வூரி வங்கி
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1899 |
தலைமையகம் | தென் கொரியா, சீனா, வங்காளதேசம், இந்தியா |
தொழில்துறை | வங்கி நிதி நிறுவனம் |
உற்பத்திகள் | நிதிச் சேவைகள் employees = ~15,000 |
இணையத்தளம் |
வூரி வங்கி (Woori Bank) தென்கொரியா தலைநகரை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் வங்கியாகும். கமர்சியல் பேங்க் ஆப் கொரியா, ஹனில் பாங்க், பீஸ் பாங்க் மற்றும் ஹான்விட் பாங்க் என பல முறை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வங்கி 2002-ஆம் ஆண்டு வூரி வங்கி என்று பெயரை மாற்றிக்கொண்டது. வூரி வங்கி தென் கொரியாவின் வூரி நிதி குழுமத்தின் ஒரு சகோதர நிறுவனம் ஆகும்.
2009 மே மாதம் வூரி வங்கியின் கிளை வட கொரியாவில் உள்ள கீசாங் நகரில் தொடங்கப்பட்டது. 2009 மே மாதம் சீனாவில் யூனியன் பே டெபிட் அட்டைகளை வழங்கிய முதல் தென் கொரிய வங்கியாகி விட்டது வூரி வங்கி. இதே போன்று 2010 மார்ச் மாதம் சீனாவில் முதன் முறையாக ஷாங்காய் டூரிசம் அட்டைகளை வழங்கிய முதல் வெளிநாட்டு வங்கி என்ற புகழும் வூரி வங்கிக்கு கிடைத்தது.
தென் கொரியாவின் பிரபல வங்கிகள் பெரும்பாலானவை விரைவில் இந்தியாவில் கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரியா டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.[1]
இந்தியாவில் வூரி வங்கியின் முதல் கிளை 2012 ஏப்ரல் மாதம் சென்னை நகரில் தொடங்கியது.[2]
சென்னையில் ஹூண்டாய் மோட்டார், லோட்டெ, சாம்சங் உட்பட 170-க்கும் மேற்பட்ட கொரிய நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில் இந்த வங்கியி்ன் இந்தியாவில் உள்ள முதல் கிளையும் சென்னை நகரிலேயே திறக்க முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவில் 35 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இயங்கி வரும் வூரி வங்கியின் தலைவர் சூன் வூ லீ அறிவித்தார்.