உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்மணி பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்மணி இயக்கம் (Venmani School) என்றும் அழைக்கப்படும் வெண்மணி பள்ளியைச் சேர்ந்த கவிஞர்கள் மலையாள இலக்கியத்தில் ஒரு இயக்கமாக ஈடுபட்டனர். கவிதை பாணியை 19 ஆம் நூற்றாண்டில் கொடுங்கல்லூரின் வெண்மணி இல்லத்தின் உறுப்பினர்கள் முன்னோடியாகக் கொண்டனர். [1]

முக்கிய உறுப்பினர்கள்[தொகு]

வெண்மணி பள்ளியின் முக்கிய கவிஞர்கள் வெண்மணி அச்சன் நம்பூதிரிபாடு (1817-1891), வெண்மணி மகான் நம்பூதிரிபாடு (1844-1893), பூந்தோட்டம் அச்சன் நம்பூதிரி (1821-1865), பூந்தோட்டம் மகான் நம்பூதிரி (1857-1896) மற்றும் கொடுங்கல்லூர் கோவிலகத்தின் உறுப்பினர்கள் (அரச குடும்பம்) கொடுங்கல்லூர் குஞ்சிக்குட்டன் தம்புரான் போன்றவர்கள் இருந்தனர். இந்த கவிஞர்களின் பாணி சிறிது காலத்திற்கு மிகவும் பிரபலமடைந்தது. மேலும் வெளுத்தேரி கேசவன் வைத்தியர் (1839-1897) மற்றும் பெருநெல்லி கிருட்டிணன் வைத்யன் (1863-1894) போன்றவர்களும் இருந்தனர். [2]

இலக்கியத்தின் நடை[தொகு]

வெண்மணி பள்ளி பொதுவான நாள் கருப்பொருள்களுடன் தொடர்புடைய ஒரு கவிதை பாணியையும், சமசுகிருதத்தை விட தூய மலையாளத்தையும் பயன்படுத்தியது. எனவே கவிதைகள் சாதாரண மனிதர்களால் எளிதில் புரிந்து கொள்ளப்பட்டது. படைப்புகள் நகைச்சுவை, அறிவு, பாடல் அளவு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றன. [3]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்மணி_பள்ளி&oldid=3415874" இலிருந்து மீள்விக்கப்பட்டது