வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர்
விஷ்ணாம்பேட்டை ராமச்சந்திர தீட்சிதர் | |
---|---|
பிறப்பு | விஷ்ணாம்பேட்டை, மதராசு மாகாணம் | ஏப்ரல் 16, 1896
இறப்பு | நவம்பர் 24, 1953 சென்னை, இந்தியா | (அகவை 57)
பணி | வரலாற்றாய்வாளர், பேராசிரியர் |
ராமச்சந்திர தீட்சிதர் (Vishnampet R. Ramachandra Dikshitar) (ஏப்ரல் 16, 1896 - நவம்பர் 24, 1953) தமிழ்நாட்டில் பிறந்த இந்தியவியலாளரும் திராவிடவியலாளரும் ஆவார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு, தொல்லியல் பிரிவுகளுக்கு பேராசிரியராக இருந்தார்.
இளமைப் பருவம்
[தொகு]இவர் மதராசு மாகாணத்தின் விஷ்ணாம்பேட்டையில் பிராமணத் தம்பதிகளுக்குப் பிறந்தார். [1] திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சிவசாமி ஐயர் பள்ளியிலும் இளநிலை வரலாறு பட்டப்படிப்பை திருச்சிராப்பள்ளியின் புனித யோசேப்பு கல்லூரியிலும் பயின்றார். மேல்நிலைப் பட்டத்தையும் பெற்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
கல்வியும் பணியும்
[தொகு]இவர் புனித யோசேப்பு கல்லூரியிலேயே விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1928 ஆம் ஆண்டில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு, தொல்லியல் துறைகளுக்குப் பேராசிரியரானார். இவர் இந்திய வரலாற்றினை, குறிப்பாக தமிழ் வரலாற்றினை நன்கு அறிந்திருந்தார். சமற்கிருதத்தைக் கற்றுத் தேர்ந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Times of India Directory and Year Book, Including Who's who. Bennett, Coleman and Co. 1951. p. 747.