வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
Appearance
வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற ஆறாவது படலமாகும்.
படலச் சுருக்கம்
[தொகு]இதில் சிவபெருமானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் மதுரைப்பதியிலே திருமணம் முடிந்த பின்னர்,திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் உணவு உண்ண சிவபெருமானாகிய சுந்தரபாண்டியர் அழைத்தார். திருமணத்திற்கு வந்திருந்தோரில் பதஞ்சலி முனிவரும்,வியாக்கிரபாத முனிவரும் சிவபெருமானிடம் பொன்னம்பலத்தில் ஆடியருளும் திருநடனத்தை மதுரைப்பதியிலே ஆடக்கோரியதும், சிவபெருமானாகிய சுந்தரபாண்டியர் ஆடிய திருநடனத்தை [1] கூறும் படலமாகும்.
சான்றாவணம்
[தொகு]- ↑ திருவிளையாடல்-கங்கை புத்தக நிலையம் சென்னை.5வது பதிப்பு-ஆகத்து-2010