உள்ளடக்கத்துக்குச் செல்

விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருசியாவின் மாசுகோவில் ஓடும் இலாசுடோகா நகர விரைவு இரயில்
சிவப்பு குறிகள் உள்ளூர்  ரயில்களையும், நீல குறிகள் விரைவு ரயில்களையும் குறிக்கும்.
அமெரிக்காவில் பந்து சமிக்ஞை (1830)

விரைவுத் தொடருந்து (Express train) என்பது ஒரு வகை பயணிகள் இரயிலாகும். இது அதன் புறப்படுமிடம் மற்றும் சேருமிட நிலையங்களுக்கு இடையில் சில அல்லது நிறுத்தங்களே இல்லாமல் பயணிக்கும். பொதுவாக முக்கிய இடங்களில் மட்டும் நின்று செல்லும். பொதுவாக உள்ளூர் இரயில்களை விட வேகமான சேவையை வழங்கும். விரைவுத் தொடருந்துகள் உள்ளூர் தொடருந்துகளோடு ஒப்பிடுகையில் குறைவான நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்கின்றன. சில நேரங்களில், உள்ளூர் தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு விரைவுத் தொடருந்து சென்ற பின் உள்ளூர் தொடருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன.[1]<[2][3] சில நேரங்களில் இவை விரைவு தொடருந்துகள் அல்லது அதி விரைவு தொடருந்துகள் என குறிப்பிடப்படுகின்றன. கோவை விரைவுவண்டி இதற்கு உதாரணமாகும்.[4]

  பல அதிவேக இரயில் சேவைகள் விரைவுத் தொடருந்து என்று இயக்கப்பட்டாலும் விரைவுத் தொடருந்து என விவரிக்கப்படும் அனைத்து இரயில்களும் மற்ற சேவைகளை விட மிக வேகமாக பயணிப்பதில்லை. 19 ஆம் நூற்றாண்டில் ஐக்கிய இராச்சியத்தில் ஓடிய இரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு 40 மைல்கள் (64 கிமீ/ம) பயண வேகம் இருந்தால் அவை விரைவு இரயில்கள் என அழைக்கப்பட்டன.[5][6]

விரைவுத் தொடருந்துகளில் சில சமயங்களில் மற்ற வழித்தடங்களை விட அதிக கட்டணங்கள் இருக்கும். மேலும் இரயில் பயணச்சலுகை வைத்திருப்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இவற்றில் முதல் வகுப்பு பயணச்சீட்டு மட்டும் கிடைக்கலாம். சில விரைவு வண்டி வழித்தடங்கள், உள்ளூர் இரயில் சேவை பாதையின் முனைகளுக்கு அருகில் மட்டும் நிலையங்களில் நிறுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, அந்த குறிப்பிட்ட நிலையங்களுக்கு கூடுதல் உள்ளூர் சேவை இல்லாத இடங்களில் இவ்வாறு நிறுத்தப்படுவதுண்டு. இரவுநேரம் போன்ற இணையான உள்ளூர் சேவையை நியாயப்படுத்தும் அளவுக்கு பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இல்லாத நேரங்களில் விரைவு இரயில் வழித்தடங்களும் உள்ளூர் இரயில் ஆக நிறுத்தப்படுவதுமுண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Express train". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் May 7, 2019.
  2. the editorial staff of the National Reporter System, ed. (1914). Judicial and Statutory Definitions of Words and Phrases - Second Series. St. Paul, MN: West Publishing Co. p. 791 – via Google Books.
  3. "How to Ride the Subway". MTA.info. பார்க்கப்பட்ட நாள் May 7, 2019.
  4. "Kovai Express". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
  5. Foxwell, E. (1884). English Express Trains. London: Edward Stanford. p. 60 – via Internet Archive. express train definition.
  6. Foxwell, E.; Farrer, T.C. (1889). Express Trains, English and Foreign. London: Smith, Elder & Co. p. 93 – via Internet Archive. express train definition.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரைவுத்_தொடருந்து&oldid=4016309" இலிருந்து மீள்விக்கப்பட்டது