உள்ளடக்கத்துக்குச் செல்

வி. எசு. நடராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்

வி. எசு. நடராஜன்
9வது தலைவர் பாரத ஸ்டேட் வங்கி[1]
பதவியில்
20 திசம்பர் 1982 – 30 சனவரி 1983
முன்னையவர்பி. சி. டி. நம்பியார்
பின்னவர்ஆர். பி. கோயல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1923
சென்னை, சென்னை மாகாணம், இந்தியா (தற்பொழுது, சென்னை, தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு9 சனவரி 2013(2013-01-09) (அகவை 89–90)
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பிள்ளைகள்3

வி. எசு. நடராஜன் (V. S. Natrajan) (1923-9 சனவரி 2013) ஓர் இந்தியத் தொழில்முறை வங்கியாளர் ஆவார். இவர் பாரத ஸ்டேட் வங்கியின் 9ஆவது தலைவராகப் பணியாற்றினார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நடராஜன் தனது 90ஆவது பிறந்தநாளுக்குச் சில நாட்களுக்கு முன்பு, சனவரி 9,2013 அன்று சென்னை உள்ள போட் கிளப் சாலையில் உள்ள தனது வீட்டில் காலமானார். இரண்டு மகள்கள், ஒரு மகன், நான்கு பேரக்குழந்தைகள் மற்றும் இரண்டு டஜன் பெரிய பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்தார் நடராஜன்.[3][4]

தொழில்[தொகு]

1943ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கியில் தகுதிகாண் அதிகாரியாகச் சேர்ந்த இவர், பல பதவிகளில் பணியாற்றினார். கேரளா தலசேரி கிளையின் தலைமை மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[5][6] இவர் 20 திசம்பர் 1982 முதல் 30 சனவரி 1983 வரை பாரத ஸ்டேட் வங்கியின் ஒன்பதாவது தலைவராகப் பணியாற்றினார்.[2][5] 1983-இல் ஓய்வு பெற்ற பிறகு, இவருக்குப் பிறகு ஆர். பி. கோயல் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1][2] 1983ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர் இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் வாழ்நாள் உறுப்பினர் ஆனார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "A Question of Leadership" (PDF). hemindrahazari.com. 3 Feb 2000. பார்க்கப்பட்ட நாள் 6 Jun 2021 – via STATE BANK OF INDIA.
  2. 2.0 2.1 2.2 ""State Bank of India- Story of the Largest Bank in India"". edifying.in. 27 May 2021. பார்க்கப்பட்ட நாள் 6 Jun 2021 – via Edifying.
  3. "Former SBI Chairman Natarajan passes away". thehindubusinessline.com. 9 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 6 Jun 2021 – via Business Line.
  4. "Former Chairman of SBI Natarajan passes away". rupeetimes.com. 10 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 6 Jun 2021 – via Rupee Times.
  5. 5.0 5.1 "Former SBI Chairman Natarajan passes away". @businessline.
  6. "SBI Thalassery turns 140 today". Deccan Chronicle. 29 January 2018.
  7. "Top Stories". www.iibf.org.in. பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எசு._நடராஜன்&oldid=4041757" இலிருந்து மீள்விக்கப்பட்டது