் பரிசுத்தன், இன்பமயமானவன், அறிவானவன்;
  • தங்கத்தை மாசு மறைத்துக் கொண்டிருப்பது போல அவனது நிஜ சொரூபத்தை நமது மனமாசுக்கள் மறைக்கின்றன.பல்வேறு சுத்த சாதனங்களால் நம் மனமாசைத் துடைத்து, மனத்தை தூய்மையாக்கினால் அவ்விறைவனைக் காணலாம்.

உசாத்துணை நூல்கள்

[தொகு]
  • துரை இராஜாராம். (ஜூன் 2000). திருமூலர் வாழ்வும் வாக்கும். :நர்மதா பதிப்பகம். பக்கம் 66.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேத_சாரம்&oldid=1418199" இலிருந்து மீள்விக்கப்பட்டது