விவேக் பிரசாத்
தனித் தகவல் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 25 பெப்ரவரி 2000 இட்டார்சி, ஓசங்காபாத், மத்தியப் பிரதேசம், இந்தியா[1] | ||||||||||||||||||||||||||||||
விளையாடுமிடம் | நடுக்களம் | ||||||||||||||||||||||||||||||
தேசிய அணி | |||||||||||||||||||||||||||||||
2017–முதல் | இந்திய 21 வயதுக்குக் கீழ் | 6 | (2) | ||||||||||||||||||||||||||||
2018–முதல் | இந்தியா | 58 | (15) | ||||||||||||||||||||||||||||
பதக்க சாதனை
| |||||||||||||||||||||||||||||||
Last updated on: 10 பிப்ரவரி 2020 |
விவேக் சாகர் பிரசாத் (Vivek Sagar Prasad) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய அணிக்கு நடுக்கள வீரராக விவேக் விளையாடி வருகிறார். டோக்கியோ 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் இவர் இடம்பெற்றுள்ளார்.[2] [3]
2018 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் 17 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 22 நாட்கள் என்ற வயதுடன் இந்தியாவுக்காக அறிமுகமான இரண்டாவது இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 2019 வளைகோல் பந்தாட்ட நட்சத்திர விருதுகள் நிகழ்ச்சியில் விவேக் ஆண்டின் சிறந்த வளைகோல் பந்தாட்ட எழுச்சி நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டார்.[4]
பன்னாட்டு வாய்ப்புகள்
[தொகு]ஆத்திரேலியாவுக்கு எதிரான 2018 ஆம் ஆண்ட்டு வெற்றியாளர் கோப்பை இறுதிப் போட்டியில் விவேக் இந்தியாவுக்கு ஒரு முக்கியமான கோல் அடித்து ஆத்திரேலியாவுடன் சமநிலை எட்ட உதவினார். ஆனாலும் பெனால்டி உதைகளில் இந்தியா தோல்வியடைந்தது. [5] புவனேசுவரில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு வளைகோல் பந்தாட்டத் தொடர் இறுதிப் போட்டியில், விவேக் போட்டிகளில் சிறந்த இளம் வீரராக தேர்வு செய்யப்பட்டார். [6] டிசம்பர் 2019 ஆம் ஆண்டின் வளைகோல் பந்தாட்ட எழுச்சி நட்சத்திரம் என்ற விருதுக்கு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[7] 34.5 சதவீத வாக்குகளைப் பெற்று விருதை வென்ற விவேக், இவ்விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jr hockey team captain's village doesn't have a road". The Times of India. 4 November 2017. https://timesofindia.indiatimes.com/city/bhopal/jr-hockey-team-captains-village-doesnt-have-a-road/articleshow/61506846.cms.
- ↑ Sen, Debayan. "Teenager Vivek Sagar Prasad on the cusp of Indian history". ESPN.in. http://www.espn.in/field-hockey/story/_/id/22002877/teenager-vivek-sagar-prasad-cusp-indian-history. பார்த்த நாள்: 11 April 2018.
- ↑ Vasavda, Mihir. "Coached by Dhyan Chand's son, hockey prodigy Vivek Sagar Prasad set to fill Sardar Singh's big shoes". The Indian Express. http://indianexpress.com/article/sports/commonwealth-games/coached-by-dhyan-chands-son-hockey-prodigy-set-to-fill-sardar-singhs-big-shoes-5101729/. பார்த்த நாள்: 11 April 2018.
- ↑ 4.0 4.1 "Vivek Sagar Prasad named 2019 FIH Men's Rising Star of the Year". timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 February 2020.
- ↑ "Champions Trophy: India lose to Australia in final". 4 July 2018. http://www.espn.in/field-hockey/story/_/id/23886010.
- ↑ "Home Turf Success for India". fihseriesfinals.com. International Hockey Federation. 15 June 2019. Archived from the original on 21 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 15 June 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Manpreet Singh nominated for FIH Player of the Year award". timesofindia.indiatimes.com. Lausanne: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 December 2019. பார்க்கப்பட்ட நாள் 6 December 2019.