விளாச்சேரி ஐயப்பன் திருக்கோயில், மதுரை
விளாச்சேரி ஐயப்பன் திருக்கோயில், மதுரை | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°53′57″N 78°04′20″E / 9.8991°N 78.0722°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ் நாடு |
மாவட்டம்: | மதுரை மாவட்டம் |
அமைவு: | விளாச்சேரி, மதுரை |
ஏற்றம்: | 188 m (617 அடி) |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஐயப்பன் |
சிறப்பு திருவிழாக்கள்: | பங்குனி உத்திரம் ஆனி உத்திரம் (ஐயப்பன் பிரதிட்டை செய்யப்பட்ட நாள்), மார்கழி ஆறாட்டு விழா, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை விஷு, தை முதல் நாள் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரள பாரம்பரிய பாணி |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 50 ஆண்டுகளுக்கு முன் |
அமைத்தவர்: | மதுரை ஐயப்பா சேவா சங்கத்தினர் |
விளாச்சேரி ஐயப்பன் திருக்கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் விளாச்சேரி நகரில் அமைந்துள்ளது.[1] சிருங்கேரி ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளின் நல்லாசியுடன், மதுரை ஐயப்பா சேவா சங்கத்தினரால் உருவாக்கப்பட்டுள்ளது இக்கோயில்.[2]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 188 மீட்டர் உயரத்தில், 9°53′57″N 78°04′20″E / 9.8991°N 78.0722°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு விளாச்சேரி ஐயப்பன் கோயில் அமையப் பெற்றுள்ளது.
திருவிழா
[தொகு]பங்குனி உத்திரம், ஆனி உத்திரம் (ஐயப்பன் பிரதிட்டை செய்யப்பட்ட நாள்), மார்கழி ஆறாட்டு விழா, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை விஷு மற்றும் தை முதல் நாள் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
திறக்கும் நேரம்
[தொகு]காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.
பிரார்த்தனை
[தொகு]கல்வியில் சிறந்து விளங்க, திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற பக்தர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
சிறப்பு
[தொகு]ஐயப்பன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Aiyappan Temple : Aiyappan Aiyappan Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.
- ↑ "வியாபாரத்தில் வெற்றி தரும் விளாச்சேரி ஐயப்பன்!". Hindu Tamil Thisai. 2018-01-17. பார்க்கப்பட்ட நாள் 2023-08-21.