உள்ளடக்கத்துக்குச் செல்

வி. சுக்ஞான குமாரி தியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. சுக்ஞான குமாரி தியோ
தொகுதிகபிசூரியநகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1936/1937
இறப்பு (அகவை 87)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்

வி. சுக்னனா குமாரி தியோ (V. Sugnana Kumari Deo-1936/1937 - 10 பிப்ரவரி 2024) ஒடிசாவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1963-இல் முதன்முதலில் மாநில சட்டமன்றத்திற்கு கபிசூரியநகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது அரசியல் வாழ்க்கையில் மொத்தம் 10 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.[1] தியோ கல்லிகோட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இராஜா இராமச்சந்திர மர்தஜா தியோவின் மருமகள் ஆவார்.[2][3] 15வது ஒடிசா சட்டசபையின் இடைக்கால சபாநாயகராகவும் தியோ இருந்துள்ளார்.[4]

பிற

[தொகு]

சுக்ஞான குமார் தியோவும் பிரம்மபூர் பல்கலைக்கழகத்தின் உறுப்பினராக இருந்தார். 1955-86 வரை கல்லிகோட் பிராந்திய கூட்டுறவு சந்தைப்படுத்தல் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

இறப்பு

[தொகு]

தியோ 10 பிப்ரவரி 2024 அன்று தனது 87வது வயதில் சென்னையில் மருத்துவமனை ஒன்றில் இறந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hrusikesh Mohanty (1 April 2019). "With Deo out of poll race, end of road for Khallikote royals? | Bhubaneswar News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 January 2021.
  2. "Royal families hold sway over Ganjam politics - OrissaPOST". Odisha News, Odisha Latest news, Odisha Daily - OrissaPOST (in அமெரிக்க ஆங்கிலம்). 25 February 2019. பார்க்கப்பட்ட நாள் 28 January 2021.
  3. "Kabisuryangar Election Result 2019: Kabisuryangar Assembly Election 2019 Results | Kabisuryangar Vidhan Sabha MLA Result". www.business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 28 January 2021.
  4. "Niranjan Pujari is new Odisha assembly speaker". Hindustan Times (in ஆங்கிலம்). 26 May 2014. பார்க்கப்பட்ட நாள் 28 January 2021.
  5. "10-time Odisha MLA V Sugnana Kumari Deo Dies at 87". 10 February 2024. https://www.news18.com/india/10-time-odisha-mla-v-sugnana-kumari-deo-dies-at-87-8773635.html. பார்த்த நாள்: 10 February 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சுக்ஞான_குமாரி_தியோ&oldid=3897132" இலிருந்து மீள்விக்கப்பட்டது