உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மணல் தொட்டி என்று தான் பெயரிட வேண்டுமா?

[தொகு]

மணல் தொட்டிக்கு "நிலா முற்றம்" என்று பெயரிடலாமா? -தயா- அன்பர்களே,

Sand Box என்பது ஆங்கிலத்தில் ஒரு காரணப் பெயர். அதை அப்படியே மொழிப் படுத்தினால் எப்படி? தமிழில் புதிதாய் கற்றுக் கொள்பவர்களுக்கான களங்களுக்கு எத்தனையோ பெயர்கள் உள்ளன.

யாராவது அவற்றில் ஒன்றை இந்த களத்துக்கும் பொருத்திப் பாருங்களேன்.

நானும் தான்;)

                           -- முத்துப்பிள்ளை தமிழ்த்தென்றல்
நல்ல கருத்து. நீங்களே எதாவது நல்ல பெயராகப் பரிந்துரையுங்களேன். முன்னதாக, ஆங்கிலத்தில் "village pump" என்று இருந்ததைத் தமிழில் ஆலமரத்தடி என்று மாற்றினோம். அதுபோல இங்கு என்ன வைக்கலாம்? -- Sundar \பேச்சு 09:03, 17 ஜூன் 2006 (UTC)
பயிற்சிக் கூடம்? --மாஹிர் 8 06 2007

எ-கலப்பை மென்பொருள்

[தொகு]

எ-கலப்பை மென்பொருளுக்கான இணைப்பு பக்கத்தில் மென்பொருள் இல்லை தயவுசெய்து சரியான இணைப்பை தரவும்.

testing sand box

answer

iit இன் இணைப்புகள் பிழையான 404 பக்கத்திற்கு செல்கிறது, மற்றும் இலகுவாக எங்கும் தமிழில் எழுத Google Tamil IME ஐ பயன் படுத்தலாம். இணைப்பு : http://www.google.com/ime/transliteration/

மணல் தொட்டி சரியே

[தொகு]

மணல் தொட்டி எனத் தமிழ்ப் படுத்துவது தவறாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் கிராம வீடுகளில் மண்தொட்டி அல்லது மண்கூட்டில் தானே அ ஆ... எழுதிப்பழகுவார்கள்.--சஞ்சீவி சிவகுமார் 05:06, 27 ஏப்ரல் 2010 (UTC)

சுவரிலும் எழுதிப்பழகுவார்கள். குறிப்பாக விசமிகள் - வீட்டுச் சுவர்களை வதந்த்திகள் பரப்பும் ஊடகமாகப் பயன்படுத்துவார்கள். அடுப்புக்கரியும் வீட்டுச் சுவரும் ஒரு பயங்கரமான சேர்மானம், குறிப்பாக வதந்திகளைப் பரப்புதலுக்கு!Lalapappa (பேச்சு) 07:36, 13 டிசம்பர், 2012

மணற்றொட்டி

[தொகு]

மணல் + தொட்டி என்பது மணற்றொட்டி என்று தானே வர வேண்டும். அத்தலைப்புக்கு இப்பக்கத்தை நகர்த்தினால் என்ன? --மதனாஹரன் (பேச்சு) 11:51, 14 ஏப்ரல் 2012 (UTC)

காவல்துறை என்றே பொதுவாக வழங்கப்படுகிறது. அது போலவே மணல்தொட்டியும். இதற்கு இலக்கணம் ஏதேனும் இருக்கும்.--Kanags \உரையாடுக 11:55, 14 ஏப்ரல் 2012 (UTC)

காவல்துறை என்பதும் தவறே! காவற்றுறை என்று தானே உண்மையில் குறிப்பிட வேண்டும். --மதனாஹரன் (பேச்சு) 12:01, 14 ஏப்ரல் 2012 (UTC)

தவறெல்லாம் ஏதுமில்லை! அவையனைத்தும் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் அமைந்தவை. இவ்வாறும் கூறலாம். மணல் தொட்டி என்று கூறினால் சிறிய இடைவெளி ஒன்றை இரு சொற்களுக்கும் இடையில் விடவேண்டும். ஆனால், மண்ற்றொட்டி என்று கூறுங்கால் அது தேவையில்லை. ஒருவரை இவ்வாறுதான் கூற வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானது இங்கு தலைப்பை மாற்றுவது. எனவே, உரையாடலில் அவரவர் விருப்பத்திற்கிணங்கக் கூறலாம். ஆனால், எழுதுகையில் அவருக்கு எது எளிமையாக எழுத வருகிறதோ அதுவே சிறப்புடையதாகும். இப்போதே இப்பக்கம் எதற்கென்று நிறைய புதுப்பயனர்களுக்குப் புரியாதவண்ணம் உள்ளது. எனவே, தலைப்பை மாற்றுவது மேலும் சிரமத்தைக் கூட்டும் எனக்கருதி இம்முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுகிறேன் மதன்! :) (புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்!!) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 13:39, 14 ஏப்ரல் 2012 (UTC)

அவ்வாறென்றால் விக்கிப்பீடியா:மணல் தொட்டி என்றே தலைப்பு அமையலாமே... விக்கிப்பீடியா:மணல்தொட்டி, விக்கிப்பீடியா:மணற்றொட்டி ஆகிய வழிமாற்றுகள் இருக்கட்டும். --மதனாஹரன் (பேச்சு) 02:55, 15 ஏப்ரல் 2012 (UTC)

மண்தொட்டி என்பதும் சரியே! அல்லது சிலேட்டு என்றும் கூறலாம். அல்லது பயிற்சிப்பகுப்புக்கூடம் அல்லது பட்டறை என்றும் சொல்லி வைக்கலாம்!Lalapappa (பேச்சு)3.32, டைசைம்பர், 2012

இதனை மணற்றொட்டி என்று புணர்த்தியோ மணல் தொட்டி என்று பிரித்தோ தலைப்பை மாற்றியாக வேண்டும். பிழையான தலைப்பைச் சரியான தலைப்புக்கு வழிமாற்றாக வைக்கலாமே தவிர சரியான தலைப்பைப் பிழையான தலைப்புக்கு வழிமாற்றாக வைப்பது சரியன்று.--பாஹிம் (பேச்சு) 15:40, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

ஐயம்

[தொகு]

என் கட்டுரையைப் பதிவிட என்ன செய்ய வேண்டும்? Tnse THANGATHURAIARASI VNR (பேச்சு) 11:47, 11 மே 2017 (UTC)[பதிலளி]

தங்கள் கட்டுரையை காட்டுக. அந்த கட்டுரை, ஆங்கில விக்கிப்பீடியக் கட்டுரையின், மொழிபெயர்ப்பு என்றால், அந்த ஆவி கட்டுரையையும் காட்டுக.--உழவன் (உரை) 08:52, 12 மே 2017 (UTC)[பதிலளி]