உள்ளடக்கத்துக்குச் செல்

வியத்செசுலாவ் முகனோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{name}}}
பிறப்பு {{{birth_date}}}
பரிசுகள்

வியாசெசுலாவ் பியோதிரோவிச் முகனோவ் (Viatcheslav Fyodorovich Mukhanov) (உருசியம்: Вячесла́в Фёдорович Муха́нов) (பிறப்பு: அக்டோபர் 2,1956) ஒரு சோவியத் / உருசிய, செருமானயக் கோட்பாட்டு இயற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். புடவிக் கட்டமைப்பின் குவையத் தோற்றம் கோட்பாட்டிற்காக அவர் மிகவும் பெயர்பெற்றவர். 1980 - 81 இல் மாஸ்கோவில் உள்ள லெபெடேவ் இயற்பியல் நிறுவனத்தில் கென்னடி சிபிசோவுடன் பணிபுரிந்த அவர், தொடக்கநிலைக் குவைய அலைவுகளிலிருந்து தோன்றிய புடவி சமச்சீரற்ற தன்மைகளின் கதிர்நிரலை முன்னறிவித்தார். அண்ட நுண்ணலைப் பின்னணி கதிர்வீச்சின் வெப்பநிலை அலைவுகளின் பல செய்முறைகள் இவரது கோட்பாட்டு கணிப்புடன் சிறந்த உடன்பாட்டைக் கொண்டுள்ளன. இதனால் பால்வெளிகளும் அவற்றின் கொத்துக்களும் தொடக்கநிலைக் குவைய அலைவுகளிலிருந்து தோன்றின என்பதை உறுதிப்படுத்துகின்றன. பின்னர் முகனோவ் 1981 இல் கென்னடி சிபிசோவுடன் பெற்ற முடிவுகள் பொதுவான தோற்றம் கொண்டவை என்பதை நிறுவினார். மேலும் அவர் பொதுவான நிலையான குவைய அண்டவியல் சிற்றலைவுக் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார்.

2006 முதல் முகனோவ் அண்டவியல், வானியற்பியலுக்கான இயற்பியல் இதழின் அறிவியல் இயக்குநராக உள்ளார்.

விருதுகள்

[தொகு]
  • சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் கல்விக்கழகப் பொற்பதக்கம் (1988)[1]
  • ஆஸ்கர் கிளீன் பதக்கம், இசுடாக்கோல்ம் பல்கலைக்கழகம், சுவீடன் (2006)
  • தோமல்லா பரிசு - சுவிட்சர்லாந்து (2009)
  • பிளைசு பாசுக்கல் கட்டில், ENS பாரிசு, பிரான்சு (2011)
  • அமால்டி பதக்கம் (2012)
  • அண்டவியல் துறையில் குரூபர் பரிசு (2013)
  • பிரெட்ரிக் வில்கெல்ம் ஜோசப் வான் செல்லிங் - பிரீசு பவேரிய அறிவியல், மனிதநேயக் கல்விக்கழகம், செருமனி (2014)
  • மேக்சு பிளாங்க் பதக்கம் (2015)
  • பிபிவிஏ அறக்கட்டளை அறிவு எல்லைகள் விருது (2015)[2]
  • டிராக் பதக்கம் (ஐ. சி. டி. பி.) (2019)[3]

வெளியீடுகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hawking and Mukhanov win the BBVA Foundation Frontiers of Knowledge Award for discovering that the galaxies were born from quantum fluctuations". 19 January 2016.
  2. "Hawking and Mukhanov win the BBVA Foundation Frontiers of Knowledge Award for discovering that the galaxies were born from quantum fluctuations". 19 January 2016.
  3. Dirac Medal 2019, ICTP
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியத்செசுலாவ்_முகனோவ்&oldid=3782029" இலிருந்து மீள்விக்கப்பட்டது