உள்ளடக்கத்துக்குச் செல்

விதிர்நிலைக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியன், நீலவானப் பின்னணியில் வானவில் கொடி காற்றில் படபடத்தல்.

விதிர்நிலைக் கோட்பாடு (Queer theory) என்பது விதிர்நிலப் பயில்வுகள், மகளிர் பயில்வுகளில் இருந்து1990 களில் உருவாகிய ஓர் உய்யநிலைக் கோட்பாட்டுப் புலம் ஆகும். இலாரன் பெர்லான்ட், இலியோ பெர்சானி, யூடித் பட்லர், இலீ எடல்மன், யாக் கால்பெர்சுட்டாம்,[1] ஈவ் குசோத்சுகி செட்சுவிக் ஆகியோரது பணிகளால் உந்துதல் உற்று, விதிர்நிலைக் கோட்பாடு உருவாகியது. இது பாலின என்பது தற்புரிதலின் சாரப்பகுதியே எனும் பாலினத்துக்கான பெண்ணிய அறைகூவற் புரிதலில் இருந்தும் பாலியல் நடவடிக்கைகளும் பாலியல் அடையாளங்களும் சமூகப் புனைவுத் தன்மையே எனக் கருதும் இலெசுபிய, மகிழ்நர் பயில்வுகளில் இருந்தும் உருவாகியது.

மகிழ்நர்/இலெசுபியப் பயில்வுகள் புல வினவல் ஒத்தபாலின நடத்தையைச் சார்ந்த இயற்கை, செயற்கை நடத்தையில் தன் விதிர்நிலைக் கோட்பாடு கவனத்தைக் குவித்திடுகையில், விதிர்நிலைக் கோட்பாடு வரன்முறையான நடத்தையில் பொய்த்துபோகும் பாலியல் நடவடிக்கைகள் அல்லது அடையாளங்களை உள்ளடக்க தன் கவனத்தை விரிவுபடுத்துகிறது.

விதிர்நிலைக் கோட்பாடு எனும் சொற்றொடரை இத்தாலியப் பெண்ணியலாளரும் திரைப்படக் கோட்பாட்டாளருமான தெரசா தெ சாந்தா குரூசு கலிபோர்னியா பலகலைக்கழகத்தின் கருதரங்குக்காக 1990 இல் உருவாக்கினார். அந்தக் க்ருத்தரங்கத்தின் அடிப்படையில் வேறுபாடுகள்: பெண்ணியப் பண்பாட்டுப் பயில்வுகள் சுழலிதழ் எனும் சிறப்பிதழ் ஒன்றையும் பதிப்பித்து வெளியிட்டார்.[2]

சமூகக் கலப்புப்பாலுணர்வு நிலைப்புக்கு கலப்புப் பாலுணர்வு தோற்றமாகவும் அடிப்படையாகவும் நிலவும் சூழலில், விதிர்மைக் கருத்தினம் "பால், பாலினம், வேட்கை ஆகியவற்றுக்கு இடையில் நிலவும் பிணக்கங்களில்" கவனத்தைக் குவிக்கிறது..[3] விதிர்மை இருபாலினர், இலெசுபியர், மகிழ்நர் சார்ந்த கருப்பொருள்களோடு பின்னிப் பிணைந்துவர, அதன் பகுப்பாய்வுச் சட்டகம் பால்மாற்று உடையணிதல், ஊடுபாலினம், அதன் அடையாளங்கள் , பாலின மயக்கம், பாலின உருஹியாக்க அறுவை போன்ற தலைப்புகளையும் தன் கருப்பொருளில் உள்ளடக்குகிறது.. விதிர்நிலைக் கோட்பாடு தனியொருவரின் பாலுணர்வு வாய்ப்புள்ள அனைத்துப் பாலுணர்வுகளின் நெகழ்திற, கூறாக்க, இயங்குதிறத் திரட்சியாகும் என விளக்குகிறது; இது தனியொருவரின் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் வேறுபட்டு மாறலாம்.[4] இது நிலைத்த, ஒப்புறவுள்ள பால்பகுப்புகள், பாலினங்கள், பாலுணர்வுகள் கண்ணோட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கி, இந்த அடையாளத்தை நிலைப்பற்ற பன்முக இருப்புநிலைகளின் கணமாக விளக்குகிறது.

விதிர்நிலைக் கோட்பாடு சென்ற நூற்றாண்டில் உருவாகிய ஒத்தபாலுணர்வையும், விதிர்மையை வரலாற்றுச் சூழல் பின்னணியில் விளக்க, ஆய்வு செய்கிறது.

பருந்துப் பார்வை[தொகு]

விதிர்நிலைக் கோட்பாடு சென்ற நூற்றாண்டில் உருவாகிய ஒத்தபாலுணர்வையும், விதிர்மையை வரலாற்றுச் சூழல் பின்னணியில் விளக்க, ஆய்வு செய்கிறது.

விதிர்நிலைக் கோட்பாடு பேரள்வில் பின்னைக் கட்டமைப்பியல் சார்ந்த இலக்கியக் கோட்பாடில் இருந்தும் குறிப்பாக கட்டவிழ்ப்புமுறைமையில் இருந்தும் உருவாக்கப்பட்டதாகும்.[5]விதிர்நிலைக் கோட்பாடு வரலாற்றை ஒரு மீளறிதல் நிகழ்வாகப் புரிந்துகொள்ள பரிந்துரைக்கிறது.[6]பல ஆசிரியர்கள் 1970 கள் முதலே பாலியல் அடையாளத்தை ஆய்வு செய்ய, குறிப்பாக கலப்புப் பாலுணர்வு வரன்முறைகளையும் அதன் மறுதலையையும் ஆய்வு செய்ய, கட்டவிழ்ப்பு அணுகுமுறைகளைப் பயன்படுத்தலாயினர் . அக/புற அரசியல் புதிரில் வெளிவந்து கட்புலனாகும் கருத்தினம் இயல்பாக்கப்பட்டு, அதேவேளையில் விதிர்மையை விரட்ட பங்களிப்பதை உறுதி செய்கிறது. தன்னை வெளியேவந்து கட்புலனாகும்படி ஒருவர் அறிவிப்பதால் மறைந்திருக்க வேண்டாதவர்களை வெளிக்கொணர்கிறது .[7]

இந்தக் கோட்பாட்டில் 1980 களில் ஏமக்குரைவுநோய் செயல்முனைவும் 1990 களது தொடக்க கால பெண்ணியமும் இணைந்த ஆங்கிலோ அமெரிக்கப் பண்படுகளும் தாக்கம் செலுதியுள்ளன.[6]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Halberstam, Jack (2014-05-16). "An audio overview of queer theory in English and Turkish by Jack Halberstam". பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
  2. Halperin, David M. (May 1, 2003). "The Normalization of Queer Theory". Journal of Homosexuality 45: 339-343. 
  3. பாண்டியர் செப்பேடுகள் பத்துJagose, Annamarie (1996). Queer theory an introduction (Reprint. ed.). New York: New York Univ. Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0814742341. இணையக் கணினி நூலக மைய எண் 35651102.
  4. பாண்டியர் செப்பேடுகள் பத்துTyson, Lois (2006). Critical Theory Today: A User-friendly Guide. New York: Routledge. pp. 335. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415974097.
  5. பாண்டியர் செப்பேடுகள் பத்துClark, David (2007). Encyclopedia of Law and Society: American and Global Perspectives. Thousand Oaks, CA: SAGE Publications. p. 1256. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761923879.
  6. 6.0 6.1 பாண்டியர் செப்பேடுகள் பத்துHunt, Stephen; Yip, Andrew (2016). The Ashgate Research Companion to Contemporary Religion and Sexuality. Oxon: Routledge. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781409409496.
  7. Namaste, Ki (1994). "The Politics of Inside/Out: Queer Theory, Poststructuralism, and a Sociological Approach to Sexuality". Sociological Theory 12 (2): 220–231. doi:10.2307/201866. https://archive.org/details/sim_sociological-theory_1994-07_12_2/page/220. 

மேலும் படிக்க[தொகு]

மேலும்காண்க
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துJagose, Annamarie (1996). Queer Theory : An Introduction.
  • Marcus, Sharon (2005). "Queer Theory for Everyone: A Review Essay". Signs: Journal of Women in Culture and Society 31 (1): 191–218. doi:10.1086/432743. https://archive.org/details/sim_signs_autumn-2005_31_1/page/191. 
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துMarinucci, Mimi (2010). Feminism is Queer: the intimiate connection between queer and feminist theory.
  • Miskilci, Richard (2009). "A Teoria Queer e a Sociologia: o desafio de uma analítica da normalização" (in pt). Sociologias 21 (21): 150–182. doi:10.1590/S1517-45222009000100008. 
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துMuñoz, José Esteban (1999). Disidentifications: Queers of Color and the Performance of Politics.
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துPreciado, Beatriz (2002). Manifesto Contra-sexual.
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துPerreau, Bruno (2016). Queer Theory: The French Response.
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துProbyn, Elspeth (1996). Outside Belongings.
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துRayter, Scott (2003). He Who Laughs Last: Comic Representations of AIDS.
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துSedgwick, Eve Kosofsky (1985). Between Men.
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துSedgwick, Eve Kosofsky (1990). Epistemology of the Closet.
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துSedgwick, Eve Kosofsky (2014). "Writing the History of Homophobia." Theory Aside.
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துTurner, William B. (2000). A Genealogy of Queer Theory.
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துWiegman, Robyn (2012). Object Lessons.
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துWilchins, Riki (2004). Gender Theory, Queer Theory.
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துHunt, Stephen; Yip, Andrew (2016). The Ashgate Research Companion to Contemporary Religion and Sexuality. Oxon: Routledge. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781409409496.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விதிர்நிலைக்_கோட்பாடு&oldid=3894074" இலிருந்து மீள்விக்கப்பட்டது