விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகசுட்டு 16, 2009
Appearance
- இரண்டு கணியங்களின் கூட்டுத் தொகைக்கும், அவற்றில் பெரிய கணியத்துக்கும் இடையிலான விகிதம், அவற்றில் பெரியதற்கும் சிறியதற்கும் இடையிலான விகிதத்துக்குச் சமனாக இருப்பின் அவ்விரு கணியங்களுக்கும் இடையிலான விகிதம் பொன் விகிதம் எனப்படும்
- இயற்கையில் காணப்படும் யாவற்றிலும், இதுவரை மனிதரலால் உருவாக்கப்பட்ட யாவற்றிலும் கடினத்தன்மை அல்லது மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் வைரம் இதுவாகும்.
- உலகில் அதி உயரத்தில் இருக்கும் ஊர், உலகின் கூரை என அறியப்படும் திபெத் ஆகும்.
- கனடாவில் 35 000 பேர்களால் மட்டுமே பேசப்படும் இனுக்டிட் மொழி நுனாவுட், வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளில் ஆட்சி மொழியாகும்.
- பிரதாப முதலியார் சரித்திரம் 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும்