உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாகிகள் பள்ளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags, Nan, Rsmn, Selvasivagurunathan m, AntanO, and Kalaiarasy: நேரம் கிடைக்கும் போது இந்தப் பக்கத்தில் விவரங்கள், வழிகாட்டல்களைச் சேர்த்து உதவ வேண்டுகிறேன். நானும் பங்களிக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 10:53, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:33, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பொதுவானவை

[தொகு]

அண்மைக் காலத்து கவனிப்புகள் 1

[தொகு]
  1. புதிய கட்டுரைகளை ஆங்கில விக்கியிலிருந்து மொழிமாற்றம் செய்து எழுதும்போது, அங்குள்ள மேற்கோள்கள் அப்படியே இங்கும் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அந்த இணைப்புகள் வேலை செய்யாமல் இருக்கும் நிலையை நிறைய இடங்களில் காண முடிகிறது. புதியவர்கள் மட்டுமன்றி, நீண்ட நாள் பயனர்களும் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும். நிர்வாகிகளும் சுற்றுக்காவல் செய்யும்போது இதனை கவனிக்க வேண்டும்.
  2. மேற்கோள்கள் குறித்தான கவனிப்பு தற்போது குறைவாக உள்ளது. அனைத்துப் பயனர்களும், நிர்வாகிகளும் இதனை கருத்தில் கொள்ளுதல் அவசியம் எனக் கருதுகிறேன்.
  3. 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியான பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களுக்கு உரிய மேற்கோள்கள் இல்லை; அல்லது இணைப்புகள் உடைந்துவிட்டன. (உதாரணம்: பாயும் புலி (1983 திரைப்படம்)) திரைப்படங்களில் ஆர்வமுள்ள புதிய நிர்வாகி எவராவது இதனை ஒரு திட்டப்பணியாக எடுத்துச் செய்யலாம். பரிந்துரைக் குறிப்புகளை வழங்க என்னால் இயலும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:55, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]

அண்மைக் காலத்து கவனிப்புகள் 2

[தொகு]
  • மேற்கோள்கள் தொடர்பான முக்கியத்துவம் மிகவும் குறைந்துவிட்டது. புதினம் ஒன்று குறித்தான கட்டுரையை புதுப் பயனர் ஒருவர் மேற்கோள் ஏதுமில்லாமல் எழுதியிருந்தார். அதை நான் சுட்டிக்காட்டியபோது, "நூல்களுக்கு எப்படி மேற்கோள்கள் தருவது?" எனக் கேட்டார். அவருக்கு எடுத்துக்காட்டாக குறிப்பிட எந்தக் கட்டுரையும் நான் தேடிய அளவில் இல்லை என்பதுவே உண்மை. எனவே நாம் அனைவரும் மேற்கோள்கள் குறித்து அதிக கவனம் எடுக்க வேண்டும். (1) பழைய கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்க்க வேண்டும். (2) புதிய கட்டுரைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

அண்மைக் காலத்து கவனிப்புகள் 3

[தொகு]

பகுப்பு:பகுப்பில்லாதவை இந்தப் பட்டியலை பார்வையிட்டு சீர்படுத்தினால், பெருமளவு துப்புரவு நடந்து முடியும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:49, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]