உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:இலட்சம் கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு இலட்சம் கட்டுரைகள் என்று தலைப்பை மாற்றலாமா? நூறாயிரம் என்று சொல்வது வழக்கம் கிடையாது. --இரவி (பேச்சு) 10:25, 18 ஏப்ரல் 2017 (UTC)

தமிழ்ச் சொல்லாக இருத்தல் நல்லது.--Kanags \உரையாடுக 10:27, 18 ஏப்ரல் 2017 (UTC)
அனைவரும் நல்ல தமிழ் நாடுவோர் தாம். ஆனால், பேச்சு வழக்கிலும் விக்கிப்பீடியாவிலும் இலட்சம் என்ற சொல் பரவலாகப் புழக்கத்தில் உள்ளதால் அதனைப் பயன்படுத்தலாமே? --இரவி (பேச்சு) 11:03, 18 ஏப்ரல் 2017 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:52, 18 ஏப்ரல் 2017 (UTC)
இலட்சம் என்று இருக்கலாம் என்பதே எனது கருத்தும். ---மயூரநாதன் (பேச்சு) 04:07, 20 ஏப்ரல் 2017 (UTC)

சிம்மி வேல்சின் கூற்றாகக் காட்டப்பட்டிருக்கும் பகுதியில் ".....மனித அறிவு முழுவதையும் இலவசமாக பெற்றுக்கொள்ளும் ......" என்ற தொடரில் "இலவசமாக" என்பது சரியல்ல. அது "கட்டற்ற முறையில்" என்றிருக்கவேண்டும். ----மயூரநாதன் (பேச்சு) 04:07, 20 ஏப்ரல் 2017 (UTC)

ஒரு இலட்சம் கட்டுரைகள் அல்லது நூறாயிரம் கட்டுரைகள் என்பதில் எது சிறப்போ அதனை தலைப்பாக்கலாம். மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்கலாம். --AntanO 04:21, 20 ஏப்ரல் 2017 (UTC)
இலக்கணப்படி, ஓர் இலட்சம் கட்டுரைகள் என வர வேண்டும். ஆனாலும், அச்சொற்றொடர் பொருந்துவதாகத் தெரியவில்லை. "ஒரு இலட்சம்" என எழுதுவதற்கு விதிவிலக்கு உண்டா என எனக்குத் தெரியாது. அறிந்தவர்கள் கூறுங்கள். நூறாயிரம் கட்டுரைகள் என்பதே எனது பரிந்துரை.--Kanags \உரையாடுக 07:28, 20 ஏப்ரல் 2017 (UTC)
நடைமுறையில் ஆயிரம், இலட்சம் என்று சுட்டினாலே அது ஓராயிரம், ஒரு இலட்சம் என்பதைத் தான் சுட்டும். எனவே, ஓர், ஒரு என்று குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை. --இரவி (பேச்சு) 10:50, 9 மே 2017 (UTC)[பதிலளி]
சில நாட்களுக்கு முன் சென்னையிலுள்ள ஒரு வங்கியில் நான் கொடுத்த காசோலையை மாற்றித்தர மறுத்தார்கள். காரணம் அதில் தொகை Thousand only என எழுதப்பட்டிருந்தது. அப்படி ஒரு தொகை இல்லை என்று சொன்னார்கள். அது எனது சொந்தக் காசோலையாக இருந்ததால் உடனேயே நான் Onethousand only என மாற்றி எழுதிக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டேன். மக்கள் மத்தியில் ஆயிரம் என்பது ஓராயிரமாகக் கருதப்பட்டாலும் அது சரியான ஏற்கப்பட்ட நடைமுறை அன்று. ஆகவே ஓர் இலட்சம் என்பதே சரியானது. ஒருலட்சம் என ஒரு சொல்லாக எழுதலாம். அதில் தமிழ் இலக்கண வழுவும் இல்லை.--UKSharma3 11:14, 9 மே 2017 (UTC)