வெளிப்படையான நோய்த்தொற்று விகிதம்
வெளிப்படையான நோய்த்தொற்று விகிதம் (Apparent infection rate) என்பது ஒரு நோயின் முன்னேற்ற விகிதத்தின் மதிப்பீடாகும். இவ்விகிதம் வெவ்வேறு நேரங்களில் நோய்த்தொற்று அளவின் விகிதாச்சார நடவடிக்கைகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
நோய்த்தொற்று அளவின் விகிதாச்சார நடவடிக்கைக்கு முதலில் நோய் பரவலின் அளவீடு தேர்ந்தெடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக நோய்ப்பரவல் அளவு என்பது பூஞ்சை காளான் பாதித்த இலையின் பரப்பளவு அல்லது நோயால் பாதிக்கப்பட்ட தாவரங்களின் பகுதி எண்ணிக்கை விகிதம் போன்றவையாகும். நோயின் அளவுகள் பின்னர் காலப்போக்கில் எடுக்கப்படுகின்றன. ஒரு கணித மாதிரி இதற்குப் பொருத்தமாக இருக்கும். இம்மாதிரி இரண்டு அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.
- நோய்த்தொற்றின் வேகம் நோய்த்தொற்றாமல் மீதமுள்ள திசுக்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது;
- அவ்வாறு கட்டுப்படுத்தப்படாவிட்டால், நோய்த்தொற்றின் அளவு அதிவேக வளர்ச்சியை வெளிப்படுத்தும்.
இங்கு ஒற்றை மாதிரி அளவுரு r மட்டும் உள்ளது, இதுவே வெளிப்படையான தொற்று விகிதமாகும். வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி பகுப்பாய்வு முறையில் இதை கணக்கிடலாம்.
இதில்,
- r என்பது வெளிப்படையான நோய்த்தொற்று விகிதம்
- t1 என்பது முதலாவது கணக்கிடப்பட்ட காலம்
- t2 என்பது இரண்டாவதாக கணக்கிடப்பட்ட காலம்
- x1 முதலாவது கணக்கெடுப்பின்போது தொற்று பாதிக்கப்பட்ட பகுதியின் அளவு
- x2 இரண்டாவது கணக்கெடுப்பின்போது தொற்று பாதிக்கப்பட்ட பகுதியின் அளவு
மேற்கோள்கள்
[தொகு]- Parry, David W. (1990). Plant pathology in agriculture. Cambridge University Press. pp. 66–67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-36890-1.