உள்ளடக்கத்துக்குச் செல்

விருமாண்டி தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


விருமாண்டி தேவர் என்பவர், இந்தியாவில் 60,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனிதர்களின் எம் 130 மரபணுவை கொண்ட ஆதி மனிதர் என்று விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டவர்.[1]

வரலாறு

[தொகு]

2005 ஆம் ஆண்டிலிருந்து மரபியல் நிபுணர் ஸ்பென்ஸர் வெல்ஸ் (Spencer Wells[தொடர்பிழந்த இணைப்பு]) அவர்கள் ஒத்த மரபணுக்களைக் கொண்ட மனிதர்களை கண்டுபிடிப்பதில் ஈடுப்பட்டு வருகிறார். 70,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் மரபணுவை தேடி தன் ஆய்வை தொடங்கினார். கடலோர பகுதிகளின் வழியாகத்தான் முதன் முறையாக மக்கள் இடப் பெயர்ச்சி நடந்தது என்பதைக் கண்டுபிடித்துக் கூறிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவின் தலைவர் பிச்சப்பன் அவர்கள், இந்தியாவில் இந்த ஆய்வில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.[2]

ஆக்ஸ்போர்ட் ஆய்வு பல்கலைக்கழகத்துடன் இணைந்து, உலகில் உள்ள பல லட்சம் மனிதர்களிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகளை எடுத்து, இந்தக் குழு ஆய்வு செய்து வந்துள்ளனர்.[3]

இந்த ஆய்வில், தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், ஜோதிமாணிக்கம் கிராமத்தில், கள்ளர் மரபை சேர்ந்த ஆண்டிதேவர், அமராவதி அம்மாள் அவர்களின் மகன் விருமாண்டித் தேவரின் ஜீன், கிட்டத்தட்ட 70,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய ஆப்பிரிக்க மனிதர்களின் ஜீன்களோடு ஒத்துப் போவதாக இக்குழுவினர் கண்டுபிடித்துள்ளார்கள். இவரது ஜீன் எம் 130 ரக ஜீனாகும். இதுதான் இந்தியாவில் தற்போதைய தேதியில் மிகவும் பழமையான ஜீன் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவிலும் எம் 130 ரக ஜீன் உடையவர்கள் வனப்பகுதியில் இப்போதும் வாழ்ந்து வருவதாக இந்த ஆய்வு கூறுகிறது.[4]

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவில் குடியேறிய முதல் மனிதனின் வாரிசு என்ற பெருமையைப் பெறுகிறார் விருமாண்டி தேவர்.[5][6][7]

விருமாண்டி தேவர், சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டராக வேலை பார்த்து வருகிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்சிஐஎஸ்சி முதுகலையும், எம்.சி.ஏ.யும் தேர்ச்சி பெற்று ஆய்வுப் படிப்பினை நிறைவு செய்ய இருக்கிறார். இவரது மனைவி செல்வி என்பவராவார்.[8][9]

மேற்கோள்

[தொகு]
  1. "விருமாண்டி ஒரு விவாத மனிதன்". தினமலர். 2013-07-17. https://m.dinamalar.com/weeklydetail.php?id=16289. பார்த்த நாள்: 2020-11-20. 
  2. The Landmark DNA Quest to Decipher Our Distant Past. Notion Press. 2006. p. 415. {{cite book}}: Unknown parameter |Author= ignored (|author= suggested) (help)
  3. "Journey of a man". இந்தியன் எக்சுபிரசு. 2006-06-17. http://archive.indianexpress.com/news/journey-of-a-man/6685/. 
  4. History of Medical and Spiritual Sciences of Siddhas of Tamil Nadu. Notion Press. 2016. p. 415. {{cite book}}: Unknown parameter |Author= ignored (|author= suggested) (help)
  5. "Geneticists identify first Indians". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2008-04-02. https://www.hindustantimes.com/india/geneticists-identify-first-indians/story-INqikMSk5JRjGsICqHFzMN.html. 
  6. "Evidence of first Indian in TN". zeenews. 2008-04-16. https://zeenews.india.com/home/evidence-of-first-indian-in-tn_437069.html. 
  7. "In our blood". தி பயனியர். 2017-02-19. https://www.dailypioneer.com/2017/sunday-edition/in-our-blood.html. 
  8. "ஆதி தமிழர்". Dailyhunt. 2018-03-16. https://m.dailyhunt.in/news/india/tamil/dinasuvadu-epaper-dinasuva/aathith+tamizharkal+aappirikkavil+irunthu+vanthu+kudiyerinarkala+appo+tamizharkal+vantherikala+-newsid-83762764?mode=pwa. பார்த்த நாள்: 2020-11-20. 
  9. "விருமாண்டி தேவர்". The Hindu. 2014-07-29. https://tamil.oneindia.com/news/india/evidence-first-indian-settlers-found-tamil-nadu-207186.html. பார்த்த நாள்: 2020-11-20. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருமாண்டி_தேவர்&oldid=3593927" இலிருந்து மீள்விக்கப்பட்டது