உள்ளடக்கத்துக்குச் செல்

வெ. இலட்சுமிபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெங்கட்ராமன் இலட்சுமிபாய் (Venkatraman Lakshmibai) என்பவர் ஓர் இந்தியக் கணிதவியலாளர் ஆவார். போசுட்டனிலுள்ள வடகிழக்குப் பல்கலைக் கழகத்தில் இவர் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இயற்கணிதக் குழுக்கள் மற்றும் பிரதிநிதித்துவக் கோட்பாடு குறித்த இயற்கணித வடிவியல் பிரிவில் இவர் ஆய்வுகள் மேற்கொண்டார் [1]:{{{3}}}. குறிப்பாக இவற்றில் சுகூபெர்ட் வகைகள் மற்றும் கொடி வகைகள் உள்ளிட்டவை அடங்கும்.

டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் இலட்சுமிபாய் 1976 ஆம் ஆண்டு சாரா பில்லேயுடன் சேர்ந்து தன்னுடைய முனைவர் பட்டத்தைப் பெற்றார் [1]:{{{3}}}. அவர் சுகூபெர்ட் வகைகள் தனிக்கட்டுரையின் இணை ஆசிரியர் ஆவார் [2]:{{{3}}}. மேலும், இவர் யசுட்டின் பிரௌனுடன் சேர்ந்து இரண்டு கொடி வகைகள் வகை தனிக் கட்டுரைகளுக்கு இணை ஆசிரியராக இருந்தார். வடிவியலிம் இரு திசைப்பயன் விளைவு [3]:{{{3}}}, சேர்வியல் மற்றும் பிரதிநிதித்துவ கோட்பாடு, கிராசுமேனியன் வகை வடிவியல் மற்றும் பிரதிநிதித்துவம் –கோட்பாட்டு அம்சங்கள் என்பவை அவ்விரண்டு தனிக்கட்டுரைகளாகும் [4]:{{{3}}}. 2012 ஆம் ஆண்டில் அமெரிக்க கணிதவியல் சங்கத்தின் தொடக்க உறுப்பினர்களில் ஒருவராக இலட்சுமிபாய் தேர்ந்தெடுக்கப்பட்டார் [5]:{{{3}}}.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Venkatraman Lakshmibai", Faculty profiles, Northeastern University, பார்க்கப்பட்ட நாள் 2017-08-18
  2. Review of Singular Loci of Schubert Varieties by Michel Brion (2001), வார்ப்புரு:MR
  3. Review of Flag Varieties: An Interplay of Geometry, Combinatorics, and Representation Theory by Christian Ohn (2010), வார்ப்புரு:MR
  4. Review of The Grassmannian Variety: Geometric and Representation-Theoretic Aspects by Li Li, வார்ப்புரு:MR
  5. List of Fellows of the American Mathematical Society, பார்க்கப்பட்ட நாள் 2017-08-18

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._இலட்சுமிபாய்&oldid=3592058" இலிருந்து மீள்விக்கப்பட்டது