விக்கிப்பீடியா பேச்சு:கலைச்சொல் ஒத்தாசை/மருத்துவம்
- ஏற்கனவே உரையாடப்பட்ட சில சொற்களையும் இங்கே சேகரித்து வைத்தல் நல்லது என நினைத்ததால், அந்த உரையாடலையும் இங்கே வெட்டி ஒட்டியுள்ளேன். எவருக்காவது இதில் மாற்றுக் கருத்து உண்டெனில் தயவு செய்து தெரிவியுங்கள்.
- இறுதியாக உரையாடப்படும் சொல்லை மேலே வருமாறு பார்த்துக் கொள்ளலாம்.
- நல்ல முயற்சி. நானும் இதில் கலந்துகொண்டு கருத்துகளைப் பகிர்கின்றேன். செந்தி, நீங்கள் என் பயனர் பக்கத்தில் இட்டிருந்த கருத்தையும் பார்த்தேன். --செல்வா 22:31, 18 மே 2011 (UTC)
இலகுவாக்கம்
[தொகு]இந்தப் பக்கத்தில் நிகழும் கலந்துரையாடல்களை, அவை தொடர்பான இறுதி முடிவுகள் வந்த பின்னர், காப்பகத்தில் தொகுப்புக்களாக இட்டு வைப்பதற்கு இலகுவாக காப்பகத்தை சேர்த்துள்ளேன். அத்துடன் சொற்களுக்கு சரியான தமிழாக்கம் அறியப்பட்ட பின்னர், அந்தச் சொற்களை இலகுவாக தேடிக் கொள்வதற்காக, அவற்றை அகரவரிசைப்படி ஒழுங்குபடுத்தி சேமிப்பதற்காக, அதற்கான வார்ப்புருவையும் இணைத்துள்ளேன். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் தயவுசெய்து திருத்திவிடுங்கள். --கலை 15:30, 22 மே 2011 (UTC)
இணைத்தல்
[தொகு]விக்கிப்பீடியா பேச்சு:கலைச்சொல் ஒத்தாசை/மருத்துவம் என்ற இந்தப் பக்கத்தையும், விக்கிப்பீடியா பேச்சு:கலைச்சொல் ஒத்தாசை/உயிரியல் என்ற பக்கத்தையும் ஒன்றாக்கினால் தொகுப்புக்களை சேமித்தல் இலகுவாக இருக்கும் எனத் தோன்றுகின்றது. விக்கிப்பீடியா பேச்சு:கலைச்சொல் ஒத்தாசை/உயிரியல் என்ற தலைப்பையே பயன்படுத்தினால் என்ன? இதுபற்றிய ஏனையோரின் கருத்துக்களையும் அறிந்து, வேண்டிய மாற்றங்களைச் செய்ய விரும்புகின்றேன். --கலை 08:54, 9 சூன் 2011 (UTC)
- இணைத்துவிடலாம், எனினும் மருத்துவம் புறம்பாக இருப்பதே நன்று, ஆனால் பல சொற்கள் பொதுவாக இருப்பதாலும் தொகுப்புக்களை ஆவணப்படுத்தலுக்கு வசதியாக இருக்கும் காரணத்தாலும் அவற்றை உயிரியல் தலைப்பின் கீழேயே ஆராயலாம் என்று நானும் கருதுகிறேன்.--செந்தி//உரையாடுக// 17:29, 9 சூன் 2011 (UTC)
- நானும் தொகுத்தல் இலகுவாக இருக்கும் என்ற காரணத்தாலேயே கேட்டேன். அப்படியானால் உயிரியலுக்கும், மருத்துவத்துக்கும் பொதுவானவை எனக் கருதப்படும் சொற்களை உயிரியலிலும், மருத்துவத்துக்கு மட்டும் வரக் கூடிய சொற்களை மருத்துவத்திலும் இடலாம். மருத்துவமும் அப்படியே இருக்கட்டும்.--கலை 22:45, 9 சூன் 2011 (UTC)