உள்ளடக்கத்துக்குச் செல்

வினிசியசு டி மோரேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினிசியசு டி மொரேசு
பாரிசில் வினிசியசு டி மோரேசு, 1970.
பாரிசில் வினிசியசு டி மோரேசு, 1970.
பிறப்புமார்க்கசு வினிசியசு டா குரூசு இ மெல்லோ மோரேசு
(1913-10-19)19 அக்டோபர் 1913
இரியோ டி செனீரோ, பிரேசில்
இறப்பு9 சூலை 1980(1980-07-09) (அகவை 66)
இரியோ டி செனீரோ, பிரேசில்
புனைபெயர்"ஓ பொயட்டினா"
தொழில்
தேசியம்பிரேசிலியர்
கல்வி நிலையம்இரியோ டி செனீரோ மாநிலப் பல்கலைக்கழகம்
இலக்கிய இயக்கம்நவீனவியம்

மார்க்கசு வினிசியசு டா குரூசு இ மெல்லோ மோரேசு(Marcus Vinicius da Cruz e Mello Moraes [1], அக்டோபர் 19, 1913 – சூலை 9, 1980), பரவலாக வினிசியசு டி மோரேசு[2] (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [viˈnisjus dʒi ˈmoɾajs]) பிரேசிலிய கவிஞரும், பாடலாசிரியரும், கட்டுரையாளரும் நாடகாசிரியரும் ஆவார். இவர் ஓ பொயட்டினா ("சிறு கவிஞர்") என்ற புனைபெயரில் தற்போது செவ்வியல் பாடல்களாக கருதப்படும் பல பாடல்களை எழுதியுள்ளார். பிரேசிலிய இசையின் முன்னோடி எனக் கருதப்படும் இவர் பல நாடகங்களையும் எழுதியுள்ளார். தேசிய தூதராகவும் பணியாற்றியுள்ளார். தனது பாணியில் போசா நோவா என்ற இசைவடிவத்தை அமைத்துள்ளார். இவர் இரியோ டி செனீரோவில் லிடியா குரூசு டி மோரேசுக்கும் குளோடோல்டோ பெரைரா டா சில்வா மோரேசிற்கும் மகனாகப் பிறந்தார்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-08-23.
  2. தற்போதைய சீர்திருத்தப்பட்ட போர்த்துக்கேய நெடுங்கணக்கின்படி இந்தப் பெயர் வினிசியசு டி மோரைசு என்று உச்சரிக்கப்படும்.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vinícius de Moraes
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினிசியசு_டி_மோரேசு&oldid=3571931" இலிருந்து மீள்விக்கப்பட்டது