விக்கிப்பீடியா பேச்சு:டிசம்பர் 11, 2011 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
பங்குகொள்வோர் பட்டியலிலுள்ள கதிரவன் எனது 12ஆம் வகுப்புத் தமிழ் ஆசிரியர். :) 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது அறிவினை என்னோடு பகிர்ந்தார். இப்போது எனது முறை. பெருமிதமாக உள்ளது. :) --சூர்யபிரகாசு உரையாடுக... 13:53, 8 திசம்பர் 2011 (UTC)
- சூர்யா! அப்பள்ளியின் படத்தை இணைத்தல் நலம். தொடருந்து நிலையத்தில் இருந்துவர, வழி குறிப்பிடவும். ≈05:32, 9 திசம்பர் 2011 (UTC)த♥உழவன்+உரை..
- பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாகச் செல்லும் அணைத்து நகரப் பேருந்துகளிலும் வரலாம். Share auto -க்களும் நிறைய உள்ளன. பட்டைக் கோவில் நிறுத்தம் எனக் கேட்கவும். அங்கிருந்து வலப்புறம் பார்த்தாலே பள்ளி தெரியும்.ஆத்தூர் மற்றும் வாழப்பாடி போனற ஊர்களில் இருந்து வரும் போது புதிய பேருந்து நிலையமோ தொடர்வண்டி நிலையமோ வரத் தேவையில்லை. அம்மாப்பேட்டை கூட்டு ரோடு இறங்கி share auto அல்லது நகரப் பேருந்தில் வரலாம். புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், தொடர்வண்டி நிலையத்திலிருந்தும் வருவதானால் பழைய பேருந்து நிலையத்திற்கு வர 13 ஆம் எண் பேருந்து மற்றும் நிறைய பேருந்துகள் உள்ளன. [ சேலத்துக்கு வாங்க! பழகலாம்! விக்கிபீடியவை!! ]--Parvathisri 11:41, 9 திசம்பர் 2011 (UTC)
சேலம் விக்கி பட்டறை
[தொகு]சேலத்தில் பாவடி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விக்கி பட்டறை சிறப்பாக நடந்தேறியது. தனது பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி சேலம் பட்டறைக்காக சோடாபாட்டில் வந்திருந்தார். சூர்யப்பிரகாசு, தகவலுழவன், சேலம்பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துணைப் பேராசிரியர் தமிழ்ப்பரிதி மாரி கணினி ஆசிரியர் ஜெய்சங்கர், இயற்பியல் ஆசிரியர் பாரிவேல், மதுரைப்பயனர் எஸ்ஸார் என்கிற சசிகுமார் , வெற்றிவிகாஸ் பள்ளித் தமிழ் ஆசிரியர் கதிரவன், அவரது துனைவியார் வினோதினி, தொலைத்தொடர்புத்துறையில் பணியாற்றும் முருகேசன அவரது மனைவி ஜெயந்தி, மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் பாலசுப்பிரமணி, தியாகராசர் பல்தொழில் நுட்பக் கல்லூரி மாணவி ஜமுனா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.சூர்யபிரகாசு அவர்கள் விக்கிப்பீடியா பற்றி அறிமுகம் செய்தார். விக்கிப்பீடியாவின் சிறப்பு, பொதுமை, கட்டற்ற உரிமம். ஆகியவை பற்றியும் விளக்கினார். தகவலுழவன் விக்சனரி பற்றியும் அதில் பங்கு கொள்வது பற்றியும் விளக்கினார். ஒரு சொல்லை விக்சனரியில் தேடுதல் மற்றும் உருவாக்குதல், படங்களைச் சேர்த்தல் பற்றிய பயிற்சி நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது. சோடாபாட்டில் அவர்கள் விக்கிப்பீடியா பற்றிய விரிவான விளக்கங்களும் விக்கிப்பீடியாவின் ஏனைய திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். விக்கியின் உலகளாவிய பங்களிப்பு பற்றி விளக்கினார். ஒருவர் செய்யும் பங்களிப்பு எவ்வாறு இற்றைப் படுத்தப்படுகிறது என்பதும் விளக்கப்பட்டது. ஊடகப்போட்டி பற்றி எடுத்துக் கூறப்பட்டது. பின்னர் சூர்யா அவர்கள், தேடுதல்,கணக்கு தொடங்குதல், புகுபதிகை, பங்களித்தல்,உரையாடல், தொகுத்தல் போன்ற விக்கி பயிற்சி அளித்தார். பயிற்சியில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இடையில் மின் தடங்கல் ஏற்படினும் பட்டறை சிறப்பாகவே நடந்தது. கலந்து கொண்டோர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்வதாகவும் அவர்களுக்காக இன்னொரு பயிற்சிப் பட்டறை சேலத்தில் வேண்டும் என்றும் கேட்கும்படி இருந்தது. --Parvathisri 11:23, 11 திசம்பர் 2011 (UTC)
படங்கள்
[தொகு]-
பாவடிப் பள்ளி
பட்டறை அறிவிப்பு வாழ்த்துக்கள்
[தொகு]பட்டறை சிறப்புற வாழ்த்துக்கள். விக்கி ஊடகப் போட்டிக்கும் இது பரப்புரையாக இருக்கும். நன்றி.--சஞ்சீவி சிவகுமார் 16:05, 10 திசம்பர் 2011 (UTC)
- சேலம் பட்டறை சிறப்புற நடைபெற வாழ்த்துகள் !! --மணியன் 04:37, 11 திசம்பர் 2011 (UTC)
விக்கி சமூகக் கருத்துகள்
[தொகு]- பட்டறை சிறப்பாக நடந்தேற உழைத்த அனைத்துப் பயனர்களுக்கும் வாழ்த்துகள். படங்களும் எடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 11:32, 11 திசம்பர் 2011 (UTC)
- சேலம் விக்கி பட்டறை செய்திகளைப் படிக்க/காண நன்றாக இருந்தது.--Nan 13:24, 11 திசம்பர் 2011 (UTC)
- பட்டறை ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்த பார்வதிக்கு விக்கி சமூகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது :-)--சோடாபாட்டில்உரையாடுக 16:58, 11 திசம்பர் 2011 (UTC)
- பட்டறை சிறப்பாக நடக்க உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். --கலை 13:45, 11 திசம்பர் 2011 (UTC)
- பட்டறையை சிறப்பாக நடத்தி முடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:08, 11 திசம்பர் 2011 (UTC)
- பட்டறை சிறப்பாக நடக்க உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்--P.M.Puniyameen 14:33, 11 திசம்பர் 2011 (UTC)
- பட்டறையின் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 15:56, 11 திசம்பர் 2011 (UTC)
- பட்டறை சிறப்பாக நடக்க உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஸ்ரீகாந்த் 08:46, 12 திசம்பர் 2011 (UTC)
- அனைவருக்குமான சிற்றுண்டி, தண்ணீர் போன்றவைகளை, பயனர்:பார்வதியே கொண்டு வந்து தந்து, அனைவரிடமும் விருந்தோம்பலைப் பேணினார். சூர்யா தனது நிழற்படக் கருவியில், சில நகரப்பகுதிக்களைத் துடிப்புடன் எடுத்தது மகிழ்ச்சியாகவும், துடிப்பாகவும் இருந்தது. அன்று பிற பயனர்கள் எடுத்தப் படங்களையும், இன்னும் சில நாட்களில் இப்பகுப்பில் காணலாம்.வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்