உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளியம்பலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககாலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவன் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி எனப் பெயர் கொண்டுள்ளதால் தன் இறுதிக் காலத்தில் அவன் வெள்ளியம்பலத்தில் உயிர் நீத்தான் எனக் கொள்ளப்படுகிறது. இந்த வெள்ளியம்பல்லம் இக்காலச் சொக்கநாதர் கோயில் அன்று. [சான்று தேவை]சங்ககால அம்பலம். மருத்துவமனை எனக் காணமுடிகிறது.[சான்று தேவை]

கோயில் வெள்ளியம்பலம்

[தொகு]

வெள்ளியம்பலம் அல்லது இரஜத சபை எனப் பெயர் கொண்டது, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள நடராசர் சன்னிதியாகும்.[1] பிற தலங்களில் எல்லாம் இடக்காலைத் தூக்கி ஆடும் நடராசர் வெள்ளியம்பலத்தில் மட்டும் வலக்காலைத் தூக்கி ஆடும் நிலையில் காட்சி தருகிறார்[2]. வெள்ளியால் ஆன அம்பலம் (அரங்கம்) என்பதால் இவ்விடம் வெள்ளியம்பலம் எனப் பெயர் பெற்றது.[3]

மரபு வழிக் கூற்றுகள்

[தொகு]

மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணத்தைக் காணவந்த பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதர் முனிவரும் சிதம்பரம் நடராசனின் ஆனந்த தாண்டவத்தைக் காணாமல் உணவு உண்ண மறுக்க, சிவன் அவர்களுக்காகத் தனது ஆடிய கோலத்தை மதுரையில் காட்டியருளிய இடம் வெள்ளியம்பலம் எனக் கூறப்படுகிறது.

பிற தலங்களில் எல்லாம் இடக்காலைத் தூக்கி ஆடும் நடராசர் வெள்ளியம்பலத்தில் வலக்காலைத் தூக்கி ஆடுகிறார். நடனக் கலையைக் கற்ற பாண்டிய மன்னன் இராஜசேகர பாண்டியன், நடனமாடுவதில் உள்ள சிரமத்தை உணர்ந்தான். வெள்ளியம்பலத்தில் உள்ள நடராசர் ஒரு காலில் எப்பொழுதும் நின்றபடி ஆடுவதால் அவருக்குக் கால் வலிக்குமே என்று கருதி அவரிடம் காலை மாற்றி ஆடும்படி வேண்டிக் கொள்ள நடராசரும் அவனுக்காக இடதுகாலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினதாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.[2]

மீனாட்சியை மணந்து மதுரைக்கு அரசனானதால் வெள்ளியம்பலத்தில் நடராசர் பத்துக் கரங்களிலும் ஆயுதங்களுடன் காணப்படுகிறார் என்ற கூற்றும் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. T. G. S. Balaram Iyer, T. R. Rajagopalan (1987). History & description of Sri Meenakshi Temple. pp.39
  2. 2.0 2.1 V.K. 2003, ப. 96-98.
  3. Soundara Rajan 2001, ப. 51.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளியம்பலம்&oldid=2943642" இலிருந்து மீள்விக்கப்பட்டது