விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 25, 2011
Appearance
புரோக்கோலி என்பது ஒரு முட்டைக்கோசுக் குடும்பத் தாவரமாகும். இதன் அடர்த்தியான உண்ணத்தக்க பகுதி, தடித்த தண்டில் இருந்து மரம்-போன்ற தோற்றத்தில் சீரான கிளைபரப்பிய குருத்துகள் முதலிய தோற்றப் பண்புகளைப் பெற்றுள்ளது. 2000 ஆண்டுகளாக இது காய்கறிகளுள் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் தோன்றிய இது 1806 இல் அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் காய்கறிகளுள் ஒன்றாக மாறியது. இதில் உயிர்ச்சத்துகள் ஏ, சி, கே ஆகியவை உள்ளன. இதன் உற்பத்தியில் உலக அளவில் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. படத்தில் புரோக்கோலியின் குறுக்குவெட்டுத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. |