உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்/2024

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Sridhar G: வணக்கம். விக்கித்திட்டங்கள் தொடர்பாக நடப்பு ஆண்டில் நீங்கள் மேற்கொள்ளும் பணிகளை இந்தத் திட்டப் பக்கத்தில் ஆவணப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் இத்தகையப் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:52, 23 மே 2024 (UTC)[பதிலளி]

விக்கிதானுலாவி உதவியுடன் விக்கித்திட்டத்திற்குரிய வார்ப்புருவினை இடுதல்[தொகு]

@Kanags and AntanO: வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலும், தரமானதாகவும் கட்டுரைகள் இருப்பதால் - கணிதம், வேதியியல், விலங்குகள் ஆகிய விக்கித்திட்டங்களை துவக்கியுள்ளேன். என்னால் வளர்த்தெடுக்க இயலும் என்பதால் கருநாடக இசை, தமிழ்த் திரைப்படம் ஆகிய விக்கித்திட்டங்களை துவக்கியுள்ளேன். இந்தத் திட்டங்கள் தொடர்பான வார்ப்புருவை உரிய கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் விக்கிதானுலாவி உதவியுடன் இட விரும்புகிறேன். இப்பணியை செய்யும் வழிமுறையை @Sridhar G:-இடமிருந்து கற்றுக்கொண்டேன். அதனடிப்படையில், பகுப்பு:கருநாடக இசை எனும் பகுப்பிலுள்ள கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் விக்கித்திட்ட வார்ப்புருவை விக்கிதானுலாவி உதவியுடன் இட்டுள்ளேன். மேற்குறிப்பிட்ட 5 திட்டங்களுக்கும் இப்பணியைத் தொடர்வதற்கு, விக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள் பக்கத்தில் வேண்டுகோள் வைக்கவேண்டுமா? உங்களின் கருத்தினை அறிய விரும்புகிறேன். (எனது SelvasivagurunathanmBOT கணக்கிற்கு அணுக்கம் வழங்கப்பட்டு பகுப்பினை ஒழுங்கமைப்பது தொடர்பான பணிகளை நான் செய்துவருவதை நீங்கள் அறிவீர்கள்.) - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:15, 17 சூன் 2024 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: தானுலவியைக் கொண்டு தொகுக்கப்படும் இவ்வகையான பொதுவான தொகுப்புகளுக்கு பிறிம்பான அணுக்க வேண்டுகோள் தேவையில்லை. உரையாடல் பக்கங்களில் வார்ப்புருவைச் சேர்க்கும்போது அது பக்கத்தின் தொடக்கத்தில் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.--Kanags \உரையாடுக 09:02, 18 சூன் 2024 (UTC)[பதிலளி]
@Kanags: உங்களின் கருத்திற்கு நன்றி. ஒவ்வொரு பகுப்பாக எடுத்துச் செய்யும்போது, கவனத்துடன் இருப்பேன். செய்துமுடித்த பிறகு, sample inspection செய்வேன் என்றும் உறுதி கூறுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:59, 18 சூன் 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--AntanO (பேச்சு) 05:18, 19 சூன் 2024 (UTC)[பதிலளி]