வேதம் ஓதுதல்
Appearance
வேதம் ஓதுதல் (Vedic chant), இந்தியாவில் தொன்றுதொட்டுப் பரம்பரை பரம்பரையாக வேத மந்திரங்களை காதால் கேட்டு, மனதில் இருத்தி வைத்து பிறர்க்கு கூறப்பட்டது எதுவோ அதுவே சுருதி எனப்படும். வேத மந்திரங்களை எவ்வாறு ஓத வேண்டும் என்பதை சம்ஹிதைகள், பதம், கிரமம், ஜடை மற்றும் கனம் மூலம் விளக்குகிறது. சம்ஹிதைகள் கிமு 15ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே விளங்கியது.[1] யுனெஸ்கோ நிறுவனம் 2006ஆம் ஆண்டில் இந்தியாவில் வேதம் ஓதும் முறைக்கு புலப்படாத பண்பாட்டுப் பாரம்பரியம் என அங்கீகாரம் வழங்கியது.[2][3]
வேதம் ஓதும் முறைகள்
[தொகு]வேதங்களை ஓதுதல் மற்றும் பயிலும் முறையினை ஐந்து வகையாக பிரித்துள்ளனர்[4].
- சம்ஹிதைகள் - வேத மந்திரங்களை சந்தி சேர்த்துச் சொல்லும் முறையாகும்.
- பதம் - வேத மந்திரங்களை பதம் பதமாக பிரித்து பயிலும் முறையாகும்.
- கிரமம் - ஒரு ஒழுங்கு முறைமையில் (கிரமமாக) வேத மந்திர பதங்களை முன்னும் பின்னுமாக சொல்லி ஓதும் முறையாகும்.
- ஜடை - வேத மந்திரங்களை ஜடை பின்னல் போன்று சேர்த்தும், மறுபடியும் பிரித்து ஓதும் முறையாகும்.
- கனம் - வேதமந்திரங்களை சிறப்பாக மாற்றி மாற்றி பதங்களை ஒரு முறை, இரு இருமுறை, மும் மும்முறை மீண்டும் ஒருமுறை என ஓதும் முறையாகும்.
வேதங்களை இம்முறையில் ஓதியும், ஓதப்பட்டும் வருவதால், வேதங்களில் இடைச்செருகல்கள் ஏற்படாமலும், ஒலிக்குறிப்புகளில் மாற்றம் ஏற்படாமலும் பாதுகாக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Scharfe, Ch. 13: "Memorising the Veda", p. 240 ff.
- ↑ Tradition of Vedic chanting
- ↑ Tradition of Vedic chanting
- ↑ Saraswati, Swamini Svatmabodhananda (1 July 2014). Rules of chanting – Sanskrit grammar series 2 (PDF). Bangalore. Retrieved 29 August 2018.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)