உள்ளடக்கத்துக்குச் செல்

வேணு மாதவ் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேணு மாதவ்
பிறப்புகோடாட், ஆந்திரப் பிரதேசம் (now in தெலங்காணா), இந்தியா
இறப்பு(2019-09-25)25 செப்டம்பர் 2019 [3]
பணி
  • நடிகர்
  • நகைச்சுவை நடிகர்
வாழ்க்கைத்
துணை
சிறீ வாணி
பிள்ளைகள்2
விருதுகள்நந்தி விருது

வேணு மாதவ் என்பவர் இந்திய நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளர், மிமிக்ரி கலைஞர் மற்றும் நகைச்சுவை நடிகர் என பல்துறை வித்தகராக இருந்தார். இவர் தெலுங்கு சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தார். சுமார் 500 படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டில், அதிரடி நகைச்சுவைத் திரைப்படமான லக்ஷ்மியில் அவரது பணிக்காக சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான மாநில நந்தி விருதைப் பெற்றார்.

பிறப்பு மற்றும் இறப்பு

[தொகு]

வேணு மாதவ் தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தில் உள்ள கோடாட்டில் பிறந்தார். இவருக்கு ஸ்ரீ வாணிஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கல்லீரல் மற்றும் சிறுநீரக சிக்கல்கள் காரணமாக செகந்திராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் 25 செப்டம்பர் 2019 அன்று இறந்தார்.[4][1]

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேணு_மாதவ்_(நடிகர்)&oldid=3713519" இலிருந்து மீள்விக்கப்பட்டது