விக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/Intro
Appearance
ஈழப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும் போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. பல்வேறு காலகட்டங்களில் ஈழப்போர் பல்வேறு தன்மைகளுடனும் தாக்கங்களுடனும் அமைப்புகள் ஊடாகவும் வெளிப்பட்டு இருக்கின்றது. கால ஓட்டத்தையும் முக்கிய திருப்புமுனைகளையும் முதன்மையாக வைத்து ஈழப்போரை நான்கு கட்டங்களாக வகுப்பர். அவை பின்வருமாறு:
- ஈழப் போர் I: (1983-1985; 1987) - ஈழ இயக்கங்கள், விடுதலைப் புலிகள் எதிர் இலங்கை இராணுவம்
- புலிகள் எதிர் இந்திய அமைதி காக்கும் படை
- ஈழப் போர் II: (1990-1995) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம், பிற சில ஈழ இயக்கங்கள்
- ஈழப் போர் III: (1995 - 1999) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம்
- ஈழப் போர் IV: (2006 - ) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம், பிற புலி எதிர்ப்பு குழுக்கள்