விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 11, 2009
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f1/Red_Cloud3.jpg/150px-Red_Cloud3.jpg)
- சிகப்பு மேகம் என்ற அமெரிக்க இலக்கோட்டா முதற்குடிமக்கள் தலைவர் 1865 இருந்து 1867 வரை வயோமிங் மொன்டானா ஆகிய இடங்களில் இவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க படைத்துறைக்கும் இடையே நடைபெற்ற போரில் வெற்றி ஈட்டியவர்.
- உணவைச் சூடாக்கப் பயன்படும் நுண்ணலை அடுப்பு 1940 களின் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
- கூடிய உற்பத்தி தரும் விதைகள், பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (மரபணு மாற்றப்பட்ட உயிரினம்), செயற்கை உடல் உறுப்புகள், செயற்கை இன்சுலீன் என பல தரப்பட்ட பயன்பாடுகள் மரபணு பொறியியலுக்கு உண்டு.
- அறிவாய்வியல் (Epistemology) என்பது, அறிவின் மூலம், எல்லை, இயல்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும்.
- தமிழ், அன்னம், முகில், காக்கை, நெல் போன்ற அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் தூது இலக்கியம் எனப்படுகிறது.