விண்டோஸ் முகவரிப் புத்தகம்
விண்டோஸ் ஆட்ரஸ் புக் எனப் பொதுவாக அழைக்கப்படும் விண்டோஸ் முகவரிப் புத்தகம் விண்டோஸ் இயங்குதளத்தின் ஓர் அங்கம் ஆகும். இது தொடர்புகளை சேமித்து வைத்துப் பல்வேறுபட்ட மென்பொருட்களுடன் பகிர உதவுகின்றது. இது இண்டநெட் எக்ஸ்புளோளர் இன் 3 ஆவது பதிப்புடன் அறிமுகம் ஆகிப் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. விண்டோஸ் முகவரிப் புத்தகத்தில் பிரயோ இடைமுக நிரலாகத்தின் ஊடாக எல்டப் (LDAP) சர்வரை விசாரித்து அறிந்து தேவையேற்படின் உள்ளூர் முகவரிப் புத்தகத்தில் வேண்டிய மாற்றங்களை உண்டுபண்ண இயலும். விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் விண்டோஸ் முகவரிப் புத்தகம் ஆனது விண்டோஸ் தொடர்புகள் எனப் பொருள்படும் விண்டோஸ் கொன்ரக்ட்ஸ் ஊடாக மாற்றப்பட்டுள்ளது.
வசதிகள்
[தொகு]- பிரத்தியேக மற்றும் வணிகத் தரவு முறைகளை தத்தல்(Tabs) முறையில் உள்ளூர் தரவுத் தளத்தில் சேமிக்க உதவுகின்றது.
- அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மென்பொருளுடன் சேர்ந்தியங்கும் எனினும் இதுவேறான ஒர் மென்பொருள் ஆகும்.
- மைக்ரோசாப்ட் அவுட்லுக் மென்பொருளுடன் சேர்த்துப் பாவிப்பதற்கு றெஜிஸ்றிமாற்றங்களை உண்டு பண்ணுவதன் மூலம் பாவிக்கலாம்.
தொழில்நுட்பத் தகவல்கள்
[தொகு]- விண்டோஸ் முகவரிப் புத்தகத்தை ஆரம்பிக்க Start -> Run -> wab (இது விண்டோஸ் முகவரிப் புத்தகம் என்பதன் ஆங்கில் எழுத்துக்களின் முதல் எழுத்தாகும்)
- அல்லது Start -> Programs (All Programs) -> Accessories -> Address Book
- ஒன்றிற்கு மேற்பட்ட அடையாளங்களை(Multiple Identities_ வைத்து அவுட்லுக் எக்ஸ்பிரஸ் பாவிப்பவர்கள் முகவரிப் புத்தகத்தில் உள்ள எல்லாத் தொடர்புகளையும் ஒரே நேரத்தில் பார்க்க wab /a கட்டளையிடுவதன் மூலம் பார்க்கலாம்.
வெளியிணைப்புக்கள்
[தொகு]செயலி நிரலாக்க இடைமுகம் பரணிடப்பட்டது 2006-08-21 at the வந்தவழி இயந்திரம் WAB பற்றிய தகவல்கள்(ஆங்கிலம்)
archive.org மணிக்கு கட்டளை வரி பதிப்பு. GPL உரிமம் கீழ் LDIF மா ற்றி Libwab ஆன்லைன் WAB பரணிடப்பட்டது 2019-09-13 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)