உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்/2024, 2025

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆழத்தை அதிகரிக்க எடுக்கப்படும் முயற்சிகளின் தொகுப்பு.

முக்கியக் குறிப்பு: தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் குமுகாயம் வழங்கும் ஒப்புதல் அடிப்படையில் பணிகள் செயற்படுத்தப்படும்.

நோக்கம்: கட்டுரை ஆழத்தை 50 எனும் எண்ணிக்கைக்கு அதிகரித்தல்.

பணிகள்

[தொகு]
  1. படிமம் இல்லாத கட்டுரைகளில் படிமங்களைச் சேர்த்தல். திட்டம்: விக்கிப்பீடியா:கட்டுரைகளில் படிமங்களைச் சேர்த்தல்
  2. தேவைப்படும் புதிய பகுப்புகளை உருவாக்குதல், இருக்கும் பகுப்புகளை ஒழுங்கமைத்தல் இவற்றைச் செய்வதன் மூலமாக சுமார் 1 இலட்சம் தொகுப்புகளை செய்ய இயலும். திட்டம்: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு/2023, 2024
  3. விக்கித்திட்டம் தொடர்பான சீரமைப்புப் பணிகள்

நோக்கம்: கட்டுரை ஆழத்தை 100 எனும் எண்ணிக்கைக்கு அதிகரித்தல்.

திட்டங்கள்

[தொகு]
  1. கலந்தாய்வுக் கூட்டம், பயிற்சிகள், தொடர்-தொகுப்பு இவற்றை உள்ளடக்கிய 3 நாள் நேரடி நிகழ்வு - டிசம்பர் 2025

வழிமுறைகள்

[தொகு]
  1. தேவைப்படும் பகுப்புகள், வார்ப்புருக்களை உருவாக்குதல்.
  2. கட்டுரைகளில் மேற்கோள்கள், பகுப்புகள், வார்ப்புருக்களைச் சேர்த்தல்.
  3. விக்கியாக்கம்.
  4. குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்துதல்.
  5. பிழைத் திருத்தங்கள்.
  6. சிவப்பிணைப்புகளை நீக்குதல்
  7. பல்லூடகக் கோப்புகளைச் சேர்த்தல்
  8. உரிய வெளியிணைப்புகளை இணைத்தல்

இற்றை

[தொகு]

கட்டுரை ஆழம் அடிப்படையில் அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களும் மேல்-விக்கியில் வரிசைப்படுத்தப்படுகின்றன. எனினும், கட்டுரைகளின் தரத்தை அளக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கூறாக 'கட்டுரை ஆழத்தை' தமிழ் விக்கிப்பீடியா சமூகம் கருதவில்லை. கட்டுரை ஆழம் குறித்த புரிதல் ஏற்பட்டுள்ள நிலையில், இதனை அதிகரிப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் எதனையும் இவ்வாண்டில் முன்னெடுக்கவில்லை. கூகுள்25 எனும் இணைவாக்கத் திட்டத்தை இயக்கவிருப்பதும் ஒரு காரணமாகும். கட்டுரை ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களை ஆவணப்படுத்தும் பணியை மட்டும் 2025 ஆம் ஆண்டில் செய்யவுள்ளோம்.