வீவா உலகக்கோப்பை
![]() ஓவியரின் கற்பனையில் நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணம் | |
தோற்றம் | 2006 |
---|---|
மண்டலம் | பன்னாடு (புதிய கூட்டமைப்பு வாரியம்) |
தற்போதைய வாகையாளர் | ![]() |
அதிக முறை வென்ற அணி | ![]() (3 வெற்றிகள்) |
இணையதளம் | வீவா |
![]() |
வீவா உலகக்கோப்பை (Viva World Cup) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடாத்த திட்டமிடப்பட்டு நடாத்தப்படும், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபீஃபா) அங்கீகாரம் பெறாத நாடுகளுக்கான, புதிய கூட்டமைப்பு வாரியத்தினால் (Nouvelle Fédération-Board, NFB) ஒழுங்குபடுத்தப்பட்ட பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். 2012 ஆம் ஆண்டு போட்டிகள் ஈராக்கிய குர்திஸ்தானில் சூன் 4 முதல் 9 வரை இடம்பெறுகின்றது. இப்போட்டிகளில் முதன் முதலாக தமிழீழ அணியும் பங்குபற்றுகின்றது.
வரலாறு
[தொகு]ஏப்ரல் 2005 இல், புதிய கூட்டமைப்பு வாரியம் தனது முதலாவது வீவா உலகக்கோப்பை போட்டித்தொடரை வடக்கு சைப்பிரசில் நடத்துவதாக அறிவித்தது. சைப்பிரசு-துருக்கிய காற்பந்தாட்டக் கூட்டமைப்பின் (KTFF) 50 ஆண்டுகள் நிறைவையொட்டி வடக்கு சைப்பிரசு தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 16 அணிகள் போட்டியிடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 2005 இல் வடக்கு சைப்பிரசில் ஆட்சியேறிய புதிய அரசு, மற்ற நாடுகளூடன் சுமூகமான உறவைப் பேண முடிவெடுத்தது. வீவா போட்டித் தொடரில் எந்த நாடுகள் பங்குபற்றலாம், எவை பங்குபற்ற முடியாதென அது நிபந்தனைகளை விதித்ததாக புதிய கூட்டமைப்பு வாரியம் குற்றம் சாட்டியது. பதிலாக, நிதிக் கோரிக்கையில் வாரியம் நியாயமற்ற நிபந்தனைகளை விதித்ததாக வடக்கு சைப்பிரசு கூட்டமைப்பு குற்றம் சாட்டியது.[1] இதனையடுத்து முதலாவது வீவா உலகக்கோப்பைத் தொடரை ஒக்சித்தானியாவில் நடத்துவதற்கு வாரியம் தீர்மானித்தது. பதிலாக, சைப்பிரசு-துருக்கிய காற்பந்தாட்டக் கூட்டமைப்பு தனியாக வீவா உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவிருக்கும் அதே நாட்களில் "எல்ஃப் கோப்பை" என்ற போட்டியை நடத்தவிருப்பதாக அறிவித்தது. இத்தொடரில் வாரியத்தின் சில உறுப்பு நாடுகளும் பங்குபற்றுவதாக அறிவித்தன.
ஒக்சித்தானியா 2006
[தொகு]முதலாவது உலக்கோப்பை ஒக்சித்தானியாவில் 2006 நவம்பர் 19 முதல் 25 வரை நடைபெற்றது. நான்கு அணிகளே இத்தொடரில் போட்டியிட்டன. சாப்மி அணி இறுதிப் போட்டியில் மொனாக்கோ அணியை 21-1 என்ற கணக்கில் வென்று வீவா உலககோப்பையைக் கைப்பற்றியது.
போட்டி முடிவுகள்
[தொகு]வருடம் | இடம் | இறுதி | 3ம் இடத்துக்கான போட்டி | ||||
---|---|---|---|---|---|---|---|
வெற்றியாளர் | ஆட்டக்கணிப்பு | 2ம் இடம் | 3ம் இடம் | ஆட்டக்கணிப்பு | 4ம் இடம் | ||
2006 2006 வீவா உலகக்கோப்பை |
![]() |
![]() |
21–1 | ![]() |
![]() |
எளிய வெற்றி | ![]() |
2008 2008 வீவா உலகக்கோப்பை |
![]() |
![]() |
2–0 | ![]() |
![]() |
3–1 | ![]() |
2009 2009 வீவா உலகக்கோப்பை |
![]() |
![]() |
2–0 | ![]() |
![]() |
4–4 (5 - 4) ps |
![]() |
2010 2010 வீவா உலகக்கோப்பை |
![]() |
![]() |
1–0 | ![]() |
![]() |
2–0 | ![]() |
2012 2012 வீவா உலகக்கோப்பை |
![]() |
![]() |
2–1 | ![]() |
![]() |
7–2 | ![]() |
^ பயண அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளுதலில் ஏற்பட்ட சிக்கலினால் பின்வாங்கியதால் எளிய வெற்றி கிடைத்தது.
வெற்றிக் கிண்ணம்
[தொகு]வீவா உலகக்கோப்பை வெற்றிக் கிண்ணம் பிரான்சிய சிற்பியான ஜெரால்ட் பிகால்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. முன்னாள் தென்னாபிரிக்க அரசுத் தலைவர் நெல்சன் மண்டேலாவை கௌரவப்படுத்தும் முகவாக நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணம் பெயர் மாற்றப்படவுள்ளது.[2]
வெற்றியாளர்கள்
[தொகு]பங்குபற்றும் நாடுகள்
[தொகு]அணி | ![]() 2006 |
![]() 2008 |
![]() 2009 |
![]() 2010 |
![]() 2012 |
வருடம் |
---|---|---|---|---|---|---|
![]() |
2ம் | 1 | ||||
![]() |
9ம் | 1 | ||||
![]() |
6ம் | 5ம் | 2 | |||
![]() |
4ம் | 2ம் | 2ம் | 1ம் | 4 | |
![]() |
2ம் | 1 | ||||
![]() |
2ம் | 1 | ||||
![]() |
3ம் | 5ம் | 3ம் | 5ம் | 4 | |
![]() |
1ம் | 1ம் | 1ம் | 3 | ||
![]() |
5ம் | 4ம் | 6ம் | 4ம் | 4 | |
![]() |
8ம் | 1 | ||||
![]() |
1ம் | 3ம் | 3ம் | 3 | ||
![]() |
4ம் | 1 | ||||
![]() |
7ம் | 1 | ||||
![]() |
4ம் | 1 | ||||
![]() |
6ம் | 1 | ||||
![]() |
3ம் | 1 | ||||
Total | 4 | 5 | 6 | 6 | 9 |
- Legend
- 1ம் – வெற்றியாளர்
- 2ம் – 2ம் இடம்
- 3ம் – 3ம் இடம்
- 4ம் – 4ம் இடம்
- — இடம்
குறிப்புகள்
[தொகு]வெளியிணைப்புக்கள்
[தொகு]- Official Site பரணிடப்பட்டது 2007-02-12 at the வந்தவழி இயந்திரம்
- Official forum