விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 05, 2010
Appearance
புதுச்சேரி எனவும் பாண்டிச்சேரி, புதுவை எனவும் அழைக்கப்படும் இந்நகரம், சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், வங்கக் கடலோரத்தில் அமைந்த இந்திய ஒன்றியப் பகுதி. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் காலனியாக இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையிலுள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த ஆட்சிப் பகுதியின் அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள். படத்தில் புதுச்சேரிக் கடற்கரையிலுள்ள காந்தி சிலை காணப்படுகிறது. |