உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:புதுப்பயனர் போட்டி/பங்கேற்பாளர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Every actors act a media.. Every writers act in "wikipedia"....

வட இலங்கை நாகதம்பிரான் ஆலயம்[தொகு]

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஸ்ரீநாகராஜர் ஆலயத்துக்கும், இலங்கையின் வட பகுதியிலுள்ள நாகதம்பிரான் ஆலயத்துக்கும் இடையில் மர்மங்கள் நிறைந்த ஒற்றுமை உள்ளது. இரண்டும் நாக வழிபாட்டு தலங்கள்.இரண்டு ஆலயங்களிலும் சிவனுக்கும் விஷ்ணு வுக்கும் உரியதாக பூஜைகள் இடம் பெறுகின்றன. இரண்டு இடத்திலும் கோவிலிலைச் சூழ 5 ஆலயங்கள் அமைந்துள்ளன. இரண்டிலும் மண் பிரசாதம் வழங்கப்படுகின்றது. விஷக்கடிகளுக்கும் ஆலய மண் தான் மருந்தாகப் பயன்படுகின்றது. இரண்டின் தீர்த்தக் கேணிகளும் விஷேடத்துவம் பொருந்தியவை. சொறி, சிரங்கு போன்ற நோய்களை நீக்க வல்லன. இரண்டு ஆலயத்திலும் செடி முக்கியத்துவமானதாகக் கருதப்படுகின்றது. இலங்கை நாகர் கோவில் ஆலயத்தில் 'சன்னாசி' என்ற ஒருவகையான மூலிகைத் தாவரம் வளர்கின்றது. விஷக்கடிக்கு இந்த மூலியும் மருந்தாகப் பயன்படுகின்றது . ஸ்ரீநாகராஜர் ஆலயத்தில் 'ஓடவள்ளி' என்ற செடி படர்ந்திருக்கின்றது. இதுவும் அக்காலத்தில் தொழுநோய் போன்றவற்றைக் குணமாக்க பயன்பட்டது என்று கூறப்படுகின்றது. இரண்டு ஆலயங்களிலும் ஐந்து தலை நாகபாம்பே கருவறையில் வைத்து வழிபடப்படுகின்றது. இரண்டு ஆலயங்களின் தோற்றமும் அறியப்படவில்லை. ஆனால் நாகர் குலத்தவரோடு இரண்டும் தொடர்புபட்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. Consiththa (பேச்சு) 12:15, 4 மார்ச் 2019 (UTC)