விரெக்சி இலியொனார்டு
விரெக்சி இலியொனார்டு (Wrexie Leonard) (செப்டம்பர் 15, 1867 - நவம்பர் 9, 1937) அல்லது உலூயிசு இலியொனார்டு எனப்படும் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பெர்சிவால் உலோவலின் கீழ் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் செவ்வாய் பற்றிய தனது நோக்கீடுகளை வெளியிட்டுள்ளார். வெள்ளியின் குழிப்பள்ளம் ஒன்று இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
வாழ்க்கை
[தொகு]விரெக்சி உலூயிசு இலியோனார்டு பெனிசில்வேனியாவில் உள்ள திராயில் வளர்ந்தார். பின்னர் போசுடானுக்கு இடம்பெயர்ந்தார்.[1] இவர் பெசிவால் உலோவல் எனும் வானியலாளருக்கு 1883 இல் இருந்து இருபது ஆண்டுகளாக அவர் இறக்கும்வரை தனிச் செயலராகவும் உதவியாளராகவும் இருந்துள்ளார்.[1][2] இவர் 1895 இல் உலோவலுடன் ஒரு புதிய வான்காணகத்துக்கு இடம் தேர்வு செய்ய ஆப்பிரிக்கா சென்றுள்ளார். ஆனால் அது பிறகு அரிசோனாவில் உள்ள பிளாகுசுட்டாபில் நிறுவப்பட்டது.[1][3]
இவர் உலோவலின் கடிதத் தொடர்பைக் கவனித்துகொண்டார்; கட்டுரைகளையும் உரைகளையும் பதிப்பித்தார்; அவருடன் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளார்.[1] உலோவல் இல்லாதபோது இவர் உலோவல் வான்காணகத்துக்குப் பொறுப்பு வகித்துள்ளார்.[1] அரிசோனா வான்காணகம் 1894 இல் நிறுவப்பட்ட பிறகு அங்கு வானியல் நோக்கீடுகளை மேற்கொண்டார். அறிவன் (புதன்), வெள்ளி, வியாழன் ஆகிய கோள்களின் ஆய்வை மேற்கொண்டார்.[3] வான்காணகப் பதிவேடுகளில் தொடக்க ஆண்டுகளில் அடிக்கடி நோக்கீடுகளில் ஈடுபட்டதையும் இவர் வரைந்த செவ்வாய், வெள்ளியின் உருவரைகளையும் காணமுடிகிறது.[3] மற்ற மகளிர் இயல்பாக பயன்படுத்த தொடங்குவதற்கு அரைநூற்றாண்டுக்கு முன்பே இவர் முதலில் பெரிய தொலைநோக்கியைப் பயன்படுத்தியமை புலனாகிறது.[3][4]
இவர் மெக்சிகோ நகருக்கு புறத்தே உள்ள தாக்குபாயாவுக்கு உலோவலுடன் 1896 இல் கப்பல்வழி பெரிய கிளார்க் ஒளிவிலகல் வகை தொலைநோக்கி அனுப்பப்பட்டபோது சென்றார். இது பின்னர் இவர் நோக்கீடு செய்த செவ்வாய் எதிர்வுகளின் பதிவுகளில் பலவற்றில் ஓரிடம் ஆகும்.[5] இவர் மக்கள் வானியல் இதழில் 1907 இல் செவ்வாய் வரைபடங்களைக் குறிப்புகளுடன் செவ்வாய் எதிர்வுகள் அமைந்த சில ஆண்டுகளில் (1901, 1903, 1905) அதன் பனிக்கவிப்புகள், உலோவல் கால்வாய்கள் பற்றி எழுதி வெளியிட்டார்.[3]
இவர் 1904 இல் பிரெஞ்சு வானியல் கழகத்தில் தேர்வு செய்யப்பட்டார். இது அப்போது இவருக்கு வழங்கியமை இவருக்கு அளிக்கப்பட்ட சிறந்த மதிப்பாகும்.[3] இவர் சோசியேடாட் ஆஸ்ட்ரோனாமிகோ டி மெக்சிகோ எனற சங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினரும் ஆவார்.[6]
இவர் 1916 இல் உலோவல் இறந்ததும், மீண்டும் கிழக்காக இடம் மாறினார்.[1] ஐந்தாண்டுகளுக்குப் பிறகு உலோவலின் நினைவுகளை, பெர்சிவல் உலோவல்: பின்னும் ஒளிவீசும் புகழ் என்ற நூலாக வெளியிட்டார்.[7] இதில் பல ஆண்டுகளாக இவருக்கும் உலோவலுக்கும் நடந்த கடித்த் தொடர்புகளின் சுருக்க்க் குறிப்புகளும் அடங்கியுள்ளன.[8] இவர் 1929 பொருளியல் சரிவின்போது பங்குச் சந்தையில் தன் பணத்தையெல்லம் இழந்த பிறகு, மசாசூசட் இராக்சுபரியில் இருந்த முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ந்து வாழலானர்.[1]
தகைமை
[தொகு]31.7 கிமீ அகல வெள்ளிக் கோளின் இலியொனார்டு குழிப்பள்ளம் (அகலாங்கு −73.8, நெட்டாங்கு 185.2) இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[3]
யான் மில்சப்சுவின் 2014 ஆம் ஆண்டு புதினமாகிய செவ்வாயில் வெள்ளி பாத்திரங்களில் ஒன்றாகிய உலூலு இவரது இயல்பை வைத்து புனையப்பட்டுள்ளது.[9]
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Putnam, William Lowell. The Explorers of Mars Hill. Light Technology Publishing, 1994.
- ↑ "Obituary." Boston Evening Transcript, Nov. 12, 1937.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Millsapps, Jan. "Wrexie Louise Leonard: Take a Letter, Take a Look". The Lowell Observer, no .80, Fall 2008.
- ↑ Millsapps, Jan. "Celebrating Women’s History Month — On Mars". Huffpost Science blog.
- ↑ Sheehan, William, and Christopher J. Conselice. "Galactic Encounters: Our Majestic and Evolving Star-System, From the Big Bang to Time’s End." Physics Today, vol. 68, no. 6 (2015), p. 54.
- ↑ Plutovian. "Wrexie and Percy". Finding Pluto blog.
- ↑ Goodman, Susan. Republic of Words: The Atlantic Monthly and Its Writers, 1857–1925. UPNE, 2011, p. 178.
- ↑ Leonard, Louise. Percival Lowell: An Afterglow. RG Badger, 1921, pp. 52–-.
- ↑ Millsapps, Jan. "Wrexie, Ada, let’s celebrate!". Venus on Mars blog, March 24, 2010.