வெளிர் சொண்டுக் கூரலகி
வெளிர் சொண்டுக் கூரலகி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. bruijnii
|
இருசொற் பெயரீடு | |
Drepanornis bruijnii உசுத்தாலெத்து, 1880 | |
வேறு பெயர்கள் | |
Epimachus bruijnii |
வெளிர் சொண்டுக் கூரலகி (Drepanornis bruijnii) என்பது நடுத்தர அளவான, அதாவது 35 செமீ நீளமான பசுங்கபில நிறச் சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இதன் ஆண் பறவை தன் கண்களைச் சுற்றித் தனித்த ஊதா கலந்த சாம்பல் நிறத் தோலையும் கபில நிறக் கண்களையும் கூர்மையாய் நீண்டு வளைந்த வெளிறிய சொண்டையும் கொண்டிருக்கும். மேல் மார்பு இறகுகள் ஒளிர் சிவப்பாயும் இறகுகளின் ஓரங்கள் ஊதா நிறத்திலும் இருப்பதுடன் நீல நிறக் கீழ் மார்பு இறகுகள் ஓரங்களில் பச்சை நிறமாயும், சிறிய கண் புருவ இறகுகள் ஊதா நிறமாயும் இருக்கும். இதன் பெண் பறவை ஆண் பறவையிலும் ஒப்பீட்டளவிற் சிறியதும் நிறம் மங்கலானதும் ஆகும்.
வெளிர் சொண்டுக் கூரலகிகள் வடமேற்கு நியூகினித் தீவின் தாழ்நில மழைக்காடுகளிற் பரவிக் காணப்படும். இதன் முதன்மையான உணவுகள் பழங்களும் பூச்சிகளுமாகும். காடழித்தல் காரணமாக இதன் வாழிடத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- BirdLife International (2004). Epimachus bruijnii. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான நியாயப்படுத்தல்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.
வெளித் தொடுப்புகள்
[தொகு]- பறவையுயிர் இனங்களின் மெய்யறிக்கை பரணிடப்பட்டது 2009-01-05 at the வந்தவழி இயந்திரம்
- ஐயுசிஎன் செம்பட்டியல்[தொடர்பிழந்த இணைப்பு]
- செந்தரவு நூல் பரணிடப்பட்டது 2006-10-13 at the வந்தவழி இயந்திரம்