உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:மார்ச்சு 21, 2009 பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சனவரி 21 ஆ, மார்ச்சு 21 ஆ? --செல்வா 15:54, 24 பெப்ரவரி 2009 (UTC)

மார்ச்சு தான் செல்வா. எதிர்வரும் மார்ச்சு 21 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நடந்த கூட்டம் முகுந்தின் அலுவலகத்தில் நடந்தது. அதற்கான பக்கத்திலிருந்து கவர்ந்து ஒட்டியதில் சனவரி என்பதை கார்த்தி மாற்ற மறந்து விட்டார் போலும். -- சுந்தர் \பேச்சு 16:34, 24 பெப்ரவரி 2009 (UTC)

The title should be:

according to our current conventions. --Natkeeran 17:52, 24 பெப்ரவரி 2009 (UTC)

மேலும் இந்த மூன்று பட்டறைகள் தொடர்பான கட்டுரைகளையும் அறிவகம் என்பதற்கு பதிலாக பட்டறை என்றே பெயரிடலாமே? -- சுந்தர் \பேச்சு 08:54, 25 பெப்ரவரி 2009 (UTC)

பட்டறை என்பதில் எனக்கு ஆட்சோபனை இல்லை. நன்றாகவே உள்ளது. Wikipedia Academy என்பதற்கு இணையாகத்தான் அந்த பதம் பயன்படுத்தப்பட்டது. --Natkeeran 03:31, 26 பெப்ரவரி 2009 (UTC)
நல்லது நற்கீரன். அறிவகம் அல்லது academy ஒரு நிலையான அமைப்பைக் கிளப்பதாகத் (குறிப்பதாகத்) தோன்றுகிறது. ஆனால் நாம் இங்கு நடத்துவது ஒருநாள் பயிற்சிப் பட்டறைதானே? -- சுந்தர் \பேச்சு 06:03, 26 பெப்ரவரி 2009 (UTC)
உங்கள் கூற்றுச் சரியே. மாற்றுங்கள் பட்டறை என்பது மட்டும் போதுமா...அல்லது பயிற்சிப் பட்டறை என்று குறிக்க வேண்டுமா? --Natkeeran 22:24, 26 பெப்ரவரி 2009 (UTC)
நீளம் கருதியும் பயிற்சி தவிர பரப்புதல் போன்ற பிறவற்றைப் பற்றியும் நாம் உரையாடுவோம் என்பதாலும் வெறும் பட்டறை எனலாம். -- சுந்தர் \பேச்சு 07:00, 27 பெப்ரவரி 2009 (UTC)

இந்திய மொழிகள் விக்கி சந்திப்பு[தொகு]

நிகழ்ச்சியைத் தமிழ் விக்கிப்பீடியர், IISc தமிழ்க் கழகம் முன்னின்று ஏற்பாடு செய்தாலும் இதனை ஒரு இந்திய மொழிகள் / ஆங்கில விக்கி அறிமுக சந்திப்பாக மாற்றினால் நன்று. IISc தரும் களம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அங்கிருக்கும் அறிஞர்கள், மாணவர்கள் மிகவும் உயரிய பங்களிப்புகளை அளிக்க வல்லவர்கள். அவர்கள் ஏதாவது ஒரு விக்கிக்குப் பங்களித்தாலும் நன்மையே. வருங்காலத்தில் நாம் இந்திய விக்கி chapterஐத் துவங்கவும் பிற இந்திய விக்கியரிடையே நல்லுறவை மேம்படுத்தவும் உதவும். நிகழ்வை ஆங்கிலத்திலேயே நடத்து கூடிய எண்ணிக்கையிலான பங்களிப்பாளர்களை ஈர்க்கலாம். இந்திய மொழி விக்கிகள், தமிழ் விக்கிக்குத் தனி அமர்வு வைத்து சொல்லிக் கொடுக்கலாம். தமிழ்த் தட்டச்சு சொல்லித் தருவதைத் தவிர்த்து மற்ற எல்லாம் எல்லா விக்கிக்கும் ஒன்று தானே? கார்த்திக்கும் சுந்தரும் இதை எண்ணிப் பார்த்து ஆவன செய்ய வேண்டுகிறேன்--ரவி 09:03, 25 பெப்ரவரி 2009 (UTC)

நல்ல பரிந்துரை, ரவி. கார்த்தியிடம் இது தொடர்பாகக் கேட்டுப் பார்க்கிறேன். இம்முறை இல்லாவிட்டாலும் மற்றொருமுறை இவ்வாறு நடத்தலாம். -- சுந்தர் \பேச்சு 06:05, 26 பெப்ரவரி 2009 (UTC)
மிகவும் நல்ல பரிந்துரை. தற்போது மிகக்குறைந்த அவகாசம் இருப்பதால் இதை செய்ய இயலுமா என்று தெரியவில்லை. அனைத்து இந்திய மொழி விக்கிப்பீடியாவினரும் ஒன்றாக ஓர் இடத்தில் அமர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும். தற்போதைக்கு எவரேனும் விக்கீப்பீடியா பற்றி சற்று தொழிற்நுட்ப ரீதியில் ஆங்கிலத்தில் ஓர் உரையாற்ற இருந்தால் கண்டிப்பாக அதற்கு ஏற்பாடு செய்ய இயலும். அனைத்து விக்கீப்பீடியா பட்டறை பற்றி அனைத்து மொழி அமைப்புகளுடன் கலந்து பேசிவிட்டு கூறுகிறேன். நன்றி --கார்த்திக் 17:18, 27 பெப்ரவரி 2009 (UTC)

pdf கோப்பு[தொகு]

நிகழ்ச்சி குறித்த படங்கள், விவரங்களைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கார்த்திக், நீங்கள் அச்சடிக்க பயன்படுத்திய அந்த pdf கோப்பையும் பகிர்ந்தால் நன்றுழ நன்றி--ரவி 21:03, 22 மார்ச் 2009 (UTC)

பட்டறை வெளியீடு[தொகு]

பேரா.வி.கே. எதிர்வரும் பயிற்சிப் பட்டறையில் நிகழ்த்தவிருக்கும் தனது உரைக்குத் துணையாக 6-7 கணித கட்டுரைகளை அச்சிட்டு வந்தவர்களுக்குத் தரலாம் என்று பரிந்துரைத்தார். அச்சிலோ குறுவட்டிலோ இவ்வாறு தந்தால் அறைக்குத் திரும்பிய பின்னரும் நினைவுக்கு வர வாய்ப்பள்ளதால் எனக்கும் சரியாகவே தோன்றியது. கார்த்தியும் இந்திய அறிவியல் நிறுவனத்தில் செலவின்றி செய்ய முடியுமென்றார். அப்படியெனில் கணிதம் மட்டுமல்லாது பல துறைகளில் இருந்தும் பொறுக்கி நல்ல கட்டரைகள் சிலவற்றை ஒரு pdf கோப்பாக்கினால் போதும். விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா பயிற்சி/தேர்ந்தெடுத்த கட்டுரைகள் என்ற பக்கத்தில் கட்டுரைகளைத் தொகுக்கலாமா? இன்றைக்குள் செய்தால் இரவி நாளைக்கு பங்குபெறும் திருச்செங்கோட்டுப் பட்டறையிலும் தர வாய்ப்புண்டு. செய்யலாமா? -- சுந்தர் \பேச்சு 06:45, 13 மார்ச் 2009 (UTC)

ஆங்கில மற்றும் வேறு பல விக்கிகளில் விக்கிக் கட்டுரைகளை மின்னூலாக்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. பார்க்க: en:Help:Books. தமிழில் இவ்வசதியை எப்படிப் பெறுவது?--Kanags \பேச்சு 07:32, 13 மார்ச் 2009 (UTC)
நானும் கனகு கேட்கும் கேள்வியை இங்கு கேட்கவேண்டும் என 2-3 நாட்களாக எண்ணியிருந்தேன். இவ் வசதி தமிழ் விக்கியில் இருந்தால் நன்றாக இருக்கும். ஒருநாள் வரும்தான், ஆனால் நாம் முனைந்து வேண்டி முன்னமே பெற வேண்டும். பட்டறையில் பங்குகொள்வோருக்கு அச்சிட்டுத் தரவோ, வட்டில் பதிவித்துத் தரவோ எவ்வளவு செல்வாகும்? ஓரளவிற்கு நான் நேரடியான நன்கொடையாக கொடுக்க இயலும். சுந்தரோ வேறு யாரேனுமோ இது பற்றி மின்மடலில் உரையாட இயலும். --செல்வா 12:52, 13 மார்ச் 2009 (UTC)
மின்னூல் ஒருவாக்கம் குறித்து வழு மற்றும் வசதி கோரல் தளத்தில் விண்ணப்பிப்போம். நன்கொடை அளிக்க முன்வந்ததற்கு நன்றி, செல்வா. ஏதாவது செலவு ஏற்பட்டால் பட்டறை முடிவில் கார்த்தியும் நானும் மின்னஞ்சல் செய்கிறோம். சற்றே பெரிய செலவானால் நன்கொடைகளைப் பெற்றுக் கொள்கிறோம். -- சுந்தர் \பேச்சு 04:22, 15 மார்ச் 2009 (UTC)
இந்த வசதி இல்லாதபடியால் நாளைய பட்டறைக்கென நிரல் கிரலெல்லாம் எழுதி ஒருவாறு மின்னூல் உருவாக்கி கார்த்திக்கு அனுப்பியுள்ளேன். அவர் அதை அச்சிட்டு விடுவார். -- சுந்தர் \பேச்சு 10:59, 20 மார்ச் 2009 (UTC)
மிக்க மகிழ்ச்சி சுந்தர், பட்டறை வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.--Kanags \பேச்சு 11:15, 20 மார்ச் 2009 (UTC)
பட்டறைகளுக்கான ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெறுவதையிட்டு மகிழ்ச்சி. நாளை நடைபெறவுள்ள பட்டறை வெற்றிபெற வாழ்த்துக்கள்.மயூரநாதன் 11:32, 20 மார்ச் 2009 (UTC)
நன்றி கனகு, மயூரநாதன். -- சுந்தர் \பேச்சு 02:25, 21 மார்ச் 2009 (UTC)

சுந்தர், கார்த்திக் - நீங்கள் அச்சடிக்க பயன்படுத்திய அந்த pdf கோப்பையும் பகிர்ந்தால் நன்று. அப்புறம், ஒவ்வொரு அச்சடிப்பதற்காக அல்லாமல் மின்னிதழாக வெளியிடுவதற்காக நாம் இது போன்ற பகுப்பு வாரி, மாதாந்திரத் தொகுப்புகளை pdf வடிவில் வெளியிடலாமே?!

  • அறிவியலாளர்கள்
  • தனிமங்கள்
  • விலங்குகள்
  • நாடுகள்
  • மொழிகள்
  • தமிழ்த் திரைப்படங்கள்

போன்ற வெவ்வேறு தலைப்புகளிலும், பல தலைப்புகளில் இருந்து சிறந்த பல நூறு கட்டுரைகளாகவும் தொகுத்து மின்னிதழ்களாக பரப்பலாம். இணையத்தில் இது போன்ற மின்னிதழ்கள் மிக அதிகமாக மின்மடல்கள், குழுமங்கள் மூலம் பரவ வாய்ப்புண்டு என்பதால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நல்ல விளம்பரமாக இருக்கும். இதே மின்னதழில் முதல் சில பக்கங்கள் த.விக்கு எளிய அறிமுகம், உதவிக் குறிப்புகள் தரலாம். இத்தகைய மின்னிதழ்களை இறுதி செய்யும் முன் குறிப்பிட்ட கட்டுரைகளை விரிவாக்கி, உரை திருத்தி, தரமுயர்த்த வேண்டியதும் முக்கியம். தமிழ் விக்கி அச்சு வடிவில் வெளிவருவதற்கான நேரம் கூடி வரும் வரை இத்தகைய மின்னிதழ்கள் உதவும்--ரவி 21:10, 22 மார்ச் 2009 (UTC)

அந்த pdf கோப்பை இன்று மாலைக்குள் பதிவேற்றுகிறேன். மின்னிதழ்களை வெளியிடும் திட்டம் மிக நல்லது. இந்தத் திட்டத்தைப் போலச் செய்யலாம். மின்னிதழ் தொகுப்பதற்கு pediapress தமிழில் அவ்வளவு பயன் தராததால் இம்முறை நான் நிரல் எழுதினேன். அது முழு நிறைவு அளிக்கவில்லை. முகுந்திடமும் பீடியாபிரசைத் தமிழில் கொண்டு வருவது பொருட்டு பேசினேன். ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டால் பதிகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:14, 23 மார்ச் 2009 (UTC)
pdf வடிவில் வெளியிடவுள்ள கட்டுரைகளை முன்னரே முடிவு செய்தால், அவற்றில் இருக்கக்கூடிய எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் போன்றவற்றைத் திருத்தி மேம்படுத்தலாம். கூடியவரையில் முழுமைப்படுத்தவும் முடியும். மயூரநாதன் 16:23, 23 மார்ச் 2009 (UTC)