உள்ளடக்கத்துக்குச் செல்

வெர்மினசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருமோனிய புராணங்களின்படி, கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாக்கும் ரோமானிய கடவுள் வெர்மினசு (Verminus) என்பதாகும். கி.மு. 218இல் ரோமானிய ஹிஸ்பானியா வெற்றியின் போது ரோமானியர்கள் கைப்பற்றிய இண்டீஜீட்களிடமிருந்து வெர்மியசு கடவுளினை பெற்றிருக்கலாம்.[1] கி.மு. 151இல் தூதர் (அல்லது டுவோவிர்) ஆலஸ் போஸ்டுமியஸ் அல்பினஸால் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பலிபீடம் 1876 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.[2][3] இதனை உரோமில் உள்ள பழங்கால கம்யூனலே அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.[4]

வெர்மினசு கடவுளுக்கு 2 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்று அர்ப்பணிக்கப்பட்டது. இது மனிதர்களிடையே அதிகரித்த புழு நோய்த்தொற்றின் எதிர்வினையாகக் கருதப்படுகிறது. ஸ்பானிஷ் கால்நடை விஞ்ஞானி எம். கோர்டரோ டெல் காம்பிலோ மனிதர்களிலும் விலங்குகளிலும் ஏற்பட்ட பாதிப்பு தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டது எனத் தெரிவித்தார்.[5]

ரோமில் உள்ள விமினால் மலையில் வெர்மினசுக்கான பலிபீடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Roman Architecture in Hispania". spanisharts.com. Archived from the original on 2020-11-27. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
  2. Dictionary of Roman religion.
  3. Elizabeth Rawson (1973). "Scipio, Laelius, Furius and the Ancestral Religion". The Journal of Roman Studies 63: 161–74. doi:10.2307/299175. "p 161". 
  4. Frothingham AL (1917). "Vediovis, the Volcanic God: A Reconstruction". The American Journal of Philology 38 (4): 370–91. doi:10.2307/288964. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9475. "p 375". 
  5. Cordero-del-Campillo M (1999). "On the Roman god Verminus". Hist Med Vet 24 (1): 11–9. பப்மெட்:11623710. 
  6. Jesse Benedict Carter (Jan–Mar 1909). "The Death of Romulus". American Journal of Archaeology 13 (1): 19–29. doi:10.2307/496877. https://archive.org/details/sim_american-journal-of-archaeology_1909_13_1/page/19. "p 28". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெர்மினசு&oldid=3611174" இலிருந்து மீள்விக்கப்பட்டது