உள்ளடக்கத்துக்குச் செல்

வினைலேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வினைலேற்றம் (Vinylation) என்பது ஒரு வினைல் குழுவை (CH2=CH−) ஓர் அடி மூலக்கூறுடன் இணைக்கும் கரிம வேதியியல் செயல்முறையாகும். பல கரிம சேர்மங்கள் வினைல் குழுக்களைக் கொண்டிருக்கின்றன. எனவே இச்செயல்முறை குறிப்பிடத்தக்க ஆர்வத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக வினையின் நோக்கம் பதிலீட்டு வினைல் குழுக்களை உள்ளடக்கியதாகும். வினைல் குழுவின் மூலத்தைப் பொறுத்து வினைலேற்ற வினைகளை வகைப்படுத்தலாம்.

அணுக்கருக்கவர் வினைல் வினையாக்கிகள்[தொகு]

வினைல்லித்தியம் புரோமைடும் வினைல்மக்னீசியம் புரோமைடும் CH2=CH− தொகுதிக்கு மூலங்களாகும். இவை கீட்டோன் மற்றும் ஆல்டிகைடுகளுடன்[1] சேர்க்கப்படுகின்றன. வினைல் எதிர்மின் அயனிகளுக்குச் சமமான மூலங்களாக வினைல்சிலாக்சேன்[2] மற்றும் வினைல் போரேன்களையும் [3]பயன்படுத்தலாம். இத்தகைய வினைகளுக்கு பலேடியம் போன்ற வினையூக்கிகள் அவசியமாகும்.

ஆல்க்கீன்களுடன் வினைலேற்றம்[தொகு]

எக்கு வினை இணைகளான ஒரு நிறைவுறா ஆலைடும் ஓர் ஆல்க்கீனும் காரத்தின் முன்னிலையிலும் பலேடியம் வினையூக்கியின் உதவியாலும் வினை புரிந்து பதிலீடு செய்யப்பட்ட ஆல்க்கீன்களை உருவாக்குகிறது. இது ஆல்க்கீன்களை மாற்றுவதற்கான ஒரு வழியாகும்.[4][5]

நாப்புரோக்சன் தயாரிக்கப் பயன்படும் எக்கு வினை

ஐதரோவினைலேற்ற வினையில் எத்திலீன் ஆல்க்கீன் இரட்டைப் பிணைப்பை குறுக்காகச் சேர்க்கிறது.

CH2=CHR + CH2=CH2 → CH3−CHR−CH=CH2

இந்த வகையான வினைக்கு ஓர் உலோக வினையூக்கி தேவைப்படுகிறது. கொள்கையளவில், எத்திலீனைத் தவிர வேறு ஆல்க்கீன்கள் இங்கு பயன்படுத்தப்படலாம்.[6]

ஐதரோவினைலேற்ற வினையின் விகிதாச்சார வினை பதிப்பில், அணுக்கருகவரிகள் மின்னணு கவர் தாண்டல் உலோக அணைவுச் சேர்மத்துடன் சேர்த்து கார்பன் - கார்பன் பிணைப்பை உருவாக்குகின்றன. இதன் விளைவாக வரும் உலோக ஆல்க்கைல் சேர்மம் பீட்டா-நீரேற்று நீக்கத்திற்கு உட்பட்டு, வினைலேற்ற விளைபொருளை விடுவிக்கிறது.[7]

அசிட்டிலீனுடன் வினைலேற்றம்[தொகு]

முதலில் வால்டர் ரெப்பே உருவாக்கிய முறையில், அசிட்டிலீன் பல்வேறு உலோகம் அல்லது காரம் வினையூக்கிய வினையில் பங்கேற்று வினைல் வழிப்பெறுதிகளைக் கொடுத்தது.[8][9] ஆல்ககால்கள், தயோல்கள் மற்றும் இரண்டாம் நிலை அமீன்கள் ஆகியவற்றை அசிட்டிலீனுடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் முறையே வினைல் ஈதர்கள், டைவினைல் சல்பைடுகள் , வினைல் அமீன்கள் உருவாகின்றன.[10]

உலோக வினையூக்கிகளின் முன்னிலையில், கார்பன் மோனாக்சைடு மற்றும் அசிட்டிலீன் ஆகியவை வினைபுரிந்து அக்ரிலிக் அமிலம் அல்லது அக்ரிலிக் எசுத்தர்களைக் கொடுக்கின்றன. நிகர வினையானது கார்பன் மோனாக்சைடின் வினைலேற்ற வினையாகும்:[11]

வினைல் அசிட்டேட்டு[தொகு]

வினைல் எசுத்தர்களை தயாரிப்பதற்கு பொதுவாக மறைமுக முறைகள் தேவைப்படுகின்றன. ஏனெனில் வினைல் ஆல்ககால் ஒரு பொருத்தமான வினையாக்கி இல்லை. தொழில்துறை அளவில் ஏராளமாகக் கிடைக்கும் வினைல் அசிடேட்டு, மற்ற வினைல் எசுத்தர்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. இச்செயல்முறை சில சமயங்களில் மாற்றுவினைலேற்றம் என அழைக்கப்படுகிறது.[12] வினைல் அசிட்டேட்டின் உயர் எசுத்தர்கள் வினைல் பார்மேட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

மாற்றாக, வினைல் எசுத்தர்கள் இரிடியம்-வினையூக்கி முன்னிலையில் குறிப்பாக பரவலாகக் கிடைக்கும் வினைல் அசிடேட்டை மாற்று எசுத்தராக்கல் வினை மூலம் வினைல் ஈதர்களை ஆல்ககால்களில் இருந்து தயாரிக்கலாம்:[13]

ROH + CH2=CHOAc → ROCH=CH2 + HOAc

மேற்கோள்கள்[தொகு]

  1. Hamilton, James; Sarlah, David; Carreira, Erick M. (2015). "Iridium-Catalyzed Enantioselective Allylic Vinylation with Potassium Alkenyltrifluoroborates". Organic Syntheses 92: 1–12. doi:10.15227/orgsyn.092.0001. 
  2. Scott E. Denmark, Christopher R. Butler (2009). "Vinylation with Inexpensive Silicon-Based Reagents: Preparation of 3-Vinylquinoline and 4-Vinylbenzophenone". Organic Syntheses 86: 274. doi:10.15227/orgsyn.086.0274. 
  3. Donal F. O'Shea (2012). "Discussion Addendum for: Suzuki-Miyaura Cross-Coupling: Preparation of 2'-Vinylacetanilide". Organic Syntheses 89: 202. doi:10.15227/orgsyn.089.0202. 
  4. Heck, R. F. (1982). "Palladium-catalyzed vinylation of organic halides". Organic Reactions. Vol. 27. pp. 345–390. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/0471264180.or027.02. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-26418-7. {{cite book}}: |journal= ignored (help)
  5. Irina Beletskaya; Cheprakov, A. V. (2000). "The Heck Reaction as a Sharpening Stone of Palladium Catalysis". Chem. Rev. 100 (8): 3009–3066. doi:10.1021/cr9903048. பப்மெட்:11749313. 
  6. Smith, C. R.; Zhang, A.; Mans, D. J.; RajanBabu, T. V.; Denmark, S. E.; Xie, M. (2008). "(R)-3-Methyl-3-Phenyl-1-Pentene Via Catalytic Asymmetric Hydrovinylation". Organic Syntheses 85: 248–266. doi:10.15227/orgsyn.085.0248. பப்மெட்:19672483. 
  7. Tony C. T. Chang, Myron Rosenblum, Nancy Simms (1988). "Vinylation of Enolates with a Vinyl Cation Equivalent: trans-3-Methyl-2-Vinylcyclohexanone". Organic Syntheses 66: 95. doi:10.15227/orgsyn.066.0095. 
  8. Reppe, Walter; Kutepow, N; Magin, A (1969). "Cyclization of Acetylenic Compounds". Angewandte Chemie International Edition in English 8 (10): 727–733. doi:10.1002/anie.196907271. 
  9. Trotuş, Ioan-Teodor; Zimmermann, Tobias; Schüth, Ferdi (14 November 2013). "Catalytic Reactions of Acetylene: A Feedstock for the Chemical Industry Revisited". Chemical Reviews 114 (3): 1761–1782. doi:10.1021/cr400357r. பப்மெட்:24228942. 
  10. Trotuş, Ioan-Teodor; Zimmermann, Tobias; Schüth, Ferdi (14 November 2013). "Catalytic Reactions of Acetylene: A Feedstock for the Chemical Industry Revisited". Chemical Reviews 114 (3): 1761–1782. doi:10.1021/cr400357r. பப்மெட்:24228942. 
  11. Takashi Ohara; Takahisa Sato; Noboru Shimizu; Günter Prescher; Helmut Schwind; Otto Weiberg; Klaus Marten; Helmut Greim (2003). "Acrylic Acid and Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry: 7. doi:10.1002/14356007.a01_161.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-527-30673-0. 
  12. Manchand, Percy S. (2001). "Vinyl Acetate". Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rv008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93623-5.
  13. Tomotaka Hirabayashi; Satoshi Sakaguchi; Yasutaka Ishii (2005). "Iridium-catalyzed Synthesis of Vinyl Ethers from Alcohols and Vinyl Acetate". Org. Synth. 82: 55. doi:10.15227/orgsyn.082.0055. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைலேற்றம்&oldid=4014901" இலிருந்து மீள்விக்கப்பட்டது