விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 21, 2010
Appearance
- 1918 இல் அமெரிக்கா வெளியிட்ட தலைகீழ் ஜென்னி என்ற அஞ்சல்தலையில் உள்ள விமானம், தவறுதலாக தலைகீழாக அச்சிடப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு 1 மில். அமெரிக்க டாலர்களாகும்.
- பிரமிட்டுகளின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் இதனால், பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
- 1811 இல் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தினால் மிசிசிப்பி ஆறு சிறிது நேரம் பின்னோக்கிப் பாய்ந்தது.
- மனித வடிவிலான ரோபோ இயந்திரத்துக்கான அடிப்படைத் தொழில்நுட்பங்களை 1495ஆம் ஆண்டு லியொனார்டோ டா வின்சி வரைந்து வைத்திருந்தார்.
- தோகோ என்பது லியான்கார்டு செப்பாலா என்பவரின் பனிவண்டியை இழுத்துச் சென்ற நாய் அணியை முன்நடத்திச் சென்ற நாய். இந்த அணியின் மிக நீண்ட பயணம் 1925 இல் அலாசுக்காவில் டிப்தீரியா என்னும் தொற்று நோய் பரவாமல் தடுக்க நோய்க்கு எதிர் மருந்தைக் கொண்டு செல்வதற்காக அமைந்தது.