உள்ளடக்கத்துக்குச் செல்

வீ. நாகம் அய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரராகவபுரம் நாகம் அய்யா (Veeraraghavapuram Nagam Aiya) 1850 - 1917) இந்திய வரலாற்றாளரும், பொதுத்துறை அலுவலரும் ஆவார். இவர் திருவிதாங்கூர் கெஜட்டீர் என்ற முக்கியமான தகவல் தொகுப்பு நூலை உருவாக்கியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

நாகம் அய்யா தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் வீரராகவபுரம் என்ற ஊரில் 1850 திசம்பரில் பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு. இவரது முன்னோர் திருவனந்தபுரத்திற்கு குடியேறினார்கள். திருவனந்தபுரம் மன்னர் கல்லூரியில் பட்டப்படிப்பை 1870இல் முடித்தார். அக்கல்லூரியின் முதல் பட்டதாரி இவரேயாவார்.

1870லேயே இவர் அரசில் முதுநிலை எழுத்தராக நியமனமானார். 1872ல் வட்டாட்சியர் பதவி உயர்வு பெற்றார். 1883இல் திவான் பேசுகாராக [தலைமை கணக்காயர்] பதவி உயர்வு பெற்றார். 1875இல் 24 வயதான நாகம் அய்யா திருவிதாங்கூரின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தலைமை அதிகாரியானார்.

ஆக்கம்

[தொகு]

1904இல் சென்னை இராசதானியின் அரசு தகவல்தொகுதி (கெஜட்டீர்) போன்ற ஒன்றை திருவிதாங்கூருக்கும் உருவாக்கும் பொறுப்பு நாகமய்யாவுக்கு வழங்கப்பட்டது. இவரால் எழுதப்பட்டு 1906இல் வெளிவந்த திருவிதாங்கூர் கெஜட்டீர் இன்றும் அச்சில் உள்ளது.

இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._நாகம்_அய்யா&oldid=3229034" இலிருந்து மீள்விக்கப்பட்டது