உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பயிற்சிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தானியங்கிகளை இயக்குவது பற்றி பயிற்சி அளித்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:43, 12 செப்டம்பர் 2013 (UTC)

எனக்கும் விருப்பம் 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:05, 12 செப்டம்பர் 2013 (UTC)

15 முதல் 30 நிமிடங்கள் பயிற்சிக்குப் போதாது என்று கருதுகிறேன். குறைந்தது 45 இருந்து 1 மணித்தியாலங்கள் தேவை. சில பயிற்சிக்கான பரிந்துரைகள்:

  • விக்கி - விக்கியில் தொகுத்தல் எப்படி (அடிப்படைகள்)?
  • விக்கி - விக்கியில் தொகுத்தல் எப்படி (அட்டவணை, வார்ப்புரு, கருவிகள்)?
  • ஒளிப்படக்கலை - சிறந்த ஒளிப்படம் எடுப்பது எப்படி??, பொதுவகத்தைப் பயன்படுத்துவது எப்படி?
  • வரைகலை - தமிழில் வரைபடங்கள்/நிலப்படங்கள்/காலக் கோடுகள் உருவாக்குவது எப்படி?
  • நிரலாக்கம் - விக்கித் தரவுகள், திறந்த தரவுகள்
  • நிரலாக்கம் - தானியங்கிகளைப் பயன்படுத்துவது எப்படி? (மேலே குறிப்பிடப்பட்டது)
  • நிரலாக்கம் - மீடியாவிக்கி
  • குமுக வளர்ச்சி - மலையாள விக்கியில் முன்னெடுக்கப்பட்ட குமுக விருத்தித் திட்டங்கள் பற்றிய பயிற்சிகள்/தகவல்கள்
  • மொழி - கலைக்சொல்லாக்கம் (விக்சனரி)
  • ஊடகவியல்/எழுத்து - ஒரு சிறந்த செய்திக் கட்டுரை எழுதுவது எப்படி?
  • எழுத்து - ஒரு சிறந்த கட்டுரை எழுதுவது எப்படி?
  • ஆவணவியல் - தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல்
  • ஆவணவியல் - வகைப்படுத்தல்

--Natkeeran (பேச்சு) 13:52, 12 செப்டம்பர் 2013 (UTC)

நற்கீரன், 15 முதல் 30 நிமிடங்கள் என்பது ஒரு குறிப்புக்கே. தமிழ்த் தட்டச்சு, விக்கியில் உலாவுதல் போன்றவற்றை மட்டும் சிறு பயிற்சியாகக் கொண்டால், இந்த நேரம் போதும். இது போல் நீங்கள் குறிப்பிட்டுள்ள பலவற்றை சிறு சிறு பயிற்சிகளாகப் பிரித்துக் கொள்ள முடியும். அல்லது, ஒட்டு மொத்தமாகச் சேர்த்து ஒரு மணி நேரம் வருமாறும் செய்யலாம். எனவே, காலம் போதாதது ஒரு பிரச்சினையாக இருக்காது.

செப்டம்பர் 29 அன்று காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை பயிற்சிகளுக்கான நேரம் என்று வைத்துக் கொள்வோம். 1 முதல் 3 வரை உணவு இடைவேளை. 3 முதல் 5.30 வரை கொண்டாட்ட நிகழ்வு.

காலை பயிற்சி நேரத்தில் இரண்டு வகுப்பறைகள் ஏற்பாடு செய்கிறோம். புதியவர்களுக்கு ஒரு அறை. ஏற்கனவே உள்ளவர்களுக்கு ஒரு அறை. ஏற்கனவே உள்ளவர்களுக்கான அறையில் பயிற்சிகள் போக, இந்திய விக்கிமீடியா கிளை - CIS - A2k போன்றவர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யலாம்.

மேலும் கருத்துகளை வரவேற்கிறேன். --இரவி (பேச்சு) 09:37, 13 செப்டம்பர் 2013 (UTC)

பயிற்சியாளர்கள்

[தொகு]
  • கட்டுரை எழுத்தாளர்
  • நிரலாக்கர்
  • ஒளிப்படக்கலைஞர்
  • வரைகலைஞர்
  • கட்டற்ற இயக்க செயற்பாட்டாளர்
  • marketing specialist ?