விசுவகர்மா பூஜை
விசுவகர்மா பூஜை | |
---|---|
![]() விசுவகர்மா பூஜையின் போது விசுவகர்மா | |
பிற பெயர்(கள்) | விசுவகர்மா ஜெயந்தி |
கடைப்பிடிப்போர் | இந்து |
நாள் | கன்யா சங்கராந்தி, புரட்டாசி மாத கடைசி நாள் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
விசுவகர்மா பூஜை (ஆங்கிலம்: Vishvakarma Puja; சமக்கிருதம்: विश्वकर्मापूजा),[1] விசுவகர்மா ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது கடவுள்களின் கட்டிடக் கலைஞரான விசுவகர்மாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக்கள் கொண்டாடும் திருவிழா ஆகும்.[2]
விசுவகர்மா பூஜை இந்து நாட்காட்டியின் கன்யா சங்கராந்தி தேதியில் வருகிறது. இந்து புரட்டாசி மாதத்தின் கடைசி சில நாட்களில், கிரெகொரியன் நாட்காட்டியின் படி, பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 முதல் 18 வரை கொண்டாடப்படுகிறது.[3] நேபாளத்திலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. விசுவகர்மா பூஜையும் தீபாவளிக்கு அடுத்த நாள், கோவர்தன் பூஜையுடன் அக்டோபர்-நவம்பரில் கொண்டாடப்படுகிறது.[4]
முக்கியத்துவம்
[தொகு]விசுவகர்மா பிரபஞ்சத்தின் தெய்வீகக் கட்டிடக் கலைஞராகவும், இருக்கு வேதத்தில் தெய்வீகப் படைப்பாற்றலின் உருவகமாகவும் கருதப்படுகிறார். கிருட்டிணருக்காக துவாரகா நகரையும், பாண்டவர்களுக்கான இந்திரப்பிரசுதத்தின் அரண்மனையையும், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம், சிவனின் திரிசூலம், கார்த்திகேயனின் ஈட்டி போன்ற பல அற்புதமான ஆயுதங்களையும் அமைத்த பெருமை இவரைச் சாரும். இவர் வாஸ்து சாஸ்திரம், இயந்திரவியல் மற்றும் கட்டிடக்கலை பற்றிய அறிவியலை எழுதியவராகவும் கருதப்படுகிறார். இவர் அனைத்துக் கைவினைஞர்களின் புரவலர் தெய்வமாகக் கருதப்படுகிறார். விசுவகர்மா பூஜையின் போது இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வர்த்தகக் கருவிகள் போற்றப்படுகின்றன.[5][6]
நடைமுறைகள்
[தொகு]இந்தத் திருவிழா முதன்மையாகத் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை பகுதிகளில், பெரும்பாலும் கடை தளத்தில் அனுசரிக்கப்படுகிறது. கைவினைஞர்கள், இயந்திரவியலாளர்கள், தங்க நகை உற்பத்தியாளர்கள், பொருத்துநர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் பிற தொழிலாளர்களால் திருவிழா நாள் குறிக்கப்படுகிறது. சிறந்த எதிர்காலம், பாதுகாப்பான பணி நிலைமைகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தந்த துறைகளில் வெற்றி பெற பிரார்த்தனை இத்தொழிலாளர்கள் செய்கிறார்கள். பல்வேறு இயந்திரங்கள் சீராக இயங்குவதற்குத் தொழிலாளர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். தொழிலாளர்கள் தங்கள் வேலையைச் சக்தி (சக்தி) என்ற கருத்துடன் தொடர்புப்படுத்துகிறார்கள். மேலும் சில சமயங்களில் தங்களை விசுவகர்மாவின் குழந்தைகளாகக் கருதுகிறார்கள்.[7] தெய்வத்திற்கான ஆலயங்கள் பணியிடத்தின் சில பகுதிகளில் வேலையுடன் தொடர்புடைய கருவிகள் மற்றும் இயந்திரங்களை வணங்குகின்றனர்.[8] தெய்வத்தின் அருளுக்காக வழிபாடு செய்த பிறகு, தொழிலாளர்களிடையே பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது.[9]

இந்தியாவின் பல பகுதிகளில், இந்த நிகழ்விற்காகச் செப்டம்பர் 17 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய விடுமுறையாக கருதப்படாமல் "சமயவிடுப்பாக விடுமுறை" என்று கருதப்படுகிறது. ஆனால் நேபாளத்தில் இந்த நாளில் முழு அரசு விடுமுறை அமலில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dalal, Roshen (2010). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin Books India. p. 137. ISBN 978-0-14-341421-6.
- ↑ Melton, J. Gordon (2011). Religious Celebrations: An Encyclopedia of Holidays, Festivals, Solemn Observances, and Spiritual Commemorations. ABC-CLIO. pp. 908–. ISBN 978-1-59884-205-0.
- ↑ McDermott (2011-05-31). Revelry, Rivalry, and Longing for the Goddesses of Bengal: The Fortunes of Hindu Festivals (in ஆங்கிலம்).
- ↑ Shobna Gupta (2010). Festivals Of India.
- ↑ Chandra, Suresh (1998). Encyclopaedia of Hindu Gods and Goddesses (in ஆங்கிலம்). Sarup & Sons. p. 359. ISBN 978-81-7625-039-9.
- ↑ Garg, Gaṅgā Rām (1992). Encyclopaedia of the Hindu World (in ஆங்கிலம்). Concept Publishing Company. p. 51. ISBN 978-81-7022-374-0.
- ↑ South Asian Folklore in Transition: Crafting New Horizons. Routledge.
- ↑ Encyclopedia of Government and Politics: 2-volume set. Routledge.
- ↑ Wellness in Indian Festivals & Rituals: Since the Supreme Divine Is Manifested in All the Gods, Worship of Any God Is Quite Legitimate. Partridge Publishing.
மேலும் படிக்க
[தொகு]- Bajpai, Lopamudra Maitra (2020). India, Sri Lanka and the SAARC Region: History, Popular Culture and Heritage (in ஆங்கிலம்). Taylor & Francis. ISBN 978-1-000-20581-7.
- Narayan, Kirin (2019). Religion and Technology in India: Spaces, Practices and Authorities. Routledge. ISBN 978-1-351-20477-4.