உள்ளடக்கத்துக்குச் செல்

வெங்கடேஸ்வரர் கோவில் (நியூ ஜெர்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருள்மிகு வெங்கடேஸ்வரா கோயில் நியூ ஜெர்சியின் பிரிட்ஜ்வாட்டரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும் .[1] 1998 ஆம் ஆண்டில், மரபுசார்ந்த இக்கோவில் கட்டப்பட்டது.[2][3] இக்கோவிலின் பரப்பளவு 11,000 சதுர அடி ஆகும்.[4]

வரலாறு

[தொகு]
Bridge water Temple, New Jersey, Ravindraboopathi

1989 ஆம் ஆண்டில், நியூ ஜெர்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த இந்துக்கள் ஒருங்கிணைந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இந்து கோவில் மற்றும் கலாச்சார சங்கம்  (ஆங்கிலம்: Hindu Temple and Cultural Society of USA Inc. (HTCS) என்னும் அமைப்பை நிறுவினர்.[4] பிப்ரவரி 1992 இல், இக்குழுவினர் ஒரு மரபுசார்ந்த கோவிலைக் கட்டும் நோக்கில் நியூ ஜெர்சி மாநிலம் பிரிட்ஜ்வாட்டர் நகரில் நிலத்தை வாங்கியது.[4] புதிய கோயிலுக்கான திட்டமிடல் தொடர்ந்தது. இதற்கிடையில் வாங்கிய நிலத்தில் ஏற்கனவே கட்டப்பட்திருந்த  கட்டிடத்தில் பக்தர்கள் வழக்கம் போல ஆன்மீக நடவடிக்கைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபடத் தொடங்கினர் [3] 1995ல் புதிய கோவிலின் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.[3] 1996 ஆம் ஆண்டு மே மாதம் சின்ன ஜீயர் சுவாமியால் கால்கோள் விழா நடத்தப்பட்டு வாஸ்து சாஸ்திரப்படி கோவில் கட்டும் பணி தொடங்கியது.[3][4] 1998 ஆம் ஆண்டு சின்ன ஜீயர் சுவாமி மற்றும் பிற அர்ச்சகர்களால் குடமுழுக்கு நடத்தப்பட்டு கோவில் திறக்கப்பட்டது.[3]

2019 ஆம் ஆண்டில், பிரிட்ஜ்வாட்டர் மண்டல வாரியம் கோவில்களின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது.[5]

தெய்வங்கள்

[தொகு]

இக்கோவிலுக்குள் வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி, கருடன், விநாயகர், அம்பிகை, நந்தி, சிவலிங்கம், ஐயப்பன், சுப்ரமணியர், சத்தியநாராயணர், துர்க்கை, சரஸ்வதி, இலக்குமி நாராயணர், ராதாகிருஷ்ணர், ராமர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வச் சிலைகள் நிறுவப்பட்ட 16 சன்னதிகள் உள்ளன. .[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hooli, Shekhar H. (5 June 2017). "New Jersey's Venkateswara Temple - world's costliest and largest Hindu temple [PHOTOS+VIDEOS]". www.ibtimes.co.in (in ஆங்கிலம்).
  2. 2.0 2.1 "Sri Venkateswara Temple".
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 (Thesis). {{cite thesis}}: Missing or empty |title= (help)
  4. 4.0 4.1 4.2 4.3 "History of Sri Venkateswara Temple - Bridgewater, NJ USA". htcsusa.org."History of Sri Venkateswara Temple - Bridgewater, NJ USA". htcsusa.org.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. Giambusso, David (3 May 2019). "After long legal battle, Hindu temple in Bridgewater wins expansion approval". NJ.com.