விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு80
குறுங்கட்டுரைப் பகுப்பு
[தொகு]குறுங்கட்டுரைகளைப் பகுக்க முயன்றேன். ஆனால், சில வார்ப்புருக்களில் குறுங்கட்டுரைகள் என்ற பகுப்பு தானாகவே சேர்க்கப்படுவதால் இதை நடைமுறைப்படுத்த முடியாமலுள்ளது. இதை எப்படி மாற்றுவது--பிரஷாந் (பேச்சு) 13:10, 2 ஆகத்து 2012 (UTC)
- இக்கட்டுரைகளில் உள்ள குறுங்கட்டுரை வார்ப்புருவை நீக்கி விட்டு அந்தக் கட்டுரைக்கேற்ப தகுந்த பகுப்புகளுடன் குறுங்கட்டுரை வார்ப்புருக்கள் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறான வார்ப்புருக்கள் ஏற்கனவே பல உள்ளன. தேடிப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 21:24, 2 ஆகத்து 2012 (UTC)
வார்ப்புரு மொழிபெயர்ப்பு
[தொகு]ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்க்கும்போது, புதிது புதிதாய் வார்ப்புருக்கள் உள்ளது அயற்சியடையச் செய்கிறது. இவ்வற்றை நம் விக்கிக்கு ஏற்ப தமிழாக்கம் செய்ய வழி கூறுங்கள். நானே செய்துவிடுகிறேன். :) இல்லையென்றால், வார்ப்புரு மொழிபெயர்ப்பு வேண்டுகோள் என்ற பக்கமிருந்தால் கூறுங்கள். அதில் என் வேண்டுகோளையும் சேர்ப்பேன். நல்ல வழி கூறுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:22, 2 ஆகத்து 2012 (UTC)
- இவ்வாறான ஆங்கில விக்கி வார்ப்புருக்கள் பல ஆங்கிலத் தலைப்புகளில் இல்லாமல் தமிழில் தலைப்பு மாற்றப்பட்டு ஆங்காங்கே உள்ளன. அவற்றை இணைக்க வேண்டும். எந்தக் கட்டுரைகள் என்று கூறினால் உதவலாம். மேலும், வார்ப்புருக்களில் அனைத்தையும் தமிழில் மொழிபெயர்க்கத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 21:27, 2 ஆகத்து 2012 (UTC)
infobox writer ஐ மேம்படுத்தவும், தாமரை (கவிஞர்) கட்டுரையில் பிழை வருகிறது. திருத்தவும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:38, 5 ஆகத்து 2012 (UTC)
tamil vu - நாட்டுடைமை நூல்கள்
[தொகு]தமிழ் இணைய பல்கலைக்கழகத்தில் நாட்டுடைமை நூல்கள் எழுதிய அறிஞர்களின் எண்ணிக்கை தற்போது 2 உயஎர்ந்து காணப்படுகிறதே.[1] அவர்கள் புதிதாக சேர்த்தால் நமக்கு மின்னஞ்சல் வருவது போல் ஏதும் வசதி உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:58, 3 ஆகத்து 2012 (UTC)
தமிழ் கம்ப்யூட்டர் இதழில் விக்கிப்பீடியாவில் தமிழ் கட்டுரை
[தொகு]தமிழ் கம்ப்யூட்டர் (ஆகஸ்ட் 1 - 15, 2012) இதழில் நான் எழுதிய “விக்கிப்பீடியாவில் தமிழ்” எனும் கட்டுரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையின் நான்கு பக்கங்கள் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளன.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் வெளியாகும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:45, 3 ஆகத்து 2012 (UTC)
- நல்ல முயற்சி. இவ்வாறு பல முனைகளில் அறிமுகப்படுத்துவது நன்று. --Natkeeran (பேச்சு) 19:08, 3 ஆகத்து 2012 (UTC)
- நான் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் எழுதிய “விக்கிப்பீடியாவில் தமிழ்” கட்டுரையின் தொடர்ச்சியாக, தமிழ் கம்ப்யூட்டர் (ஆகஸ்ட் 16 - 31, 2012) இதழில் “தமிழ் விக்கிப்பீடியா: பெருகி வரும் தன்னார்வம்” எனும் தலைப்பில் தொடர்ச்சி வெளியாகியது. இக்கட்டுரையின் இரண்டு பக்கங்கள் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளன.
--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:24, 19 செப்டெம்பர் 2012 (UTC)
Announcements for India Program - July/August 2012
[தொகு]Dear all, Here are a few updates and announcements regarding the India Program team:
- Hisham Mundol, heading the India Program operations in India is stepping down from the position. Here is Hisham's note of farewell on the mailing list.
- As per the announcement made by Barry Newstead, Chief Global Development Officer at the Wikimedia Foundation, WMF will be giving Center for Internet and Society (CIS), Bangalore a grant for two years to expand their Access to Knowledge (A2K) program.
- As per the announcement made by Sunil Abraham, heading CIS, Bangalore - CIS will be hiring all the existing consultants of India Program from September 1, 2012.
- CIS invites volunteers for the selection committee to recruit a Program Director for the A2K program. More details can be found here.
- CIS also announces a vacancy for the post of Program Director - A2K program. More details about the position can be found here.
For further questions or clarifications, you can write on my talk page or please feel free to mail me at nraval@wikimedia.org. Thank you. Noopur28 (பேச்சு) 10:22, 3 ஆகத்து 2012 (UTC)
விக்கிப்பீடியா கோப்பைப் பதிவேற்று பகுதியில் பிழை
[தொகு]1. கோப்பைப் பதிவேற்று பக்கத்தில் அனுமதி: எனும் கட்டத்தினுள் நூல் அட்டை என்பதைத் தேர்வு செய்தால் அதன் கீழ் வரும் வார்ப்புருவில் “ விக்கிப்பீடியாவின் நியாயமான பயன்பாடுக் கொள்கைகளைப் ஒரு முறை பார்க்கவும்.” என்று ஒரு வரி இடம் பெற்றுள்ளது. இதில் பயன்பாடுக் என்பதை பயன்பாட்டுக் என்றும், கொள்கைகளைப் என்பதை கொள்கைகளை என்றும் மாற்றி பிழைகளைத் திருத்திட வேண்டும். இதை “விக்கிப்பீடியாவின் நியாயமான பயன்பாட்டுக் கொள்கைகளை ஒரு முறை பார்க்கவும்” என்று சரி செய்திட வேண்டும்.
2. கோப்பைப் பதிவேற்று பக்கத்தில் அனுமதி: எனும் கட்டத்தினுள் விநியோகத்துக்காக விடப்பட்ட படிமங்கள் என்பதைத் தேர்வு செய்தால் அதன் கீழ் வரும் வார்ப்புருவில் ”தொடர்புடைய திட்டம் அல்லது நிகழ்ச்சி பற்றிய காடுரையில்” என்று இருப்பதில் காடுரையில் என்பது கட்டுரையில் என்று மாற்றம் செய்யப்பட வேண்டும். இதுபோல் மேலும் பல பிழைகள் இந்த வார்ப்புருவில் இடம் பெற்றிருக்கின்றன. இவைகளும் களையப்பட வேண்டும்.
மேலும் இந்தப் பகுதிக்கான வார்ப்புருக்கள் ஒவ்வொன்றையும் சரி பார்ப்பது நல்லது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:10, 4 ஆகத்து 2012 (UTC)
- நீங்கள் மேற்கூறிய இரண்டு திருத்தங்களும் சரி செய்யப்பட்டது. இங்குள்ள அனைத்து வார்ப்புருவையும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.--சண்முகம்ப7 (பேச்சு) 16:13, 4 ஆகத்து 2012 (UTC)
- உண்மைதான். ஒவ்வொரு வார்ப்புருவையும் ஒரு முறை சரி பார்த்து விடலாம். நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:40, 4 ஆகத்து 2012 (UTC)
கூடுதலாக, தமிழ் விக்கியின் தமிழ் இடைமுக மொழிபெயர்ப்புகளைச் சரி பார்க்க வேண்டுகிறேன். பல இடங்களில் எழுத்துப் பிழைகள் இருந்தன. இங்கே, மொழிபெயர்ப்புப் பகுதிக்கான இணைப்பைத் தந்தால் நன்றாக் இருக்கும். பிறரும் சரிபார்க்க இயலும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:16, 4 ஆகத்து 2012 (UTC)
- இங்கு கணக்கு ஒன்றை தொடங்கி, தொடர்ந்து வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள் தமிழ்க்குரிசில், பிறகு [2] மற்றும் [3] ஆகியவற்றை சரிபாருங்கள் (நிறைய பிழைகள் உள்ளன, நான் தமிழ் விக்கிக்கு வருவதற்கு முன் மொழிபெயர்த்த சில தகவல்கள் கூட இங்கு பொருந்தாமல் இருக்கும், நானும் நேரம் கிடைக்கும் போது சரிபார்க்கிறேன்). மாதப்பெயர்களை மாற்றிவிட வேண்டாம், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 03:03, 5 ஆகத்து 2012 (UTC)
பயனர் விருப்பத்தேர்வுகளில் சில இடங்களில் பிழை உள்ளன. கருவிகள் பகுதியில் பக்கத்தின் கடைசியில் ””ஒருகிணைக்கப்பட்ட”” என்று வருகிறது. அது போன்று கட்டுரையின் வரலாற்றைக் காட்டும் பக்கத்தில் “முந்தைய பத்திப்புகளை” என வருகிறது. இது வேற்று மொழி விக்கியை தமிழ் இடைமுகம் கொண்டு அணுகியபோது அறிந்தது. இதுபோன்றே அண்மைய மாற்றங்கள் பகுதியில் “வழிமாற்றுகளைப் மறை” என வருகிறது. திருத்தவும் இதுவும் வேற்று மொழி விக்கியில் பார்த்தது -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:09, 27 ஆகத்து 2012 (UTC)
- ஒருகிணைக்கப்பட்ட மற்றும் வழிமாற்றுகளைப் மறை இரண்டையும் சரி செய்துள்ளேன். ”பத்திப்புகளை” என்பது எங்கு வருகிறது என்று கண்டுபிடிக்க இயலவில்லை. இன்னும் கொஞ்சம் விரிவாக சுட்டுங்கள் சரி செய்ய முயலுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:07, 27 ஆகத்து 2012 (UTC)
- இங்கிருந்த பல பிழைகள் என்னால் திருத்தம் செய்யப்பட்டு விட்டன. சரி செய்த தகவலை இங்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன்.வருந்துகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 18:28, 27 ஆகத்து 2012 (UTC)
வலைவாசல்:கணிதம்
[தொகு]கணித வலைவாசலில் முடிக்கப்படாதிருந்த பகுதிகள் நிறைவுற்றுள்ளன. தொடர்ந்து பராமரிக்க வேண்டியுள்ளது. பொதுவாக விக்கியின் முக்கிய பராமரிப்புச் செய்வதுபோல் வலைவாசல் பராமரிப்பு பற்றி ஏதும் கொள்கையுள்ளதா? --Anton (பேச்சு) 18:56, 6 ஆகத்து 2012 (UTC)
- நன்றி அன்ரன். இந்த வலைவாசலுக்கு கணிதப் பகுப்பின் சில முக்கிய கட்டுரைகளில் இணைப்பைத் தந்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 22:30, 6 ஆகத்து 2012 (UTC)
- வலைவாசல் நன்கு அமைத்து இருக்கின்றீர்கள். நன்றி, பாராட்டுகள்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 13:40, 7 ஆகத்து 2012 (UTC)
- வலைவாசல் உருவாக்கம், பராமரிப்பு ஆகியவற்றுக்குக் கொள்கை ஏதும் இல்லை. வலைவாசல்களை உருவாக்குவோர் அவற்றை அவ்வப்போது இற்றைப்படுத்தி வந்தாலே போதுமானது. ஒரே வலைவாசலில் பல பயனர்கள் ஆர்வம் காட்டினால், அவர்கள் தங்களுக்குள் பேசி இற்றைப்படுத்தலைப் பொறுப்பெடுத்துக் கொள்ளலாம். ஒரு துறையில் தகுந்த உள்ளடக்கம் வந்த பிறகு, அதற்கு வலைவாசலை ஏற்படுத்துவது சரியான வளர்முகப் போக்கு. --இரவி (பேச்சு) 19:00, 8 ஆகத்து 2012 (UTC)
- வலைவாசல் நன்கு அமைத்து இருக்கின்றீர்கள். நன்றி, பாராட்டுகள்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 13:40, 7 ஆகத்து 2012 (UTC)
இணைப்பையிடு சாரளத்தில் தவறு
[தொகு]இணைப்பையிடு சாரளத்தில் தேடலிடும் போது விக்கியில் இல்லாத பக்கங்கலும் உள்ளவையாக காட்டப்படுகின்றன. தவறை திருத்த உதவவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:22, 7 ஆகத்து 2012 (UTC)
- எதைப்பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்கவில்லை. உதாரணம் ஒன்று தருகிறீர்களா?--Kanags \உரையாடுக 21:08, 8 ஆகத்து 2012 (UTC)
தொகுக்கும்போது கையொப்பமிடும் ஆளிக்கு வலது புறத்திலுள்ள ஆளியைச் சொடுக்கும்போது வரும் இணைப்பையிடு சாளரத்தைக் குறிப்பிடுகின்றார். எனக்கும் அவ்வாறே இல்லாத பக்கங்களும் உள்ளவையாகவே காட்டப்படுகின்றன. --மதனாகரன் (பேச்சு) 04:44, 9 ஆகத்து 2012 (UTC)
- மதனாகரன் குறிப்பிடுவதே. நிரலில் வழு இருக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:15, 9 ஆகத்து 2012 (UTC)
பேச்சுப்பக்க ஒன்றிணைப்பு
[தொகு]பேச்சு:தமிழ் மற்றும் பேச்சு:தமிழ் மொழி இரண்டையும் ஒன்றிணைக்கவும்.--பிரஷாந் (பேச்சு) 10:35, 9 ஆகத்து 2012 (UTC) ஆயிற்று
தட்டச்சு உதவி
[தொகு]நான் தமிழ்99 எழுத்துப்பெயர்ப்பையே பயன்படுத்தி வருகிறேன். அதுவும் நம் தளத்தில் நிறுவியுள்ள கருவியைப் பயன்படுத்தியதில்லை. அண்மையில் நடந்த பட்டறையில் பயனர் ஒருவருக்கு இந்தச்செயலியைப் பயன்படுத்தச் சொல்லித் தரும்போது நம்பி நகர எழுத்தை அடிக்கவே முடியவில்லை. எப்படி அடிப்பது என விளக்கினால் நல்லது. -- சுந்தர் \பேச்சு 11:57, 10 ஆகத்து 2012 (UTC)
- தமிழ் எழுத்துப்பெயர்ப்பில் நகரத்தைத் தட்டச்சிடுவதற்கு w என்ற விசையும் தமிழ்99 முறையில் ; என்ற விசையையும் பயன்படுத்த வேண்டும். நீங்கள் கேட்டது தமிழ்99ஆ தமிழ் எழுத்துப்பெயர்ப்பா? --மதனாகரன் (பேச்சு) 12:12, 10 ஆகத்து 2012 (UTC)
என்னால் இத்தளத்தின் ந-கரத்தை(;விசை), தமிழ்-99 தட்டச்சு முறையில் அடிக்க இயலுகிறது.--த♥ உழவன் +உரை.. 12:44, 10 ஆகத்து 2012 (UTC)
- மதன், தகவலுழவன் இருவருக்கும் நன்றி. எனக்கு தமிழ்99 முறையில் பழக்கம் உண்டு. புதுப்பயனருக்கு எழுத்துப்பெயர்ப்பு முறையில் தட்டும்போது எழுந்த சிக்கல் தான். W என அறியத்தந்தமைக்கு நன்றி, மதன். இந்த விசைக் குறியீடுகள் எங்காவது தரப்பட்டுள்ளதா? இருந்தால் தட்டச்சு உதவிப் பக்கத்தில் இணைக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 03:18, 11 ஆகத்து 2012 (UTC)
- என். எச். எம். இரைட்டரில் தமிழ்99, தமிழ் எழுத்துப்பெயர்ப்பு, பழைய தமிழ்த் தட்டச்சுப்பொறி, பாமினி ஆகிய முறைகளுக்கான திரை விசைப்பலகையைப் பெறலாம். --மதனாகரன் (பேச்சு) 03:42, 11 ஆகத்து 2012 (UTC)
தமிழ்99 நம்மிடமே உள்ளது. புதிதாக கற்க நினைப்பவருக்கு, எதை கற்பது என்ற தடுமாற்றம் வரும். அதனைத் தெள்ளத்தெளிவாக இரவியின் ஆய்தல் குறிப்புகள் நீக்கும். தமிழ்99 பற்றி இரவி எழுதிய வலைப்பூ கட்டுரையை, ஒரு முறை ஒருவர் வாசித்தால், அவர் தமிழ்99விசைப்பலகையை விடவே மாட்டார். அவர் இங்குள்ள கட்டுரையை இற்றைப்படுத்துவதே சிறப்பாக அமையும்.நான் அவ்விதமே கற்றேன்.--த♥ உழவன் +உரை.. 06:51, 11 ஆகத்து 2012 (UTC)
- நன்றி மதன், தகவலுழவன். இரவியின் பதிவைப் பலருக்கும் காட்டியிருக்கிறேன். நானும் முழுக்க முழுக்க தமிழ்99 அமைப்பையே பயன்படுத்துகிறேன். (அதனால்தான் எனக்கு இந்த W செய்தி மறந்தே போய்விட்டது!) -- சுந்தர் \பேச்சு 10:09, 11 ஆகத்து 2012 (UTC)
mw:Help:Extension:Narayam/Tamil/Transliteration இதனை நம் தட்டச்சு உதவிபக்கத்திற்கோ, அல்லது நமது தட்டச்சு உதவிப்பக்கத்தை mw:Help:Extension:Narayam இணைத்து, தட்டச்சு அறியாதவர்களுக்கு 1 பக்கத்தில் அனைத்து தகவல்களும் தர வேண்டும். பட்டறைகளுக்கு மட்டுமல்லாமல் பொதுவாகவும் இது உதவும். திரையில் விசைப்பலகை (on screen keyboard), தட்டச்சு பயிற்சிக் கருவி முதலியவை பயனுள்ளதாக இருக்கும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 11:41, 11 ஆகத்து 2012 (UTC)
- இணைப்புக்கு நன்றி, சிரீகாந்து. இதை விக்கிப்பீடியா:தட்டச்சு உதவி பக்கத்தில் இணைக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 16:01, 11 ஆகத்து 2012 (UTC)
விக்கிப்பீடியா படிமங்கள்
[தொகு]தமிழ் விக்கியின் திரைத் தோற்றத்தின் பகுதிகளை படமெடுத்து வைத்துள்ளீர்களா? (உதாரணம்:கையொப்பம் இடும் பட்டன் உள்ளதே அது போல), இந்த படிமங்களை எப்படி தேடிக் கண்டறிவது?? இவற்றை பயன்படுத்த விரும்புகிறேன். விரிவான பதில் கூறவும். நன்றி! தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:29, 10 ஆகத்து 2012 (UTC)
விக்கிப்பொதுவகத்தில் காணலாம். அதன் பிற பகுப்புகளிலும் தேவையெனில் காணுங்கள்--த♥ உழவன் +உரை.. 12:50, 10 ஆகத்து 2012 (UTC)
தமிழாக்கம் தேவை
[தொகு]list of tamil people என்பதற்கு தமிழாக்கம் தேவை. தமிழுக்கு மொழிபெயர்க்க விரும்புகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:27, 11 ஆகத்து 2012 (UTC)
- புகழ்பெற்ற தமிழர் பட்டியல் அல்லது தமிழ் மாந்தர் பட்டியல் எனலாம்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:59, 11 ஆகத்து 2012 (UTC)
நன்றி ஐயா! தமிழர்களின் பட்டியலில் பிறப்பால் தமிழர் அல்லாதவரை சேர்க்கலாமா? பிற மொழியினராய் இருந்தும், தமிழரோடு, தமிழோடு வாழ்ந்து, தம்மை தமிழர் என அடையாளப்படுத்திக் கொள்பவர்களை, தமிழர் எனக் கூறுவதில் தவறில்லையே. பிற்ழ்ச்சனை வருமா?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:28, 11 ஆகத்து 2012 (UTC)
{.{#language:|ta}}
[தொகு]மேற்கண்ட நிரலைப் பயன்படுத்தும் போது, கீழ்கண்டவாறு தமிழ் மொழிபெயர்ப்பு தானாகவே, ஆங்கிலத்தில் இருந்து வரும்.அப்படி மாறும் போது வரும் சொற்களில் கிரந்தம் உள்ளது. (தொகு என்பதனை திறந்து பார்க்கவும்)
- Malagasy
- மலகாஸி அக்கிரந்தத்தைக் களைவது எப்படி? மலகாசி அ மலகாசியம் என வரவேண்டும். இதுபோல, பல en:ISO_639 குறியீட்டின் மொழிபெயர்ப்புகள் தவறாகவே அமைந்துள்ளன. எங்கு மாற்ற வேண்டும்.பக்கத்தொடுப்பு தருக.--த♥ உழவன் +உரை.. 19:13, 11 ஆகத்து 2012 (UTC)
{{#language}} என்பது mw:Extension:CLDR மூலம் இயங்கக்கூடிய செயலாற்றி. en:CLDR என்பது ஒருங்குறி ஆணையத்தின் பொதுவான வட்டார மொழித் தரவுதளம். அனைத்து மொழிகளிலும் உலகிலுள்ள அனைத்து வட்டாரத் தகவல்கள் (மொழி பெயர், நாணயம், மாதங்கள், எண் முறைகள் ...) கொண்டுள்ள தகவல் தளம். இந்த இணைப்பில் தற்பொழுதுள்ள தமிழ் பெயர்களைப் பார்க்கலாம். இது CLDR இன் தரவிலிருந்து மீடியாவிக்கிக்கு கொண்டுவரப்பட்ட தகவல். அனைத்து மொழியின் பெயர்களும் தமிழில் பிழையில்லாமல் இருப்பது அவசியம். உலகளாவிய மொழி தேர்வு நீட்சி இதனைப் பயன்படுத்தும். இதில்(CLDR) பல பிழைகள் இருக்கின்றன. இது போல் தமிழில் வேறு ஏதேனும் தரவுதளம் உள்ளதா? ஒப்பிட்டுப் பார்க்க உதவும்.
CLDR தரவில் பிழைகள் இருந்தால் இக்கருவி மூலம் திருத்தம் செய்யலாம். (இது அவ்வளவு எளிதாக இல்லை :( ). இதில் கிரந்தம் தவிர்க்கும் முறையை / பொது வழக்கில் இல்லாத கிரந்தம்(ஶ முதலிய) / பொது வழக்கில் இல்லாத எந்த சொல்லையும் பயன்படுத்துவதை நான் ஊக்குவிக்க மாட்டேன் ஏனெனில் இது விக்கித் திட்டங்கள் / மீடியாவிக்கிக்கு மட்டுமல்லாமல் அனைத்து மென்பொருட்களுக்கும் பொதுவான தமிழிலுள்ள கணித் தரவுதளம். நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 07:54, 12 ஆகத்து 2012 (UTC)
- வழக்கம் போல, ஆழமான, ஆர்வமானத் தகவல்களை அளித்துள்ளீர்கள்.மிக்க நன்றி.ஸ்ரீகாந்த்!. மக்களின பயன்பாட்டில் இல்லாச்சொற்களை உருவாக்குவதையோ அல்லது பயன்படுத்துதலோ எனது நோக்கம் அன்று. ஆனால், தலைவிதியே என்று இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் இயல்பும் அற்றவன் நான். மூல ஒலிக்கோப்பு இல்லாமல், எந்த சொல்லையும் உருவாக்குதல்/மாற்றுதல் காலத்தைக் கடந்து நிற்காது என்று எண்ணியே செயல்படுகிறேன்.
- பொதுவாக கிரந்தம், வடமொழி குறித்தும் பெரும் தாக்கத்தைத் தமிழில், பலர் ஏற்படுத்தியுள்ளனர். அதில் எனக்கு, பாவாணர் ஆய்வு மிகவும் உயரியது. அதிக மொழிகளைக் கற்ற தமிழறிஞர் என்பதால், அவரின் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்.அவரின் பலசொற்களை நாம் இன்னும் நடைமுறைபடுத்தவில்லை என்பதும் வேதனை. சிலர், அச்சொற்களில் சிலவற்றை எடுத்தாண்டு, தனது கண்டறிதலாகக் காட்டிக் கொள்ளுதல் அதைவிட வேதனை.
- என்னைப்பொறுத்தவரையில், நான் விரைவாக தட்டச்சிட இந்த கிரந்த எழுத்துக்கள் பல தடைகளை உருவாக்குகிறது.அதனால் அதனை இயன்றவரைத் தவிர்க்கிறேன்.ஹிந்தி என்பதனை விட இந்தி எனக்கு எளிமையாகவும், மூல ஒலியை நினைவூட்டுவதாகவும் உள்ளது. மலகாசி என்பதும் மலகாஸி என்பதும் ஏறத்தாழ ஒன்றுதானே? மூல ஒலிக்கோப்பினை உருவாக்கி விட்டு இதுபற்றி தொடர்வோம். தேவைப்படும் சொற்களை, மறுசீரமைப்பு அவசியம். எனது பணி இந்த தலைப்பு மாற்றுதல் மட்டுமன்று.பிற தலையானப் பணிகளையும் தொடர்ந்து செய்தலே ஆகும்.
- மேற்கூறிய நிரலைப் பயன்படுத்த வேண்டிய தேவையாதெனில், விக்சனரி திட்டத்தில் பல மொழிகளை கையாளவேண்டிய தேவையுள்ளது. பலமொழியினரும், அவ்வப்போது வந்து செல்வதுண்டு. இனி அச்சூழல் வளரும். அவர்களுக்கும் இது எளிமையாக உதவும் என்ற நோக்கத்தில், வார்ப்புருக்களிலே பயன்படுத்த எண்ணியுள்ளேன்.மேலும், பகுத்தலுக்கும் எளிமையாக உதவுகிறது. அங்கு மாற்றாமல், இங்கு வேண்டிய மாற்றங்களை கொண்டு வர அதைப்போன்ற வேறு நிரல்கள் உண்டா?--த♥ உழவன் +உரை.. 05:33, 13 ஆகத்து 2012 (UTC)
- நான் இங்கு கிரந்தம் பற்றி கவலைப்படவில்லை. பார்ஸி என்பதற்கு பதிலாக பாரசீகம் என இருப்பதே சரி. இங்கு 'கிரந்த நீக்கல்' அவசியம் எனப்படுகிறது. க்ரீக் அல்ல கிரேக்கம் தான். இலக்கணம் காரணமாக இல்லை, பொது வழக்கின் காரணமாக. இதுபோல் பொதுவழக்குப் பிழைகளைக் களைவதற்காகத் தான் ஒப்பிட்டு பார்க்க வேறு தனிப்பட்ட தரவு இருக்கிறதா என்று கேட்டேன். இங்குள்ள பலருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, தமிழ் விக்கிப்பீடியாவின் சொல் தெரிவு முறை பற்றி பொதுவாக தமிழ்க் கணினி பயனர்களிடையே (வலைப்பதியர்கள் உட்பட, பக்கப்புள்ளிவிவரங்கள் ஏற்முகமாகவே இருப்பது என்பது வெற்று வாதம், ஆளில்லா மனிபுரி விக்கிகு கூடத்தான் அவ்வாறு இருக்கிறது) இணக்கமில்லாததால், இங்கு சிலர் முன்னர் கூறியது போல் 'தனித்த தமிழ்' முறை அங்கு(CLDRஇல்) வேண்டாம் என்பதே என் கருத்து. ஜனவரி, ஃபிப்ரவரி, மார்ச்(சு அல்ல), ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர்(திசம்பர் அல்ல), டாலர், யூரோ, ஜப்பான் என்பது எல்லாம் பொது தமிழ்-இந்திய வழக்கு. இலங்கை வழக்கு வேண்டுமென்போர் ta-lk தரவுகளை இலங்கைப் பொது வழக்குப்படி(கவனிக்க கிரந்தம்/இலக்கணப் பிழை பற்றி கவலைப் படாமல்) மாற்றலாம். தனிப்பட்ட முறையில் எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் பொதுவழக்கிற்கு காலத்தோடும், ஊரோடும் ஒத்து வாழ்வது சிறந்தது. (Srikanth என உச்சரிக்கும் என் பெயரை ஸ்ரீகாந்த் என்று எழுதுவதே சரி என்றாலும், ஊருடன் ஒத்து இருக்க Srirangam என உச்சரிக்கப்படும் ஊரை ஸ்ரீரங்கம் என தவறாக எழுதினால் கூட அது தான் சரி). மாற்றங்கள் வேண்டுமென்போர் பிற தளங்களைப் பயன்படுத்த வேண்டும். நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 21:44, 14 ஆகத்து 2012 (UTC)
- சிரீகாந்து, நீங்கள், "இதில் கிரந்தம் தவிர்க்கும் முறையை / பொது வழக்கில் இல்லாத கிரந்தம்(ஶ முதலிய) / பொது வழக்கில் இல்லாத எந்த சொல்லையும் பயன்படுத்துவதை நான் ஊக்குவிக்க மாட்டேன் ஏனெனில் இது விக்கித் திட்டங்கள் / மீடியாவிக்கிக்கு மட்டுமல்லாமல் அனைத்து மென்பொருட்களுக்கும் பொதுவான தமிழிலுள்ள கணித் தரவுதளம். " என்று கூறுவது கவலை அளிக்கின்றது. கிரந்த எழுத்துகள் மட்டும் அல்ல, தமிழில் வழிவழியாக வரும் பல அறிவார்ந்த இலக்கணக் கூறுகள் ஒரு சிலரால் மிகவும் பொறுப்பற்ற முறையில் சீர்குகுலைக்கப்படுகின்றன. இங்கு நான் சீர்திருத்தம் பற்றிக் கூறவில்லை, அடிப்படை விதிகளைப் பின்பற்றுவது பற்றிக் கூறுகின்றேன். ஆங்கிலத்தில் "a cat, an act" என்று விதியறிந்து எழுதுவதைப் போற்றுவது போலவே, தமிழிலும் செய்தல் வேண்டும் அல்லவா? தமிழில் எழுத்துகள் பற்றியும் (குறில், நெடில் என்ற விதிமுறைகளும் மூன்று மாத்திரையுடன் ஓரெழுத்து வராமை; விதிவிலக்காக இசையில் உண்டு என்றும் கூறியுள்ளதும்), சொற்களில் வரக்கூடிய முதல் எழுத்து, கடைசி எழுத்து, இடையே மெய்யொலிக்கூட்டங்கள், சொற்றொடர்கள் போன்று ஒவ்வொன்றுக்கும் தெளிவான இலக்கண விதிமுறைகள் தந்திருக்கின்றார்கள். இவை மிகவும் அறிவார்ந்ததும் நுட்பமானதுமான விதிகள். தமிழின் விதிகள் தமிழின் தன்னியல்போடு எளிமையையும் சிக்கனத்தையும் (parsimony) போற்றுவன, உரோமன் எழுத்துகளையும் (இவை 52), கிரந்த எழுத்துகளையும் (இப்பொழுது இவை 79!!) தமிழில் கலந்து எழுதுவது அறிவுடைய செயல் அன்று, தமிழில் இலக்கணம் சார்ந்ததும் அன்று. இங்கு தமிழ் விக்கிப்பீடியாவில் பின் பற்றும் முறை (பொது ஏற்போடு), சரியான முறை, பொதுவிலும் பின்பற்றவேண்டிய முறை. சிலர் அறியாமலும், பொறுப்புணர்வில்லாமலும் எழுதுவதால், அதனை ஏற்க வேண்டும் என்பது சரியான முடிவு அன்று. நீங்கள் தந்துள்ள பட்டியலில் பல மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளன! தவறானதை முன்னிறுத்தாதீர்கள்.--செல்வா (பேச்சு) 16:57, 14 ஆகத்து 2012 (UTC)
- செல்வா, நான் கிரந்தம் பற்றி பேசப்போவதில்லை, இடம், பொருள், நேரம் சரியல்ல. தமிழை சீர்குலைக்கிறார்கள் என்றால் பிரச்சனையின் வேறிலிருந்து களைவதே நல்லது. Fix the bug in upstream and its fixed forever. இங்கு upstream சமூகம் என்பதால் பள்ளி/கல்லூரி கல்வி வழியாக சரிசெய்யலாம். இணையத்தில் சிறு விழுக்காடு மக்களிடையே மட்டும் கருத்தாடுவதால் பயனில்லை / பிழையையும் மக்கள் அறிந்து, திருத்திக் கொள்ளப்போவதில்லை. வீண் வாதங்கள் தான் மிச்சம் என்பது என் கருத்து. ஆனால் இப்பொது இருக்கும் கணினி பயனர்களுக்கு பயன்பட வேண்டுமாயின் பொது வழக்கு பிழையாக இருப்பினும் கடைபிடிப்பதே சிறந்தது. ஸ்ரீகாந்த் (பேச்சு) 21:57, 14 ஆகத்து 2012 (UTC)
- நான் இந்த உரையாடலை நீட்டிக்க விரும்பவில்லை. கிரந்தம் அல்லாத பிறவற்றைப் பற்றியும் இருக்கும் சிக்கல்களைப் பற்றியாவது தக்க இடத்திலே உரையாடி முடிவுகளுக்கு வரவேண்டும். மார்ச்சு என்றுதான் எழுதுதல் வேண்டும். கடைசியில் வரும் சு என்னும் எழுத்து "ச்" என்று நிறுத்த உதவும் சிறிய உயிரொலி கொண்ட ஓரெழுத்து அதனை அழுத்தியும் நீட்டியும் சூ என்று என்று கூறுதல் கூடாது. அது குற்றியலுகரம். "ச்" என்று நிறுத்தவே முடியாது (அடுத்து ஓர் சிறு உயிரொலி வராமல்), எந்த மொழியாளராலும்.!! " மார்ச்சில் இருந்து ஏப்பிரல் வரை, மார்ச்சோடு இது முடிவு பெறும்" என்றெல்லாம் வரும் பொழுது அந்தக் குற்றியலுகரம் மறைந்து அடுத்து வரும் இ, ஓ ஆகியவற்றுடன் இணைவதைப் பார்க்கலாம். மார்ச் என்று பிழையாக எழுதினாலும், மார்ச்+இல் = மார்சில் என்பீரா மார்ச்சில் என்பீரா? இவற்றை எதற்காக இங்கே கூறுகின்றேன் என்றால், தமிழில் எழுதும்பொழுது தமிழ் இலக்கண விதிகளைக் கூடிய மட்டிலும் நன்றாக பின்பற்றுவது நல்லது, அது தேவை. ஆங்கிலத்தில் எழுத்துப்பிழை இருந்தால் மில்லியன் பவுண்டு/தாலர் அளவு நட்டம் ஏற்படும் என்று வணிக நிறுவனங்கள் நினைக்கின்றனவாம், படிப்பவர்களுக்கு நம்பிக்கை வராதாம், மதிப்புக் குறைந்துவிடுமாம், எனவே எழுத்துப்பிழை இல்லாமல் இருப்பது மிகத்தேவை என்கிறார்கள். தரம் நிறுவுவதாக அமையும் கலைக்களஞ்சியம் போன்றவற்றில் நல்ல உரைநடையில், பிழை இல்லாமல் இருப்பது மிகவும் தேவை. --செல்வா (பேச்சு) 13:20, 15 ஆகத்து 2012 (UTC)
- செல்வா, நான் கிரந்தம் பற்றி பேசப்போவதில்லை, இடம், பொருள், நேரம் சரியல்ல. தமிழை சீர்குலைக்கிறார்கள் என்றால் பிரச்சனையின் வேறிலிருந்து களைவதே நல்லது. Fix the bug in upstream and its fixed forever. இங்கு upstream சமூகம் என்பதால் பள்ளி/கல்லூரி கல்வி வழியாக சரிசெய்யலாம். இணையத்தில் சிறு விழுக்காடு மக்களிடையே மட்டும் கருத்தாடுவதால் பயனில்லை / பிழையையும் மக்கள் அறிந்து, திருத்திக் கொள்ளப்போவதில்லை. வீண் வாதங்கள் தான் மிச்சம் என்பது என் கருத்து. ஆனால் இப்பொது இருக்கும் கணினி பயனர்களுக்கு பயன்பட வேண்டுமாயின் பொது வழக்கு பிழையாக இருப்பினும் கடைபிடிப்பதே சிறந்தது. ஸ்ரீகாந்த் (பேச்சு) 21:57, 14 ஆகத்து 2012 (UTC)
- குறிப்பு: //உரோமன் எழுத்துகளையும் (இவை 52), கிரந்த எழுத்துகளையும் (இப்பொழுது இவை 79!!) தமிழில் கலந்து எழுதுவது அறிவுடைய செயல் அன்று// ஐந்தாறு பயனர்கள் தவிர மற்ற அனைவரும் நானறிந்தவரை (நான் உட்பட) கிரந்தம் சேர்த்துதான் பல இடங்களில் எழுதுகிறோம்.--சண்முகம்ப7 (பேச்சு) 17:51, 14 ஆகத்து 2012 (UTC)
- சண்முகம், முதலில் கிரந்தம் என்பதை சற்று விட்டுவிட்டு மற்றவை பற்றிப் பேசுவோம்/ பிறகு கிரந்தத்துக்கு வருவோம். சொல்லின் முதல் எழுத்துகள், கடை எழுத்துகள், மெய்யொலிக் கூட்டங்கள் பற்றிப் பேசுவோம். ஆங்கிலத்தில் ஒரு விதி முறை இருந்தால் பின் பற்றுகின்றோமா இல்லையா? அதுபோல் தமிழ் மொழியில் உள்ள இலக்கண விதிகளைப் பின்பற்ற வேண்டாமா? பலர் K.M. கிருஷ்ணன் என்று எழுதுவதால் உரோமன் எழுத்துகளைச் சேர்த்து எழுதுதல் முறையாகுமா? தமிழ் எழுத்துகள் என்பன தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் எழுத்து, சொல், சொற்றொடர் பற்றிய இலக்கணங்கள் தெளிவாக உள்ளன. நான் உட்பட எழுதுகின்றேன் என்று கூறும் வாதங்களால் தெளிவு பிறக்காது. நானும்கூட எழுதினேன் என்று சொல்ல முடியும். பிற மொழி ஒலிப்பை மட்டும் முதன்மைப் படுத்த வேண்டும் எனில் எத்தனையோ முறைகள் உண்டு (அப்படி முதன்மைப்படுத்த வேண்டுமா என்பது முற்றிலும் வேறான கேள்வி). Gandhi என்பதை நான் கா'ந்தி என்றும் அதே போல் பா'பு, டா'டி, ச'கன்னாதன், தா'தாபாய் நவுரோசி' என்று கிரந்தம் இல்லாமலே இன்னும் கூடுதலான ஒலிப்புகளைக் காட்ட இயலும். ஆனால் தமிழல்ல இவை! 90-95% விழுக்காட்டு மக்களுக்கு எளிமையான தமிழே இயல்பானது. சிக்கனம் எளிமை என்பதை ஏன் விட்டுவிட வேண்டும். அனுமன், இந்தி, இமயம், சிநேகிதன், தலம், என்று ஆயிரக்கணக்கான சொற்களில் கிரந்தம் இல்லாமல் எழுதி இருக்கின்றோமே. ஹனுமான் என்று என்று சொல்லிப்பாருங்கள் அனுமான் என்று சொல்லிப்பாருங்கள். எதில் முயற்சி அதிகம்? மூச்சை ஏன் வீணாக்க வேண்டும்? என்னால் Haனுமான் என்று எழுத இயலும் என்பதால் அப்படி எழுதிவிடலாமா? தமிழில் 131 எழுத்துகளை நுழைப்பதை ஏன் ஏற்க வேண்டும். Gandhi என்று உரோமன் எழுத்தில் எழுதினாலும் ஆங்கிலேயர் Candy என்பது போல் ஆனால் Gandy என்றுதானே ஒலிக்கின்றனர். தமிழ் என்பதை Tamil என்றுதானே எழுதி ஒலிக்கின்றனர். மொழிக்கு மொழி மாறுபடும் இயல்புகள் இருபப்தை பிறமொழிக்கு இருப்பது போல் தமிழுக்கும் இருப்பதை ஏன் மறுக்கின்றீர்கள்?! --செல்வா (பேச்சு) 18:32, 14 ஆகத்து 2012 (UTC)
- குறிப்பு: //உரோமன் எழுத்துகளையும் (இவை 52), கிரந்த எழுத்துகளையும் (இப்பொழுது இவை 79!!) தமிழில் கலந்து எழுதுவது அறிவுடைய செயல் அன்று// ஐந்தாறு பயனர்கள் தவிர மற்ற அனைவரும் நானறிந்தவரை (நான் உட்பட) கிரந்தம் சேர்த்துதான் பல இடங்களில் எழுதுகிறோம்.--சண்முகம்ப7 (பேச்சு) 17:51, 14 ஆகத்து 2012 (UTC)
- செல்வா, இலக்கண முறைப்படியான மாற்றங்களை எப்போதும் மறுத்ததில்லை, பிறமொழி வணிகப் பெயர்களில் இலக்கணப் பிறழ்ச்சிகள் இருந்தாலும் மாற்றக் கூடாது என்பது என் கருத்தாயினும், இலக்கணப் பிழைகளை சுட்டும் போது ஏற்றுக் கொண்டேயிருக்கிறேன் (இது பற்றியும் உரையாட வேண்டும், பிறிதொரு உரையாடலில் உரையாடுவோம்). இங்கே இந்த உரையாடலைப் படிக்கும் போது சில வரிகள் எனக்கு சற்று வித்தியாசமாக தோன்றியது. எனக்கு தெரிந்தவரை பெரும்பாலானோர் தமிழ் விக்கிப்பீடியாவில் இன்றும் கிரந்தம் சேர்த்து எழுதும்போது தாங்கள் தமிழில் கலந்து எழுதுவது அறிவுடைய செயல் அன்று என்று கூறியது எனக்கு சற்று முரணாகப் பட்டது. அதனாலேயே என் கருத்தை பதிந்தேன். மேலும் சில கருத்துகள்: இங்கு K.M என சேர்த்துதான் எழுத வேண்டும் என்று வாதிட்டதாக எனக்கு தெரியவில்லை (ஆனால் தமிழில் KM என்னவென்று தெரியவில்லையெனில் கேஎம் என்று எழுதுகிறோமே அது தவறில்லையா?), மேலும் உரோம எழுத்துக்களை சேர்த்து எழுத வேண்டும் என்றும் யாரும் வாதிட்டதாகவும் தெரியவில்லை. ஆதலால் இது முற்றிலும் கிரந்தம் பற்றியது. எனக்கு தெரிந்து சில பழைய உரையாடல்களை படித்ததில் பெரும்பாலான பயனர்கள் கிரந்தம் பற்றி ஏதும் உரையாடல்களில் தங்கள் கருத்துக்களை சொல்வதில்லையோ என்றொரு சந்தேகம் ஏற்பட்டது . தமிழில் 131 எழுத்துக்களை நுழைக்க சொல்லவில்லையே, ஏற்கனவே நுழைந்துவிட்ட ஐந்து எழுத்துக்களை எழுதுபவர்கள் எழுதட்டுமே (விரும்புபவர்கள் தவிர்த்து எழுதட்டும், அதற்காக கட்டாயப்படுத்த வேண்டுமா?). தமிழில் எங்கேயும் கிரந்தம் பயன்படுத்துவது இல்லை என்கிறபோது, நான் விக்கியில் முற்றிலும் கிரந்தம் தவிர்ப்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதுவரை கிரந்தம் சேர்த்து எழுதுபவர்கள் அவ்வாறே எழுதலாம் என்பதே என் கருத்து. மேலும் இங்கு பங்களிப்பவர்கள் (படிப்பவர்களும் கூட) யாவரும் தமிழ் இலக்கணங்களை முற்றும் அறிந்த தமிழறிஞர்கள் இல்லையே, முற்றிலும் தமிழ் இலக்கணப்படிதான் எழுத வேண்டும் என்பது அவர்களால் இயலும் காரியமா எனவும் சற்று எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன் (தமிழைக் காக்க வேண்டும் என்பது இங்கு பங்களிக்கும் அனைவரின் நோக்கமும் எனினும் நடைமுறையில் உள்ளதையும் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்). மேலும் என்னால் Haனுமான் என எழுத இயலும் என்பதால் நான் அவ்வாறு எழுத வேண்டும் என்று வாதிடவில்லையே, அனுமான், ஹனுமான் இரண்டும் வழக்கில் பல காலமாக உள்ள போது அவற்றில் ஏதோ ஒன்றை உபயோகப்படுத்துவதில் என்ன தவறு?.. மேலும் ஜாதிகள் இல்லையடி பாப்பா எனக் கூறிய பாரதியும், பாரதிதாசனும் அறிவற்றவர்களா? தமிழ் பற்று இல்லாதவர்களா? தமிழ் அறியாதவர்களா? (இதிலிருந்து இங்கு அல்லது இக்காலத்தில் யாரும் கிரந்தத்தை தமிழில் புகுத்தவில்லை என்பதை அறியலாம்), ஒலிப்பு பற்றி கூற இப்போது நேரம் இல்லை, பிறிதொரு உரையாடலில் உரையாடலாம்,நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 19:41, 14 ஆகத்து 2012 (UTC)
- சண்முகம், மேலே சிரீகாந்து குறிப்பிட்டது ஒரு பொது பட்டியல், அதில் சரியான வழக்கு பதிவாவது நல்லது என்னும் நோக்கில் என் கருத்துகளை முன் வைத்தேன். "வணிகப் பெயர்களில் இலக்கணப் பிறழ்ச்சிகள் இருந்தாலும் மாற்றக் கூடாது" என்று கூறும் நீங்கள் வணிக நிறுவனத்தை விட பல்லாண்டுகள் வாழ்ந்து வந்திருக்கும் மொழியின் வழக்கத்தை மாற்றக்கூடாது என்று கூறுவோருக்கு என்ன மறுமொழி தருவீர்கள்? தமிழில் B, G, முதலான பல எழுத்தொலிகள் சில இடங்களில் வரும் எனினும் முதலெழுத்தாக வரவியலாதே அதற்கு என்ன செய்ய இயலும்? திரித்துத்தானே எழுதுகின்றோம். எனவே மாற்றாமல் எழுதுதல் இயலாது என்று புரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? பிறமொழிகளிலும் அவர்கள் எழுத்துகளில் எழுதினாலும் ஒரே மாதிரியாக ஒலிப்பது கிடையாது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டால் "மாற்றக்கூடாது" என்பதன் கருத்து வலுவிழக்கும். நாம் எழுதுவது நம் மொழியில் புரிவதற்காக, வழங்குவதற்காக. K.M. போன்ற உரோமன் எழுத்துகளையும் சேர்த்து எழுதுவதை எதற்காகக் கூறினேன் எனில், பலர் ஒன்றைச் செய்கின்றார்கள் என்பதால் அது சரியாகாது என்று சுட்டிக்காட்ட. இப்பொழுது சிலர் ஊர்களின் பெயரைக் கூட உரோமன் எழுத்தை முன் வைத்து எழுதுகின்றனர் (எ.கா. R.புதூர், S.நல்லூர், S.கோடிக்குளம்). இவை சீரழிப்புகளின் பல கோணங்கள் சில. அனுமான், ஹனுமான் இரண்டு வழக்கங்களும் இருப்பதாகக் கொண்டாலும் அனுமான் என்னும் வழக்குக்கு முன்னுரிமை தருதல் வேண்டும் அல்லவா (தமிழில் எழுதும் பொழுது தமிழ் எழுத்துகளில் இருப்பதாலும், பொதுவாக எல்லோருக்கும் எளிமையாக இருப்பதாலும்; மூச்சுச் சிக்கனம் இருப்பதாலும்)? பாரதி சாதிகள் இல்லையடி பாப்பா என்றுதான் பாடினார் என்று நினைவு, ஆனால் பாரதி பல இடங்களில் குறிப்பாக உரைநடைகளில் கிரந்தம் கலந்து எழுதியுள்ளார். அவர் காலத்தில் உரோமன் எழுத்தைக் கலந்து எழுதியவர்களும் இருந்தனர். அவர் காலத்தில் அக்கிராசனர், அபேட்சகர் என்று கடுமையான சமற்கிருதத் தாக்கத்துடன் எழுதும் பழக்கங்களும் இருந்தன. பாரதியார் காரியதரிசி என்னும் சமற்கிருதத்துக்கு மாற்றாக நல்ல தமிழ்ச்சொல் ஒன்றைக் கண்டுபிடிக்கத் திணறியதும் வரலாறு. இன்று செயலாளர், செயலர் என்பன வழக்கில் உள்ளன. நல்ல தமிழில் எழுதுவதைப் பாரதி போன்றோர் கட்டாயம் வரவேற்றிருப்பர்! எளிமையும் சீர்மையும், அதுவும் குறிப்பாக பொதுப் பட்டியலாக இருக்கும் இடங்களிலும், தரம் நிறுவும் எழுத்துகளாக இருக்கும் இடங்களிலும் தமிழை முதன்மைப் படுத்தி, எல்லோருக்கும் எளிதாக இருக்கும் முறையில் எழுதுவது நல்லது. --செல்வா (பேச்சு) 20:41, 14 ஆகத்து 2012 (UTC) விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 02:57, 15 ஆகத்து 2012 (UTC)
- கிரந்தம் பற்றிய உரையாடல்கள் அடிக்கடி எழுகின்றன. இவை தொடர்பாக நல்ல முடிவொன்றை எடுப்பது நல்லது. ஆங்கில எழுத்துகளைத் தலைப்புகளில் பயன்படுத்தாது கே, எம் என்றவாறே விக்கிப்பீடியாவில் எழுதுவது போலக் கிரந்தத்தையும் தவிர்க்கவே வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவிலே தமிழ் எழுத்துகள் அல்லாதவை பாரிய அளவில் பயன்படுத்தப்படுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? பொது வழக்கு என்பதற்காக ஒன்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை. --மதனாகரன் (பேச்சு) 02:57, 15 ஆகத்து 2012 (UTC)
- பல பழைய கிரந்த உரையாடல்களை படித்ததில் இருந்து நாமிருவரும் மாறி மாறி உரையாடுவது ஒரு முடிவிற்கு வராது என்பதனையும், நேரம்தான் விரயமாகும் என்பதனையும் புரிந்து கொண்டேன். என்னுடைய கருத்து/தீர்வு இதற்கு என்னவெனில் மதன் கூறியது போல தமிழ் விக்கியில் கிரந்தம் அறவே பயன்படுத்தக் கூடாது, அனைவரும் சிறிதும் இலக்கணம் பிசகாமல் தொல்காப்பிய, நன்னூல் முறைப்படிதான் எழுத வேண்டும் என்றொரு கொள்கை முடிவை கொண்டு வாருங்கள். ஓரிரு மாதங்கள் அனைத்து பயனர்களின் கருத்தையும்/வாக்கெடுப்பு கேட்போம். ஐ.பி பயனர்கள், முடிந்தால் வெளியுலக தமிழறிஞர்கள் உட்பட அனைவரின் கருத்தையும் கேட்போம். தள அறிவிப்பு, ஆங்கில விக்கி Geo location அறிவிப்பு, சமூக வலைத்தளங்கள் போன்ற இயன்ற அனைத்து இடங்களிலும் இக்கருத்து கேட்பு பற்றி பரப்பலாம் (இது தமிழ்ச் சமூகத்தின் கருத்தை தெரிந்து கொள்வதற்காக, முடிவு எடுக்க அல்ல). முடிவு எடுக்கும் போது தமிழ் விக்கி சமூகத்தின் (அனைத்து தமிழ் விக்கித்திட்டமும்) பயனர்கள் அனைவரின் ஒத்த கருத்து இருக்குமானால் அந்த கொள்கையை கண்டிப்பாக அமல்படுத்தலாம், அதை விடுத்து இவ்வாறு ஒவ்வொரு பக்கங்களிலும் உரையாடுவது (சில கட்டுரைகளில், தலைப்புகளில் மட்டும் கிரந்தம் தவிர்ப்பது/முன்னிலைப்படுத்துவது என்பது சரியானதாக எனக்கு தோன்றவில்லை), அனைவரது நேரத்தையும் விரயமாக்கும், தனிப்பட்ட மனக்கசப்பை கூட ஏற்படுத்தலாம்.--சண்முகம்ப7 (பேச்சு) 04:48, 15 ஆகத்து 2012 (UTC)
தொழில்நுட்பம்+கிரந்தமும் இல்லை;தமிழும் இல்லை
[தொகு]- தொழில்நுட்பம்:இணையத்தமிழில் இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பற்றி அலசவும்,களையவுமே இதனைக்கேட்டேன். இங்கு தமிழின் சிறப்புகள் பற்றி மட்டுமே அலசப்படுகிறது. அதுதான் தமிழை செம்மொழி என்று, உலக அறிஞர்கள் ஏற்றுக் கொண்டார்களே.அப்புறம் என்ன? இப்படி அரைச்ச மாவையே அரைச்சுகிட்டு இருந்தா, நமது மொழி பின்தங்கும்.கிரந்தத்தைத் தவிர, பிறமொழிகளின் ஆளுமை தமிழில் வேர்விட ஆரம்பித்து விட்டது.அதனை அழிப்பதற்கு நாம் என்ன செய்யலாம்? ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் உட்கார்ந்து, தமிழின் பெருமையைப் பேசிக்கொண்டே இருந்தல் மட்டும் போதுமா? தேவையான தொழில்நுட்ப நடைமுறைகளை பரிந்துரையுங்கள்.
- சொல்லாக்கம்:ஆலமரத்தடி எவ்வளவு அழகானச்சொல். ஆனால், இங்கு நாம் கையாளும் பல சொற்கள். தமிழ் அல்லவே. தமிழ் எழுத்தைப் போர்த்திக்கொண்டு இருக்கும், அச்சொற்களை மாற்ற விரும்புகிறீர்களா? இப்பக்கத்தினை பார்த்து செயலாக்க வல்ல நடைமுறைகளைக் கூறுக. கிரந்தம் அல்லாத, அயலகச்சொற்களின் ஆளுமை அவலம், இங்கு மாற்றப்படுமா? வணக்கம். --த♥ உழவன் +உரை.. 05:23, 15 ஆகத்து 2012 (UTC)
த♥ உழவன் , சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலே இவ்வாறான அயலகச் சொற்களின் ஆளுமை இல்லாது போகும்.
- கிரந்த எழுத்துகளான ஜ, ஷ, ஸ, ஹ, ஶ, க்ஷ, ஸ்ரீ ஆகியவற்றையோ பிறமொழி எழுத்துகளையோ கட்டுரைகளில் பயன்படுத்தக்கூடாது. மேற்கூறிய எழுத்துகளைப் பற்றிய கட்டுரைகள் மட்டும் விதிவிலக்கானவை. கிரந்த எழுத்துகளை உள்ளடக்கிய பொது வழக்கிலுள்ள சொற்கள் வழிமாற்றாகவும் கட்டுரையின் தலைப்பினையடுத்து, அல்லது <பொது வழக்கிலுள்ள கிரந்த எழுத்துகள் அடங்கிய தலைப்பு> என்றவாறு மட்டுமே இடம்பெறலாம்.
- இயன்ற வரை பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து எழுத வேண்டும். ஒரு கட்டுரையில் பிறமொழிச் சொல்லொன்று கையாளப்பட்டால், அதே கருத்துடைய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவதில் வேறுபாடு இருக்கக்கூடாது.
- மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள், இறுதியில் வரும் எழுத்துகள் தொடர்பான விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- மெய்ம்மயக்க விதிகளைக் கருத்திற்கொண்டே பிறமொழிப் பெயர்களை எழுத்துப்பெயர்ப்புச் செய்ய வேண்டும்.
- மேற்கூறிய விதிகளுக்குப் பொருந்துமாறு அமைந்த தமிழ்ச் சொல்லொன்றைத் தகுந்த காரணமின்றி வேறு பிறமொழிச் சொல்லால் மாற்றீடு செய்யக்கூடாது. --மதனாகரன் (பேச்சு) 11:58, 15 ஆகத்து 2012 (UTC) விருப்பம் --செல்வா (பேச்சு) 13:22, 15 ஆகத்து 2012 (UTC)
இது மீடியாவிக்கியிலோ விக்கிப்பீடியாவிலோ என்ன நடை பின்பற்றுவது என்ற உரையாடல் இல்லை. CLDR தரவை எப்படித் தமிழாக்குவது என்பது குறித்த உரையாடல். எனவே, அதற்கான களம் ஒன்றை உருவாக்கி அங்கு உரையாடுவதே பொருத்தமாக இருக்கும். குறுந்தட்டுத் திட்டம் முடிவடைந்த பிறகு தமிழ் விக்கிப்பீடியாவின் கிரந்த நிலைப்பாடு குறித்து உரையாடுவோம் என்றிருந்தோம். அது தள்ளிப்போவதால், 50,000 கட்டுரைளை எட்டிய பிறகோ தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவுக்குப் பிறகோ உரையாடலாம் என்று நினைக்கிறேன். --இரவி (பேச்சு) 13:40, 15 ஆகத்து 2012 (UTC)
ஒருங்குறி சீர்தரத்தில் குளறுபடிகள் செய்ததால் நிரல் மொழிகளில் தமிழில் வரிசைப்படுத்தலைச் செய்ய முடியாது உள்ளது. அந்த மாதிரி பிழைகளை விடாமல், தமிழின் மரபையும் தன்மையையும் தற்கால வழக்குகளையும் மதித்து சீர்தரங்களை உருவாக்குவது நன்று. --Natkeeran (பேச்சு) 13:51, 15 ஆகத்து 2012 (UTC)
- உங்களது கருத்தாழத்தை முற்றிலும் ஏற்கிறேன்.நற்கீரன்! நிரல் கொண்டு சீரமைக்கும் போது, நாம் கோட்டை விட்டது புரிகிறது. பிறமொழிகள் போல நாமும் முன்னேற, பல்வேறு அடித்தளங்களை பற்றி, நாம் முதலில் அறிய வேண்டும். எங்கோ எதுவோ நடக்கிறது என்றிருத்தல், நம் மொழிக்கு, நாம் செய்யும் தீங்கு. இணையத்தமிழ் வளர பிற இணையமொழிகளைப்போல, பல்வேறு தொழில் நுட்ப அணுகுமுறைகளை பின்பற்றுதல் அவசியமே. CLDR-இல் இருக்கும் பிழைகளால், இன்னும் பல குப்பைகள் விக்கித்தமிழில் நிச்சயம் தோன்றும். இங்கு உயர்வாக பேசப்படும் கருத்துக்களை, எங்கும் செயல்பட வைக்க, நம்மிடையே செயலாக்கத்திட்டம் உண்டா? குறைந்த பட்சம் இன்னும் அதிகாரி(bureaucrat), நிர்வாகி(sysop=system operator) என்ற அயலகச் சொற்களையே கைவிட முயற்சிகள், நம்மிடம் இதுவரை இல்லை என்பதை பிறர் அறிந்தால் நகைப்பர் என்பதே வேதனை. கிரந்தத்தால் மட்டுமா தமிழ் பாழாகிறது.தமிழ் எழுத்துக்களை போர்த்திக் கொண்டு இருக்கும் இது போல அயலகசொற்களாலும் தான்.--த♥ உழவன் +உரை.. 20:16, 19 ஆகத்து 2012 (UTC)
50,000 கட்டுரைளை எட்டிய பிறகோ தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவுக்குப் பிறகோ உரையாடலாம் எனும் பயனர் இரவியின் கருத்தை வழிமொழிகிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:46, 15 ஆகத்து 2012 (UTC)
அரைப்புள்ளியா அடைக்குறிப்பா
[தொகு]ஒரு தலைப்பின் தனித்துவக் கருத்தைக் சுட்ட அரைப்புள்ளி, அடைப்புக்குறி ஆகிய இரண்டும் பயன்படுத்தப்படுகிறது. எ.கா வைணவ ஆசாரிய பரம்பரை, வடகலை. இது தொடர்பாக சீர்தரம் உள்ளதா? --Natkeeran (பேச்சு) 17:16, 13 ஆகத்து 2012 (UTC)
- இதைப் போன்ற குறிகள் ஆங்கிலத்தில் இருந்து தானே வந்தது?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:56, 14 ஆகத்து 2012 (UTC)
- சீர்தரம் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். ஆனால், பொதுவாக மயக்கம் களைவதற்கு (disambiguation) அடைப்பையும் முகவரி போல அடுக்குவதற்கு அரைப்புள்ளியையும் பயன்படுத்தலாமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:03, 14 ஆகத்து 2012 (UTC)
மொழிபெயர்ப்புப் பேரணி
[தொகு]மொழிபெயர்ப்பு விக்கியில் 2012 ஆகத்து மொழிபெயர்ப்புப் பேரணி நடைபெறுகின்றது. குறிப்பிட்ட 11 திட்டங்களில் 500இற்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் செய்பவர்களுக்கு 950 ஐரோக்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. கூடிய பங்களிப்பைச் செய்தவருக்கு 50 ஐரோக்கள் கூடுதலாக வழங்கப்படுகின்றன. பகிர்ந்தளிக்கப்படும் பணத்தை பயனர்களே பேப்பால் மூலம் பெற்றுக் கொள்ளவோ மொழிபெயர்ப்பு விக்கிக்கு நன்கொடையாக அளிக்கவோ முடியும். 2012 ஆகத்து 18ஆம் திகதியுடன் இப்பேரணி நிறைவுறுகின்றது. விக்கிப்பீடியாப் பயனர்களுக்கு இவ்வறிவித்தல்! --மதனாகரன் (பேச்சு) 05:36, 14 ஆகத்து 2012 (UTC)
நன்றி மதன்! நானும் பார்த்தேன். இந்தியாவில் உள்ளவர்கள் பேப்பால் கணக்கைத் துவங்க முடியாதா? என்னால் முடியவில்லையே?தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:01, 15 ஆகத்து 2012 (UTC)
- துவங்கலாமே, என்னிடம் paypal கணக்கு உள்ளது தமிழ்க்குரிசில்--சண்முகம்ப7 (பேச்சு) 05:05, 15 ஆகத்து 2012 (UTC)
- அத்தகையப் பகிர்ந்தளிப்பு பணத்தை சூர்யா பெற்றிருக்கிறார். சூர்யாவின் அனுபவமும் உங்களுக்கு உதவலாம். அவரிடம் கலந்துரையாடிப் பார்க்கவும்.--த♥ உழவன் +உரை.. 05:33, 15 ஆகத்து 2012 (UTC)
தொடங்க முடியும். நான் நன்கொடையாக அளித்துள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 13:32, 15 ஆகத்து 2012 (UTC)
புரூவிட் தொடர்பாக
[தொகு]விக்கிப்பீடியா பேச்சு:புரூவ் இட்#மேம்பாடுகள் தேவை--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:43, 15 ஆகத்து 2012 (UTC)
சிறு விக்கிகளின் சுமை
[தொகு]en:Wikipedia:Wikipedia_Signpost/2012-08-13/Op-ed - நல்ல கட்டுரை. படித்த பொழுது எனக்கு பேச்சு:ம. ப. பெரியசாமித்தூரன் நினைவில் வந்த்து. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:10, 15 ஆகத்து 2012 (UTC)
More opportunities for you to access free research databases
[தொகு]The quest to get editors free access to the sources they need is gaining momentum.
- Credo Reference provides full-text online versions of nearly 1200 published reference works from more than 70 publishers in every major subject, including general and subject dictionaries and encyclopedias. There are 125 full Credo 350 accounts available, with access even to 100 more references works than in Credo's original donation. All you need is a 1-year old account with 1000 edits. Sign up here.
- HighBeam Research has access to over 80 million articles from 6,500 publications including newspapers, magazines, academic journals, newswires, trade magazines and encyclopedias. Thousands of new articles are added daily, and archives date back over 25 years covering a wide range of subjects and industries. There are 250 full access 1-year accounts available. All you need is a 1-year old account with 1000 edits. Sign up here.
- Questia is an online research library for books and journal articles focusing on the humanities and social sciences. Questia has curated titles from over 300 trusted publishers including 77,000 full-text books and 4 million journal, magazine, and newspaper articles, as well as encyclopedia entries. There will soon be 1000 full access 1-year accounts available. All you need is a 1-year old account with 1000 edits. Sign up here.
You might also be interested in the idea to create a central Wikipedia Library where approved editors would have access to all participating resource donors. Add your feedback to the Community Fellowship proposal. Apologies for the English message (translate here). Go sign up :) --Ocaasi (talk) 02:25, 16 ஆகத்து 2012 (UTC)
தொடுப்பிணைப்பிகள் காணோமே?
[தொகு]சில பணிகளுக்கு தொடுப்பிணைப்பிகள் எளிமையாக இருந்தன. ஆனால், தற்போது தொடுப்பிணைப்பிகள் இரண்டையுமே காணவில்லையே. இது எனக்கு மட்டுமா? இல்லை, அனைவருக்குமா? --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 07:47, 16 ஆகத்து 2012 (UTC)
- அனைவருக்கும் இல்லை. புதிதாக tag என்ற தொடுப்பிணைப்பி மட்டுமே செயற்படுகின்றது. காரணந்தெரியவில்லை. --மதனாகரன் (பேச்சு) 09:17, 16 ஆகத்து 2012 (UTC)
- m:user:Hoo man அவருடைய taggerஐ சில நாட்களுக்கு முன் இற்றைப் படுத்தியுள்ளார். அதிலிருந்து சரியாக வேலை செய்யவில்லை. நீங்கள் கூறும் tag எனப்படுவது Friendly கருவி என நினைக்கிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 09:57, 16 ஆகத்து 2012 (UTC)
- வேண்டுகோளுக்கினங்க பயனர் ஹூ மேன் இங்கு சரி செய்துள்ளார்.
தொகுப்பு சுருக்கம் மட்டும் சரியாக வரவில்லை. --சண்முகம்ப7 (பேச்சு) 18:18, 16 ஆகத்து 2012 (UTC)- தொகுப்புச் சுருக்கம் சரியாக வருகிறது--சண்முகம்ப7 (பேச்சு) 18:43, 16 ஆகத்து 2012 (UTC)
- வேண்டுகோளுக்கினங்க பயனர் ஹூ மேன் இங்கு சரி செய்துள்ளார்.
நிறுவனங்களின் பெயர் மட்டும் தமிங்கிலத்தில் இருந்தால் போதுமே?
[தொகு]விக்கிப்பீடியாவின் பெயரைக் கெடுக்க
[தொகு]இத்தளத்தில் எழுதுபவர் விக்கியின் வளர்ச்சியை கெடுக்க இதைப் படைத்ததாகவே தெரிகிறது. சில உள்ளிணைப்புகள் விக்கிமீடியா திட்டங்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுளது. இதித்தடுக்க ஏதும் வழி உண்டா? இல்லை தெரிந்து தான் வைத்திருக்கிறார்களா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:42, 16 ஆகத்து 2012 (UTC)
- இது போல நிறைய தளங்கள் உள்ளன தென்காசியாரே.. இணைப்புகள் கொடுப்பதை நாம் ஒன்றும் செய்ய இயலாதல்லவா? பார்க்க uncyclopedia & இங்கு சோடாபாட்டில் பெயரை வைத்து விளையாடுகிறார்கள் --சண்முகம்ப7 (பேச்சு) 18:15, 16 ஆகத்து 2012 (UTC)
ஒருவர் வலைபூவில் எழுதுகிறார் என்றால் சொந்த கருத்தென்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உள்ளிணைப்பு விக்கிக்கு கொடுப்பதன் மூலம் விக்கி பற்றிய தப்பர்தத்தை மக்களிடம் உண்டு பண்ணுவதற்கு சைபர் கிரைமில் தடுக்க வழியிருக்குமே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:24, 16 ஆகத்து 2012 (UTC)
- வலைப்பூவில் எழுதுபவரிலிருந்து எத்தனையோ பேர் விக்கியின் கட்டுரைகளுக்கு இணைப்புகளைக் கொடுக்கிறார்கள், அதையெல்லாம் கண்டுபிடித்து சரிபார்த்தல் என்பது இயலும் காரியமா? :)--சண்முகம்ப7 (பேச்சு) 18:33, 16 ஆகத்து 2012 (UTC)
வலைபூ என்பது பாற்த்த வுடன் தெரிந்து விடுமே. ஆனால் இவை விக்கிபோலல்லவா தெரிகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:43, 16 ஆகத்து 2012 (UTC)
- விக்கி என்பது பொதுவாக மீடியாவிக்கி மென்பொருள் உபயோகிக்கும் அனைத்துமே தான். இவையனைத்தும் ஒன்று போலத்தான் இருக்கும், மேலும் இதில் இணைப்பு கொடுப்பதும் ஒரு வெளித்தளத்தில் இருந்து விக்கிப்பீடியா/மீடியாவிற்கு இணைப்பு கொடுப்பது போன்றே செயல்படும்--சண்முகம்ப7 (பேச்சு) 18:55, 16 ஆகத்து 2012 (UTC)
- அன்சைக்குளோப்பீடியா என்பது சிம்மி வேல்சும் ஏஞ்சலாவும் தொடங்கிய விக்கியா நிறுவனத்தினர் விளையாட்டாக உருவாக்கிய தளமாகும். அவர்களது நோக்கம் விக்கிப்பீடியாவை மட்டம் தட்டுவது அல்ல (அதனால் சரியெனச் சொல்லவில்லை, தகவலுக்காகவே). எந்தவொரு தளமும் விக்கிப்பீடியாவைப் போலவே தோற்றம் கொண்டு தளத்துக்கு வருபவர்களை ஏமாற்றினால் முறையிடலாம். -- சுந்தர் \பேச்சு 08:31, 17 ஆகத்து 2012 (UTC)
ஆலமரத்தடி (தொழில்நுட்பம்)
[தொகு]நமது விக்கி வளர்ந்து வருவதாலும், ஆலமரத்தடியும் பெரிதாகி வருவதாலும், தொழில்நுட்பம் தொடர்பான வேண்டுகோள்கள் அதிகம் வருவதாலும் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழில்நுட்பம்) தொழில்நுட்ப ஆலமரத்தடி உருவாக்கப்பட்டுள்ளது. இனி பயனர்கள் தொழில்நுட்ப வேண்டுகோள்களை அப்பக்கத்தில் இடவும்--சண்முகம்ப7 (பேச்சு) 18:22, 16 ஆகத்து 2012 (UTC)
- இப்பக்க உரையாடலின்படி மேற்கூறிய ஆலமரத்தடி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) எனுந்தலைப்புக்கு நகர்த்தப்பட்டது. --மதனாகரன் (பேச்சு) 12:18, 17 ஆகத்து 2012 (UTC)
- ஆலமரத்தடிக்குப் புது வடிவமைப்பை வழங்கியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 12:48, 17 ஆகத்து 2012 (UTC)
- நன்றாக உள்ளது! பாராட்டுகள்! பகுப்பு முறை, வடிவமைப்பு சரியெனினும் இன்னும் அழகூட்டலாம் (எடுப்பாக்கலாம்). --செல்வா (பேச்சு) 13:34, 17 ஆகத்து 2012 (UTC) விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 02:59, 18 ஆகத்து 2012 (UTC)
- இதுவரை பல்வேறு இடங்களில் , தொழில் நுட்ப உரையாடல்கள் நடந்துள்ளன. அப்பக்கங்களை, இப்பகுப்பில் சேர்த்திட உரையாடியவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இப்பகுப்பு சேர்த்திட முடியா உரையாடல்கள் ஆலமரத்தடியிலோ,ஒத்தாசைபக்கத்திலோ, ஒரு குறிப்பிட்ட கட்டுரையின் பதிவேடுகளிலோ(வரலாறு) இருப்பின் அவற்றையும் இப்பிரிவில் சேர்த்திட என்ன நடைமுறையைப்பின்பற்றலாம். --த♥ உழவன் +உரை.. 03:17, 20 ஆகத்து 2012 (UTC)
- நன்றாக உள்ளது! பாராட்டுகள்! பகுப்பு முறை, வடிவமைப்பு சரியெனினும் இன்னும் அழகூட்டலாம் (எடுப்பாக்கலாம்). --செல்வா (பேச்சு) 13:34, 17 ஆகத்து 2012 (UTC) விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 02:59, 18 ஆகத்து 2012 (UTC)
புதுப்பயனர் உதவி
[தொகு]புதுப்பயனர்களுக்கு நல்ல தமிழ்ச் சொற்களையும், விக்கி நடைமுறை குறித்தும் கூற விரும்புகிறேன். இதை வார்ப்புரு:இன்றைய தகவல் என்ற பெயரில் உருவாக்கி, புதுப் பயனர்களின் பக்கத்தில் இட்டால், அவர்கள் புது செய்தி கண்டு மகிழ்வர். மேலும், நாளுக்கொரு செய்தியை அறிந்தவாறு இருக்கும். நாளுக்கு இரண்டு அல்லது மூன்று செய்திகளைக் கூட இடலாம். அவ்வப்போது, யாராவதொருவர் உள்ளடக்கத்தை மாற்றலாம். இது ஒத்துவருமா? மேம்படுத்த அறிவுரை வழங்குக. என்ன விதமான செய்திகளை வழங்கலாம். ஏற்கனவே, இது போன்ற நடைமுறை இருந்தால், அதை எப்படி செய்வது எனக் கூறவும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:23, 17 ஆகத்து 2012 (UTC)
அண்மையில் புதுப்பயனராய்ச் சேர்ந்தவர்கள்/ பங்களிப்பு வழங்காதவர்கள், இவர்களின் பட்டியலை அறிவது எப்படி? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:26, 17 ஆகத்து 2012 (UTC)
- அண்மையில் புதுப்பயனராய்ச் சேர்ந்தவர்களை புதுப்பயனர் உருவாக்கப் பதிகையில் காணலாம். --மதனாகரன் (பேச்சு) 02:59, 18 ஆகத்து 2012 (UTC)
இதை வார்ப்புரு:இன்றைய உதவிக்குறிப்பு என்ற பக்கத்தில் உருவாக்கியுள்ளேன். மேம்படுத்தி ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். புதுப்பயனர்கள் பலர் தமிழ்நாட்டின் கிராமங்களில் இருந்தே வருவதால், அடிக்கடி விக்கிப்பீடியாவை பார்க்க இயலாதவர்கள். எனவே மாதந்தோறும், குறிப்பிட்ட அளவுக்கும் மேற்பட்ட (எ.கா: 20 தொகுத்தல்கள்) தொகுத்தல்களைச் செய்த பயனர்களை பாராட்டினால் ஊக்கம் பெற்று பங்களிக்க முன்வருவர். மேலும் கருத்துகளை வழங்குவர். மேலும் ஆங்கில உள்ளடக்கத்தை இரண்டு மூன்று வரியில் கட்டுரையாக எழுதினாலும், ஏற்கக் கூடியதாய் இருந்தால், அதை தமிழ் ஒலிபெயர்ப்பு செய்தோ அல்லது நாமே கூட படித்துப் பார்த்து செய்து விடலாம். நீக்க வேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறேன். பலர் நகர்பேசியில் தட்டச்சு செய்வதால், தமிழ் மொழியிருக்க வாய்ப்பிருக்காது. அதை நேரடியாக ஒலிபெயர்ப்பு செய்ய இயலுமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:23, 24 ஆகத்து 2012 (UTC)
- நல்ல திட்டமொன்று! இதனை நாடோறும் மேம்படுத்தலாம். விக்கிப்பீடியாவின் நகர்பேசிப் பதிப்பில் கட்டுரைகளைத் தொகுக்க முடியாது. ஆங்கில உள்ளடக்கத்தை எழுதினால் நீக்குவதே நன்று. அதனை மாற்றி எழுதுவதை விட, நாமே புதுக் கட்டுரை எழுதி விடலாம். இவ்வார்ப்புருவை {{புதுப்பயனர்}} வார்ப்புருவில் இணைத்துள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 13:21, 27 ஆகத்து 2012 (UTC)
- பக்கமொன்றையும் உருவாக்கியுள்ளேன். பார்க்க: விக்கிப்பீடியா:இன்றைய உதவிக்குறிப்பு. ஒவ்வொரு நாளைய உதவிக்குறிப்பையும் மறக்காமல் காப்பகத்தில் சேர்த்து விடவும். நன்றி! --மதனாகரன் (பேச்சு) 13:45, 27 ஆகத்து 2012 (UTC)
மறுமொழியைப் படித்தேன். நன்றி மதன்! மகிழ்ச்சியாய் உள்ளது :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:00, 27 ஆகத்து 2012 (UTC)
தேவை ஆக்சுவோர்ட் உதவி
[தொகு]ஆக்சுஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நற்குடி வேளாளர் வரலாறு (நூல்) புத்தகம் உள்ளது. அதில் 201 பாண்டிய மன்னர்களின் பட்டியல் உள்ளன. ஆட்சியாண்டுகள் உட்பட உள்ளது. அதை ஆங்கில விக்கியில் கேட்கும் வழிமுறை என்ன? ஆக்சுஃபோர்டு பல்கலைக்கழக்த்தினர் யாராவது தமிழ் விக்கியிலோ ஆங்கில விக்கியிலோ உள்ளனரா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:24, 17 ஆகத்து 2012 (UTC)
நாட்டுப்புற கலைகள்-100
[தொகு]இத்தளத்தில்தமிழக நாட்டுப்புற கலைகள் தொகுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 100கலைகள் பற்றிய குறுங்கட்டுரைகள் அங்கு உள்ளன. நம் தளத்தில், இங்கு ஏறத்தாழ 45 கட்டுரைகளை உள்ளன. மீதமுள்ளவற்றைத் தானியக்கமுறையில், அங்குள்ள அதே குறுங்குறிப்புகளோடு, படமில்லாமல், இங்கிருக்கும் கட்டுரை வடிவில் பதிவேற்ற எண்ணுகிறேன்.இது குறித்து, பிறரின் கருத்தறிய ஆவல்.--த♥ உழவன் +உரை.. 12:56, 19 ஆகத்து 2012 (UTC)
- விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:59, 20 ஆகத்து 2012 (UTC)
- அப்படியே படியெடுப்பதில் காப்புருமைச் சிக்கல்கள் இருக்கலாம். கவனிக்கவும். --Natkeeran (பேச்சு) 15:35, 20 ஆகத்து 2012 (UTC)
- அங்கு இருப்பதே மிக க்குறைவான வரிகள் தான். இருப்பினும், சிறு மாற்றம் செய்து விடுகிறேன். உரிய நாட்டுப்புற ஊடகங்களை உருவாக்குவேன். பார்வதி அவர்களின் சிலம்பாட்டம், தப்பு ஊடகங்களே என்னை செய்யத்தூண்டின. பார்வதி! அவ்வூடகங்களுக்கு என்ன கருவியை பயன்படுத்தினீர்கள் என்று அறிய ஆவல்.--த♥ உழவன் +உரை.. 07:01, 21 ஆகத்து 2012 (UTC)
- அப்படியே படியெடுப்பதில் காப்புருமைச் சிக்கல்கள் இருக்கலாம். கவனிக்கவும். --Natkeeran (பேச்சு) 15:35, 20 ஆகத்து 2012 (UTC)
- வணக்கம் உழவன். மிக்க நன்றி. நான் எனது அலைபேசியில் பதிவு செய்துதான் விக்கியில் பதிவேற்றினேன். Mp3 ஆக உள்ள அதனை ogg கோப்பாக மாற்றவேண்டும் என சஞ்சீவி சிவகுமார் தான் வழிகாட்டினார்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:49, 21 ஆகத்து 2012 (UTC)
- உங்களது அலைப்பேசி என்னவென்று அறிய விரும்புகிறேன்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 09:24, 21 ஆகத்து 2012 (UTC)
- வணக்கம் உழவன். மிக்க நன்றி. நான் எனது அலைபேசியில் பதிவு செய்துதான் விக்கியில் பதிவேற்றினேன். Mp3 ஆக உள்ள அதனை ogg கோப்பாக மாற்றவேண்டும் என சஞ்சீவி சிவகுமார் தான் வழிகாட்டினார்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:49, 21 ஆகத்து 2012 (UTC)
ரமலான் பெருநாள் வாழ்த்துகள்
[தொகு]- ரமலான் பெருநாள் கொண்டாடும், இசுலாமியப் பயனர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:21, 20 ஆகத்து 2012 (UTC)
- இரமதான்/இரமலான் நோன்புத்திருநாள் கொண்டாடும் நண்பர்கள் யாவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்!--செல்வா (பேச்சு) 02:29, 20 ஆகத்து 2012 (UTC)
- عيد مبارك (ஈத் முபாரக்)! ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.சமத்துவம் பெருகுக.--த♥ உழவன் +உரை.. 03:31, 20 ஆகத்து 2012 (UTC)
- +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:16, 20 ஆகத்து 2012 (UTC)
- ஈகைத்திருநாள் வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:01, 20 ஆகத்து 2012 (UTC)
- ஈகைத்திருநாள் வாழ்த்துகள். --Natkeeran (பேச்சு) 15:35, 20 ஆகத்து 2012 (UTC)
இன்றைய சிறப்புப்படம்
[தொகு]விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் பக்கத்தில் விக்கி ஊடகப் போட்டிக்கு வந்த படங்களில் சிலவற்றை பரிந்துரைத்துள்ளேன். அவற்றைப்பற்றிய கருத்துகளை தெரிவிக்கவும். மேலும் உங்களுக்குத் தெரியுமா? : வரும் வாரத்தில் இடம் பெறுவன போல இன்றைய சிறப்புப் பாடம் பக்கமும் முன்பே இற்றைப்படுத்தப்படலாம் என்பது என் கருத்து. நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:08, 20 ஆகத்து 2012 (UTC)
- நிறையப் படங்களைப் பரிந்துரைத்திருக்கிறீர்கள். அனைத்தும் தரம் வாய்ந்தவை.--Kanags \உரையாடுக 09:16, 21 ஆகத்து 2012 (UTC)
- இங்கு சிறப்புப் படங்களுக்கான வரையறைகள் என்ற தலைப்பின் கீழ் நான் குறிப்பிட்டதைத்தான் மீளவும் தெரிவிக்க விரும்புகின்றேன். சில படங்கள் ஒளிப்படத்திற்கான சிறப்புத் தகுதியை இழந்து காணப்படுகின்றன.--Anton (பேச்சு) 07:53, 27 ஆகத்து 2012 (UTC)
மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுதலைத் தவிர்க்கவும்
[தொகு]இன்றைய நாளில் பகுதில் வரும் தொடர்: லியோன் ட்ரொட்ஸ்கி - --செல்வா (பேச்சு) 19:05, 20 ஆகத்து 2012 (UTC)
- ஆம், இந்த அடிப்படை இலக்கணப்பிறழ்வை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதைப்பற்றிய கொள்கை முன்மொழிவுக்கு இணைப்பு தாருங்கள். -- சுந்தர் \பேச்சு 08:23, 22 ஆகத்து 2012 (UTC)
- முற்றிலும் தவிர்ப்பது நல்லது. எவ்வாறு தவிர்ப்பது என்று ஒரு வழிகாட்டி வேண்டும். செல்வாவின் எடுத்துக்காட்டில் ட்ரொட்ஸ்கியை, லியோன் திரொட்ஸ்கி என மாற்றியிருக்கிறார். ஆனாலும் ட்ரொட்ஸ்கி என்பது துரொட்ஸ்கி என எழுதுவதே ஓரளவு மூலச் சொல்லுக்குப் பொருந்துகிறது. கிரந்தம் தவிர்த்து எழுதினால் துரொத்சுக்கி என எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 08:46, 22 ஆகத்து 2012 (UTC)
மெய்யெழுத்தையடத்து அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஔ ஆகிய உயிரொலிகள் வந்தால் இகர உயிர்மெய்யைப் பயன்படுத்தியும் (எ-டு: ப்ரஷ்-பிரஷ், க்ராம்-கிராம், க்ரியா-கிரியா, க்ரீம்-கிரீம், ப்ரெண்ட்-பிரெண்ட், க்ரேயான்-கிரேயான், ப்ரையன்-பிரையன், ப்ரௌன்-பிரௌன்) உ, ஊ, ஒ, ஓ ஆகிய உயிரொலிகள் வந்தால் உகர உயிர்மெய்யைப் பயன்படுத்தியும் (எ-டு: த்ருதம்-துருதம், ப்ளூட்டுத்-புளூட்டுத், க்ளோரின்-குளோரின், ப்ரோட்டோசோவா-புரோட்டோசோவா) எழுதுவதே வழக்கு. இம்முறையையே கையாளலாம். --மதனாகரன் (பேச்சு) 10:55, 22 ஆகத்து 2012 (UTC)
- விளக்கங்களுக்கு நன்றி.மதனா!--த♥ உழவன் +உரை.. 11:05, 22 ஆகத்து 2012 (UTC)
- தமிழறிஞர் ஒருவரின் மகன் அல்லவா? தெளிந்த அறிவோடு எழுதியிருக்கிறார். நன்றி மதனாகரன்.--Kanags \உரையாடுக 11:15, 22 ஆகத்து 2012 (UTC) விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 11:57, 22 ஆகத்து 2012 (UTC)
ஊடகப் பங்களிப்பு
[தொகு]கல்யாண் வெர்மா ஊடகப் பங்களிப்பால் ஏற்படும் பின்விளைவுகளை விவரிக்கிறார்.--த♥ உழவன் +உரை.. 11:11, 22 ஆகத்து 2012 (UTC)
- நல்ல இணைப்பு. --Natkeeran (பேச்சு) 05:23, 28 ஆகத்து 2012 (UTC)
விக்கிப்பீடியா தமிழறிஞரை இழிவுபடுத்தியதா?
[தொகு]அறிக்கை எனும் பொருளில் இறையரசன் என்பவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில்
பாவாணரை இழிவுபடுத்தும் விக்கி பீடியாவுக்கு உலகத் தமிழறிஞர்கள் கடும் எச்சரிக்கை !
நாகூசும் ஆபாச சாக்கடை சொற்களால் தமிழன்னை மீதும், மறைந்த தமிழ் அறிஞர் மீதும் தாக்குதல் !
தமிழக அரசுக்கு காவல்துறை இணயத்தள குற்றவியல் உடனே நடவடிக்க எடுக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
முதுபெரும் தமிழறிஞர்களையும், மொழியையும், இனத்தையும் ஒரு கூட்டம் தாக்கிக்கொண்டே இருக்கிறது.
இந்த அரசு தமிழர் விரோத அரசு என்று பெயர் வாங்கிக்கொடுக்கப் பல்லாற்றானும் சதிவலைகள் பின்னப்படுகின்றனவோ என்ற அச்சம் எங்களுக்கு எழுகிறது.
இப்படி எழுதப்பட்டு விக்கிப்பீடியாவின் முகவரியாகக் கீழேயுள்ள முகவரி அளிக்கப்பட்டுள்ளது.
வலைத்தள முகவரி :
// http://lohere.net/kulkapedia/samuel/G._Devaneya_Pavanar //
விக்கி பீடியாவில் போலியான தகவல்களைக் கொடுத்து இந்த ஆபாச இணயத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தைப் போல இணையத் தளத்தின் வழியே கலவரத்தை உருவாக்க செய்யப்பட்ட சதியோ என அஞ்சுகிறோம். என்று கடிதம் மேலும் நீள்கிறது.... இணையத்தின் தன்மையைப் பற்றி இன்னும் பூரண புரிதல் இல்லாதால் இப்படி நிகழ்ந்துவிடுகிறது. இணையம் பற்றிய ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் அவசியத்தை இது சுட்டி நிற்கிறது. விக்கிப்பீடியாவிற்கும் இதற்கும் என்ன தொடர்பு? ஏன் இவர் இப்படிச் சாடுகிறார்? என்பதும் புரியவில்லை... --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:55, 22 ஆகத்து 2012 (UTC)
- அந்த தளத்தில் ஆங்கில விக்கி கட்டுரையை நகலெடுத்து அவதூறான மாற்றங்களை செய்து வெளியிடுகிறார்கள். ஏற்கனவே மேலே தென்காசி கூறியது போல அதன் விக்கியிடை நேரிடையாக இங்கு வருவதால் அதுவும் விக்கிமீடியாவின் தளமோ என கருதுகிறார்கள் என நினைக்கிறேன். அது விக்கிபீடியா தளமல்ல என்பதனை அவருக்கு விளக்கவும். இதுபற்றி சுந்தர் மேலே கூறியது போல நாம் முறையிட வேண்டும்.--சண்முகம்ப7 (பேச்சு) 18:02, 22 ஆகத்து 2012 (UTC)
- தமிழ்ச் சூழலில் இணையத்தின் தன்மையைப் பற்றி இன்னும் பூரண புரிதல் இல்லாதால் இப்படி நிகழ்ந்துவிடுகிறது. இணையம் பற்றிய ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் அவசியத்தை இது சுட்டி நிற்கிறது. --Natkeeran (பேச்சு) 18:36, 22 ஆகத்து 2012 (UTC)
- legal-tm-vio AT wikimedia.org என்ற மின்வரிக்கு எழுதியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 08:21, 23 ஆகத்து 2012 (UTC)
- மாலைமுரசு நாளிதழில் இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை ஒளிவருடி செய்து முனைவர் தி. நெடுஞ்செழியன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பார்க்க மாலைமுரசு செய்தி. அந்தச் செய்தியில் கனடாவில் இருக்கும் செல்வா (சி. ஆர். செல்வக்குமார்) பெயரும் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், எனக்கு வந்த மின்னஞ்சலில் செல்வா பெயர் இல்லை.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:44, 24 ஆகத்து 2012 (UTC)
- என் பெயர் தவறுதலாகவும் ஒப்புதல் இல்லாமலும் சேர்க்கப்பட்டுள்ளது. மறு அறிக்கை விட்டு என் பெயர் தவறுதலாகச் சேர்க்கப்பட்டுவிட்டது எனக் கூறுமாறு முனைவர் இறையரசனிடம் வேண்டியுள்ளேன். என் வேண்டுகோளின் படியைத் துணைவேந்தர், பேராசிரியர் சிலருக்கும் அனுப்பியுள்ளேன். --செல்வா (பேச்சு) 13:33, 24 ஆகத்து 2012 (UTC)
- மாலைமுரசு நாளிதழில் இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை ஒளிவருடி செய்து முனைவர் தி. நெடுஞ்செழியன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பார்க்க மாலைமுரசு செய்தி. அந்தச் செய்தியில் கனடாவில் இருக்கும் செல்வா (சி. ஆர். செல்வக்குமார்) பெயரும் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், எனக்கு வந்த மின்னஞ்சலில் செல்வா பெயர் இல்லை.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:44, 24 ஆகத்து 2012 (UTC)
- பாவாணர் பற்றிய ஆங்கில விக்கிக் கட்டுரையில் ஒருவர் செய்த விசமத் தொகுப்பு கடந்த இரண்டு வாரங்களாகத் திருத்தப்படாமல் இருந்திருக்கிறது. நேற்றுத் தான் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு இக்கட்டுரையைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 13:25, 24 ஆகத்து 2012 (UTC)
பாவாணர் இணைப்பு "பகிரப்படுவது" உள்நோக்கம் கொண்டது
[தொகு]வணக்கம். நான் ஏற்கனவே இதை ஆலமரத்தடியில் "விக்கிப்பீடியாவின் பெயரைக் கெடுக்க" என்ற தலைப்பில் சுட்டினேன். நான் மின்தமிழ் என்னும் கூகுள் மடலாடல் குழுவில் சில வாரங்களாக பங்களித்து வந்தேன். அங்கிருந்த கல்வெட்டு அறிஞர் ஒருவர் எனக்கு மேலுள்ள பாவாணரின் இணைப்பை அனுப்பி ஏன் விக்கி இப்படி மோசமாக் இருக்கிறது எனக் கேட்டார்.
இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது பாவாணர் பெயரைக் கெடுக்க இதை அனுப்பி இருக்கின்றனர். மேலுள்ள போலி விக்கித்தளத்தில் முதற்பக்கமே மட்டமாக தான் இருக்கிறது. அதில் வேரெதையும் அனுப்பாமல் பாவாணர் இணைப்பு மட்டும் பகிரப்படுவதே இதற்கு சாட்சி. அந்த தளம் வேறெவராவது ஆரம்பித்தாலும் பாவாணர் இணைப்பு மட்டும் அதிகம் பகிரப்படுவது அவர் பெயரைக் கெடுக்கவே.
இதை கண்டு கல்வெட்டு அறிஞர் ஒருவர் விக்கிக்கு வரவில்லை என்றால் அது விக்கிக்கு இழப்பு தானே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:31, 24 ஆகத்து 2012 (UTC)
- உங்கள் en:Wikipedia:Village_pump_(policy)#Obstacle_for_wikipedia முறைப்பாட்டில் சில பயனர்கள் குறிப்பிட்டதைப் போல, இத்தளம் அங்கேரி நாட்டைச் சேர்ந்த குழப்பவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. http://www.whois.com/whois/lohere.net சென்றால் பதிவுசெய்தவரின் தொடர்பு (+36 303617683) அணுகலாம். எனினும் இது கட்டுக்கடங்கா இளையோரின் செயல் என்பது தெளிவாகின்றது, எனவே ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அவர்களாகவே நிறுத்திவிடுவார்கள் என்று நம்பலாம். கூகிளில் lohere.net என்பதன் அருகே tamil அல்லது hindi என்று இட்டு தேடிப்பார்த்தால் ஏராளமான இடுகைகள் வந்தது, இதில் இருந்து இதற்காக அவர்கள் ஏதோ ஒரு நிரலைப் பயன்படுத்துவது புரிகின்றது. அத்தளத்தில் உள்ள இணைப்புகள் அங்கேரி விக்கிபீடியாவுக்குச் செல்கின்றது. இது இருக்க, இதனைப்பயன்படுத்தி பாவாணர் அவர்களின் பெயருக்கு களங்கம் விடுவிப்போரைக் கண்டறிதல் அவசியமானது. விக்கிபீடியாவில் ஓரளவு பரிச்சயம் கொண்ட நபரால்தான் இது முடியும், எனவே (நிருவாகிகள்) ஆங்கிலவிக்கியில் பாவாணர் அவர்களின் இடுகையில் மாற்றம் செய்த பயனரின் ஐ.பி முகவரி மூலம் இதை அணுகலாம்..--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 17:03, 24 ஆகத்து 2012 (UTC)
சீர்மை வேண்டும்
[தொகு](கிரந்தம் மற்றும் பிற மொழி தவிர்த்து மற்றவற்றிற்கு சீர்மை வேண்டுகிறேன்.)
உதாரணமாக, infobox என்பதை சிலர் அப்படியேயும், வேறு சிலர் தமிழில் தகவல்பெட்டி எனவும், இன்னும் சிலர் தகவற்சட்டம் எனவும் எழுதுகிறோம். எந்த தலைப்பில் வழங்குவது எனக் குழப்பமாக உள்ளது. இவ்வாறு உள்ளதால் சீர்மை பேணமுடியவில்லை. இது போன்றே பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் பயன்படுத்துகிறோம். இது சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே தகுந்த முறையில் இலக்கண முறைப்படியோ, பிறவற்றிற்கு வாக்கெடுப்பு மூலமோ தீர்வு காணுமாறு வேண்டுகிறேன். மேலும், சீர்மை குறித்த பக்கமொன்றை உருவாக்குமாறும் வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:13, 23 ஆகத்து 2012 (UTC)
- சரியான அவதானிப்பு தமிழ்க்குரிசில். இவற்றை ஒவ்வொரு தொகுதியாகச் செய்யலாம். --Natkeeran (பேச்சு) 13:57, 23 ஆகத்து 2012 (UTC)
- வார்ப்புருக்கள் உருவாக்குவதில் கவனம் தேவை. நாம் பொதுவாக ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்தே வார்ப்புருக்களை பிரதி செய்கிறோம். இதனால் ஆங்கிலத் தலைப்பு எப்போதும் இருப்பது நல்லது. அது கட்டாயம் என்றே நான் சொல்வேன். பின்னர் அதனைப் பொருத்தமான தமிழ்த் தலைப்பிற்கு மாற்றி விடலாம்.--Kanags \உரையாடுக 22:18, 23 ஆகத்து 2012 (UTC)
- சரியான அவதானிப்பு தமிழ்க்குரிசில். இவற்றை ஒவ்வொரு தொகுதியாகச் செய்யலாம். --Natkeeran (பேச்சு) 13:57, 23 ஆகத்து 2012 (UTC)
- மறுமொழிக்கு நன்றி நற்கீரன், கனகு!! தாங்கள் கூறியதை ஏற்கிறேன். பயனர் ஒருவர் புதிய வார்ப்புருவை சேர்த்தால் நாம் அதை உடனுக்குடன் தமிழாக்கம் செய்வோம். :) தகவற்பெட்டி?தகவல் பெட்டி?தகவல் சட்டம்? எந்தத் தலைப்பு பொருத்தமாய் இருக்கும் என்று கூறுங்கள். பல பெயர்கள் வேண்டாமே!
- மேலும், தொழினுட்பச் சொற்களைத் தமிழாக்கம் செய்யும்போது, இணையான பல சொற்களைப் பயன்படுத்துதல் நன்றன்று. பொதுவாகவே, தமிழில் தொழினுட்பச் சொற்களை படிக்க பலர் ஆர்வங்கொள்வதில்லை. காரணம் இதுவே: ஆளாளுக்கு ஒவ்வோர் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். இது குழப்பம் விளைவிக்கிறது
உதாரணம், web browser என்பதை நான் இணைய உலாவி என்றே படித்திருக்கிறேன். மதன், வலை மேலோடி எனக் கூறியிருக்கிறார். (எது சரியானதோ அதை ஏற்பேன்). இது போலவே பலரும் பல சொற்களைப் பயன்படுத்தினால் படிப்பவருக்கு புரிய வாய்ப்பில்லை இதுபோன்றே வலைப்பதிவு, வலைமனை, வலைப்பூ என்கிறோம். சிறந்ததும் எளிமைமிக்கதுமாகிய தமிழ்ச்சொற்களை முன்னிலைப்படுத்துமாறு வேண்டுகிறேன். ”பல சொற்கள் வேண்டாமே, ஒரே சொல் போதுமே..” -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:45, 24 ஆகத்து 2012 (UTC)
ஒரு சொல் அல்லது கருத்துரு அறிமுகப்படுத்தப்படும் போது பல சொற்கள் ஒரே சமயத்தில் வழங்குவது இயல்பே. அதே வேளை பின்னர் சில சொற்கள் சீர்தரம் போன்று நிலைத்துவிடும். எ.கா browser என்பதற்கு உலாவி என்ற சொல்லே பெரும் வழக்கத்தில் இருக்கிறது. blog என்பதற்கு வலைப்பதிவு என்ற சொல்லே சரியான சொல்லாக பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் விக்கி தொடர்பான சொற்கள் தொடர்பான நீங்கள் கூறியபடி உரையாடி ஒரு முடிவுக்கு வரலாம். சில தவறுகள் நடந்தாலும் பின்னர் திருத்திவிடலாம். நன்றி. --Natkeeran (பேச்சு) 16:47, 24 ஆகத்து 2012 (UTC)
- இலங்கையில் மேலோடி என்றும் உலாவியை அழைப்பதுண்டு. இலங்கையில் உலாவி, மேலோடி ஆகிய இரண்டு சொற்களுமே வழக்கிலுள்ளன. தமிழகத்திலும் உலாவி என்பது பெருவழக்காக உள்ளதால் உலாவி என்பதை முதன்மைப்படுத்தலாம். நன்றி! --மதனாகரன் (பேச்சு) 04:38, 25 ஆகத்து 2012 (UTC)
செப்டம்பர் 2 கூகுள் hangoutக்கான அழைப்பு
[தொகு]செப்டம்பர் 2, 2012 (ஞாயிறு) அன்று இந்திய நேரப்படி பகல் 2 முதல் 3 வரை ஒரு கூகுள் hangout செய்யலாமா? பொதுவாக தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி உரையாடவும் பங்களிப்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளவும் உதவும். இது போன்ற சந்திப்புகளை மாதம் ஒரு முறை ஞாயிறு, வெள்ளி என்று வெவ்வேறு நேரங்களில் செய்து வந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். கூகுள் கூடலில் (hangoutக்கு இது சரியான தமிழ்ச் சொல்லாக இருக்குமா?) ஒரே நேரத்தில் பத்து பேர் மட்டும் தான் பங்கெடுக்க முடியும் என்பது குறை. இதற்குத் தேவைப்படும் கணினி வசதியையும் கவனிக்க வேண்டும். வேறு நல்ல சேவைகள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்திப் பார்க்கலாம். --இரவி (பேச்சு) 08:06, 27 ஆகத்து 2012 (UTC)
- ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும். விடுமுறை நாளாக இருக்குமே! முகநூல் குழுக்களில் ஒரே நேரத்தில் பலர் கதைக்கலாம். தமிழ் விக்கிப்பீடியா ஒன்றுகூடல் என்று தனியாக ஒரு குழுவை உருவாக்கலாம். --மதனாகரன் (பேச்சு) 13:28, 27 ஆகத்து 2012 (UTC)
நானும் ஏற்கிறேன். விருப்பம் :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:01, 27 ஆகத்து 2012 (UTC)
- நல்ல முயற்சி. ஞாயிறு நாள் பொருத்தம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:38, 27 ஆகத்து 2012 (UTC)
- விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 05:55, 29 ஆகத்து 2012 (UTC)
- குறைந்தது இலங்கை, மலேசிய முக்கிய நகரங்களின் நேரங்களையும் மேலும் சேர்க்கவும். --Natkeeran (பேச்சு) 05:14, 28 ஆகத்து 2012 (UTC)
இலங்கையும் இந்தியாவும் ஒரே நேர வலயத்துள் அமைந்துள்ளதால் இரு நாடுகளும் ஒரே நேர முறைமையையே பின்பற்றுகின்றன. --மதனாகரன் (பேச்சு) 06:46, 28 ஆகத்து 2012 (UTC)
இந்தியாவில் பொருத்தவரை பெரும்பாலும் இணையவேகம் ஒத்துவருமா?--த♥ உழவன் +உரை.. 06:37, 29 ஆகத்து 2012 (UTC)
- எனது இணைய இணைப்பின் பதிவேற்றக் கதி போதுமானதாக இல்லை. ஆனால், தரவிறக்கக் கதி போதுமானதாக உள்ளது. பெரும்பாலானவர்கள் ஒத்திசையா இணைய இணைப்பைப் பயன்படுத்துவதால் பதிவேற்றக் கதி போதுமானதாக இருக்க வாய்ப்பில்லை. எனது இணைய இணைப்பின் தரவிறக்க வேகம் நொடிக்கு 2 மெகாபிற்றுகளாக இருக்கும் அதேவேளை பதிவேற்ற வேகம் நொடிக்கு 256 கிலோபிற்றுகள் மட்டுமே! --மதனாகரன் (பேச்சு) 07:08, 29 ஆகத்து 2012 (UTC)
http://www.worldtimebuddy.com/ பயன்படுத்தி அவரவர் நகரங்களின் நேரங்களை அறியலாம். ஞாயிறுகளில் சிலர் கணினி முன்பு இல்லாமல் இருக்கலாம். ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் ஞாயிறு விடுமுறை இல்லை. எனவே தான், மாற்றி மாற்றி வேறு கிழமைகளில் / நேரங்களில் செய்வது பயனளிக்குமா என்று எண்ணினேன். Facebook குழுமத்தில் முகம் பார்த்து உரையாட முடியுமா? ஒரே நேரத்தில் எவ்வளவு பேர் பங்கு கொள்ளலாம்? இந்தக் கூடலில் பங்கு கொள்ள விரும்புவோர் தங்கள் கூகுள் முகவரிகளை ravidreams at gmail dot com க்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன். ஒரு வேளை நிறைய பேர் ஆர்வம் காட்டினால், இரண்டு முறையாகவோ எவரேனும் விலகிக் கொள்ளும் போது புதிதாக ஒருவரை இணைத்தோ உரையாடலாம்.--இரவி (பேச்சு) 09:24, 30 ஆகத்து 2012 (UTC)
- பத்து பேருக்கு மேல் வேறு சேவைகள் எவையும் வழங்குவதாகத் தெரியவில்லை இரவி. மீட்டிங்கு.ஐஓ தளத்தில் ஒரு சந்திப்பைப் பதிந்து பார்த்தேன். http://m1.io/bOL491gYkE அதுவும் ஒரே நேரத்தில் ஐந்து பேரைத்தான் காட்டக் கூடியதாக உள்ளது. -- சுந்தர் \பேச்சு 09:35, 30 ஆகத்து 2012 (UTC)
இல்லை. முகநூலில் ஒன்றுக்கு மேற்பட்டோருடன் முகம் பார்த்து உரையாட முடியாது. நாம் கூகுளில் அரட்டை மூலந்தான் தொடர்பு கொள்ளப் போகிறோம் என நினைத்திருந்தேன். --மதனாகரன் (பேச்சு) 10:21, 30 ஆகத்து 2012 (UTC)
- விருப்பம்---- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:56, 2 செப்டெம்பர் 2012 (UTC)
நினைவூட்டல்: இன்னும் அரை மணி நேரத்தில் கூடுவோம்--இரவி (பேச்சு) 08:03, 2 செப்டெம்பர் 2012 (UTC)
கூடல் நிகழ்வு நல்லபடியாக நடந்தது. கார்த்திக் பாலா, சசிக்குமார், தகவல் உழவன், சிரீக்காந்த், கா. சேது ஆகியோர் கலந்து கொண்டனர். இன்னும் பலர் ஆர்வம் காட்டினாலும் வெவ்வேறு நேர வலயங்களில் இருந்ததாலும் தனிப்பட்ட வேலைகளாலும் கலந்து கொள்ள முடியவில்லை. ஒலிவாங்கி, வலைப்படமிகள் இல்லாதோரும் எழுத்து அரட்டையில் கலந்து கொள்ளலாம். மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு உடனுக்குடன் கருத்து தெரிவிக்கலாம். எனவே, இணைய வேகம் ஒரு பொருட்டு இல்லை. ஒரு சிலர் விலக விலக அடுத்து வருவோர் உரையாடலில் இணைந்து கொள்ளலாம். எனவே, பத்துக்கு மேற்பட்டோருக்கும் இடம் இருக்கலாம்.
குறிப்புகள்:
- விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களிடையே நல்லுறவை வளர்க்கவும் விக்கி சமூகத்தை வலுப்படுத்தவும் இது போன்ற கூடல்கள் உதவும் என்று உணர்ந்தோம். புதிய பங்களிப்பாளர்களுக்கு இதன் மூலம் விக்கி பயிலரங்கு நடத்தலாமே என்று கார்த்திக் குறிப்பிட்டார். இதில் ஆர்வமுள்ளோர் முயன்று பார்க்கலாம்.
- தமிழ் விக்கிப்பீடியா பற்றிய கருத்துகளை, ஒரு பார்வையாளராக, கா. சேது பகிர்ந்து கொண்டார். பல கட்டுரைகள் 2005-2006 காலத்தில் தொடங்கியதோடு தேங்கியுள்ளதாக உணர்வதாகத் தெரிவித்தார். பல கட்டுரைகளில் தகவல் பிழைகள் உள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து கவனத்தில் எடுப்பதாகச் சொன்னோம்.
- தமிழ்நாட்டில் உள்ள தாவரங்கள் பற்றிய கட்டுரைகளை எழுத எண்ணியிருப்பதாக கார்த்திக் பாலா தெரிவித்தார். இவற்றைத் தானியக்க முறையில் செய்ய முடியுமா என்று பேசினோம்.
- சிரீக்காந்த் பல்வேறு நுட்பம் சார் கேள்விகளுக்கு விடையளித்தார். குறிப்பாக, svg கோப்புகளை மொழிபெயர்க்கும் வசதி வர இருப்பதால் பல புவியியல் வரைபடங்களைத் தமிழில் காணும் வாய்ப்பு வரும் என்றார்.
- சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியை விக்சனரியில் ஏற்றும் திட்டம் குறித்து தகவல் உழவன் விளக்கினார். பைத்தான் அறிந்தோர், தகவல் அகழ்வு அறிந்தோர் இத்திட்டத்தில் இணைந்து உதவலாம் (சுந்தரின் கவனத்துக்கு)
செப்டம்பர் 30 ஞாயிறு அன்று தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி ஒன்பது ஆண்டுகள் நிறைவை ஒட்டி அடுத்த கூடலை நடத்தலாம் என்று எண்ணியுள்ளோம். இந்திய / இலங்கை நேரப்படி இரவு 8 - 10 நடத்தினால் பல்வேறு நேர வலயங்களில் உள்ளோரும் கலந்து கொள்ள இயலும்.
- நல்ல முயற்சி. இதற்கென விக்கிப்பீடியா:இணையச் சந்திப்பு என்ற பக்கத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். தாவரங்கள் தொடர்பாக எக்சல் வடிவில் தகவல்களைத் தந்தால் எளிதாக தானியங்கி முறையில் தரவேற்ற முடியும். செ.ப.அகரமுதலி தொடர்பாக குறிப்பாக என்ன உதவிகள் வேண்டும்? --Natkeeran (பேச்சு) 14:53, 2 செப்டெம்பர் 2012 (UTC)
- இரவி! நேற்று நடந்த தமிழ்விக்கிகளின் முதல் கூகுள் கூடல் நிகழ்வுகள் இயல்பிருப்பாக யூடிப்பில் சேமிக்கப்படும் என்று தெரிகிறது. அந்நிகழ்படத்தொகுப்பைக் காண்பதற்கான, தொடுப்பைத்தாருங்கள். --த♥ உழவன் +உரை.. 17:05, 3 செப்டெம்பர் 2012 (UTC)
சென்னையில் தமிழ் சிதைவு
[தொகு]அண்மைக் காலங்களாக சென்னையில் தமிழ் மோசமான நிலையில் உள்ளதை, சிதைந்து வருவதைக் காண முடிகிறது.வருத்தமளிக்கிறது. :( ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள்! ”சுவசாக் காற்றே”, ”ஓய்வரியா சூரியனே“ என்று எழுதியிருப்பார்கல். இது பரவாயில்லை. நிறுவனங்களின் பெயர்களை தமிழில் எழுதச் சொன்னால், தமிழில் எழுத்துபெயர்ப்பு செய்து எழுதுகின்றனர். :( எ.டு: ராதா ரெஸ்ட்டாரண்ட், சரவணா ஸ்டோர்ஸ், முத்து ட்ரேடர்ஸ் எனபன போல்.. இதுகூட பரவாயில்லை. ஆங்கிலத்தில் எழுத்துகளை இட்டு, அருகில் தமிழ் எழுத்துப்பெயர்ப்ப்பில் எழுதுகின்றனர். எ.டு: R.S ஸ்டோர்ஸ், K.K.மெடிக்கல்ஸ் என்பன போல். இதுமட்டுமின்றி அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் அதற்கும் மேல். ஒரு இடத்தில் கூட முழுமையாக தமிழில் எழுதப்பட்ட பெயர்களைக் காண இயலாது. இதில் வருந்தத்தக்கது என்னவெனில், ஊர் முழுக்க இப்படிதான் உள்ளது. ஒருவருக்கும் தாம் செய்வது தவறு என்றுகூட அறியமுடியவில்லை. திருமணப் பத்திரிகைகளில் கூட ஆஙிலத் தலைப்பெழுத்துடன் தமிழ் பெயரை எழுதுகின்றனர். இதற்கு தீர்வு வேண்டுகிறேன்/ நீங்களே ஒரு பெயர் முறைமை வாரியம் தொடங்கினால் என்ன! இதையெல்லாம் கவனிக்காமல் விட்டால், இங்கே நாம் செய்வது பலனளிக்காது. :( விரைவில் தீர்வு காண வேண்டுகிறேன் நன்றி! .-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:27, 30 ஆகத்து 2012 (UTC)
- அதற்கு தமிழ்நாட்டு அரசியல் அமைப்புகளும் அவர்களைத் தேர்தெடுக்கும் மக்களுமே ஒரு முக்கிய காரணம். கனடாவில் கியுபெக்கில் அவர்கள் எவ்வளவு கவனமாகத் தமது மொழியை வளர்த்தெடுக்கிறார்கள் என்று அறியும் போது அதை நன்கு உணரக் கூடியதாக உள்ளது. எ.கா ஒரு நிறுவனத்தில் கணினிகள், செயலிகள் அனைத்தும் பிரெஞ்சு மொழியிலும் அமையவேண்டும். உங்கள் அவதானிப்புகள் மிகச் சரியாக அமைந்தாலும், தமிழில் தரமான இணைய உள்ளடக்கம் என்ற குறியில் இருந்து விலகுவது எமக்கு பயன்தராது. நல்ல எடுத்துக்காட்டுக்களை முன்வைப்பதன் மூலமாக நாம் தமிழ் மொழியை வளர்க்க ஒரு வகையில் நாம் உதவுகிறேம் என்பதையும் இங்கு குறித்துக்கொள்ளலாம். -Natkeeran (பேச்சு) 17:45, 30 ஆகத்து 2012 (UTC)
- தமிழ்க்குரிசில், அதே கவலை இங்குள்ள பெரும்பாலானோருக்கும் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் நற்கீரன் சொன்னது போல விக்கிப்பீடியர்களாக நாம் இங்கு ஒரு சிறப்பான எளிய தமிழ்நடைக் கையேடு ஒன்றை உருவாக்கியும், நல்ல தமிழில் எழுதுவதையும், சமூக மொழியியற் தலைப்புகளில் விளக்கமான கட்டுரைகளையும் எழுதுவதையும் தவிர வேறு எதுவும் செய்ய இயலுமா தெரியவில்லை. ஆனால் விக்கிக்கு வெளியே ஒன்றிணைந்து வேறு பரப்புரைகளில் ஈடுபடலாம். வேறு பல வழிகளையும் ஆராயலாம். -- சுந்தர் \பேச்சு 05:21, 31 ஆகத்து 2012 (UTC)
அருமையான மறுமொழிகளுக்கு நன்றி நற்கீரன், சுந்தர்!! தனித்தமிழ் வேண்டாம் என்று நான் சொல்லவரவில்லை. (நமக்கு புரியவில்லை என்பதற்காக ஆங்கில நூல்களில் தமிழ் கலந்தா எழுதுகிறார்கள்? புரியாதவர்கள் படித்தல்லவா அறியவேண்டும்!). நானும் உங்களோடு இணையவே இங்கு வந்தேன். இது மக்களை சென்றடையவில்லையே என்ற என் வருத்தத்தை தெரிவித்தேன். மேலே நான் கேட்டதன் நோக்கம், பெயர் முறைமை குறித்த தளம் பற்றி அறியவே. நற்றமிழில் எழுத, அப்படி ஏதேனும் தளம் உள்ளதா? அறிந்தால் பரப்ப வசதியாயிருக்கும். விக்கிக்கு வெளியேயும் ஒன்றிணைந்து செயல்படுவோமே! :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:56, 31 ஆகத்து 2012 (UTC)
- தமிழ்க்குரிசில், நீங்கள் சுட்டும் போக்கு தமிழகம் முழுக்க இருக்கிறது. சென்னையில் மட்டும் இல்லை. தே நிலை பல இந்திய மொழிகளிலும் உலகளாவிய மொழிகளிலும் தென்படுகிறது. ஒரு மொழி சிதைவது அச்சமூகம் மரபு, சுற்றுச்சூழல், தன்னாட்சி போன்ற மற்ற விழுமியங்களையும் சேர்த்தே இழந்து வருகிறது என்பதன் குறியீடே. ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. அனைத்தையும் ஒருங்கிணைந்து சீராக்காமல் ஒன்றை மட்டும் செப்பனிடுவது கடினம். அதே வேளை பல்வேறு முனைகளிலும் முயற்சிகள் தேவை. மொழி தொடர்பான அத்தகைய ஒரு முயற்சியாக தமிழ் விக்கிப்பீடியாவைக் கருதலாம் என்பதே ஒரே ஆறுதல். இணையத்தில் உருவான பல சொற்கள் வெகு மக்கள் ஊடகங்களில் புழங்கத் தொடங்கியுள்ளன. இதனை உணர்ந்து நல்ல தமிழில் கட்டுரைகள் ஆக்க முனைவதன் மூலம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று எதிர்பார்ப்போம். --இரவி (பேச்சு) 07:04, 4 அக்டோபர் 2012 (UTC)
வீரகேசரி நாளிதழில் தமிழ் விக்கி கட்டுரை
[தொகு]இன்றைய வீரகேசரி நாளிதழில் மலேசிய விடுதலை தினம் பற்றி ஓர் கட்டுரை இடம்பெற்றிருந்தது முழுவதும் தமிழ் விக்கியில் உள்ள மலேசியா கட்டுரையின் தகவல்களை பிரதி பண்ணி ஒட்டப்பட்டிருந்தது. நன்றி விக்கிப்பீடியா என்றும் இறுதியில் எழுதியிருந்தார்கள்.--சங்கீர்த்தன் (பேச்சு) 10:02, 31 ஆகத்து 2012 (UTC)
விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:59, 31 ஆகத்து 2012 (UTC)
விருப்பம் -- சுந்தர் \பேச்சு 08:57, 2 செப்டெம்பர் 2012 (UTC)
தமிழ் கம்ப்யூட்டர் இதழில் விக்சனரி - சிறப்புக் கட்டுரை
[தொகு]தமிழ் கம்ப்யூட்டர் (செப்டம்பர் 1-15, 2012) இதழில் விக்சனரி இணைய அகரமுதலி - ஒரு சிறப்புப் பார்வை எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையின் முதல் பகுதி மூன்று பக்கங்களில் வெளியாகி இருக்கிறது. இது குறித்த செய்தியும், இதழில் வெளியான கட்டுரையின் ஒளிப்படப் பதிவுகளும் விக்சனரி - ஆலமரத்தடி பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 11:26, 1 செப்டெம்பர் 2012 (UTC)
- விருப்பம் --Nan (பேச்சு) 06:51, 2 செப்டெம்பர் 2012 (UTC)
- விருப்பம் -- சுந்தர் \பேச்சு 08:57, 2 செப்டெம்பர் 2012 (UTC)
தள அறிவிப்பு
[தொகு]மேலேயுள்ள தள அறிவிப்பைத் திருத்த வேண்டும். இதன் மூலம் எங்கேயுள்ளது? 'விக்கி விரும்புகின்றது நினைவுச்சின்னம்: நினைவுச்சின்னத்தை புகைப்படம் எடுங்கள், விக்கிப்பீடியாவிற்கு உதவுங்கள், வெல்லுங்கள்!' என்பது 'விக்கி நினைவுச் சின்னங்களை விரும்புகிறது: நினைவுச்சின்னங்களைப் படம் எடுத்து விக்கிப்பீடியாவுக்கு உதவுங்கள். பரிசுகளையும் வெல்லுங்கள்!' என்று இருந்தால் இயல்பாக இருக்கும். குறிப்பாகத் தமிழ் சொல்வரிசைப்படி வினைச்சொல் பெரும்பாலும் இறுதியில்தான் வரும். -- சுந்தர் \பேச்சு 09:30, 2 செப்டெம்பர் 2012 (UTC)
- மேல் விக்கியில் மாற்ற வேண்டும். தெரிந்த சில மேல் விக்கி நிர்வாகிகளிடம் கேட்டுப் பார்க்கிறேன், முன்பு யாரோ (செல்வா என நினைக்கிறேன்) மொழி பெயர்ப்புக்கு விக்கி விரும்புகின்றது நினைவுச்சின்னம் என உபயோகித்திருந்ததால் பெயரை மாற்ற வேண்டாமே என விட்டு விட்டேன்--சண்முகம்ப7 (பேச்சு) 15:43, 2 செப்டெம்பர் 2012 (UTC)
- நன்றி சண்முகம். ஒருவழியாகத் தேடிப்பிடித்து m:MediaWiki_talk:Centralnotice-wlm_2012-text/ta#Translation_edit_required என்ற பக்கத்தில் ஒரு மாற்றுப் பரிந்துரையை இட்டுள்ளேன். அதில் யாருக்காவது ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமெனில் விரைவில் தெரிவிக்கவும். -- சுந்தர் \பேச்சு 16:46, 2 செப்டெம்பர் 2012 (UTC)
- மேல் விக்கியில் மாற்ற வேண்டும். தெரிந்த சில மேல் விக்கி நிர்வாகிகளிடம் கேட்டுப் பார்க்கிறேன், முன்பு யாரோ (செல்வா என நினைக்கிறேன்) மொழி பெயர்ப்புக்கு விக்கி விரும்புகின்றது நினைவுச்சின்னம் என உபயோகித்திருந்ததால் பெயரை மாற்ற வேண்டாமே என விட்டு விட்டேன்--சண்முகம்ப7 (பேச்சு) 15:43, 2 செப்டெம்பர் 2012 (UTC)
- நான் ஏற்கனவே அதற்கு மேலேயே உங்கள் பரிந்துரையை இட்டு ircயில் கேட்டுள்ளேன், அவர் விரைவில் மாற்றுவதாய் கூறியுள்ளார் :)--சண்முகம்ப7 (பேச்சு) 16:55, 2 செப்டெம்பர் 2012 (UTC)
- மிக்க நன்றி சண்முகம். இங்கு மேலே தெரிவித்துள்ளதையும் சற்று திருத்தி அங்கு இட்டிருக்கிறேன் என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள். அங்கி இட்டிருக்கும் பரிந்துரையை ஏற்றுக் கொண்டால் நல்லது. விருதுகளே இருப்பதால் பரிசை வெல்லுங்கள் என்பதையும் மாற்றியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 16:58, 2 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆயிற்று by m:user:odder--சண்முகம்ப7 (பேச்சு) 18:48, 2 செப்டெம்பர் 2012 (UTC)
- நடவடிக்கைக்கும் தகவலுக்கும் நன்றி சண்முகம். -- சுந்தர் \பேச்சு 04:09, 3 செப்டெம்பர் 2012 (UTC)
தமிழ் விக்கிநூலில் நிர்வாக வசதிக்கான வேண்டுக்கோள்
[தொகு]துப்பரவு வேலைகள் நிறைய இருப்பதால், தமிழ் விக்கிநூலில் நிர்வாக வசதிக்கான வேண்டுக்கோளை கேட்டுள்ளேன் இங்கே பார்க்க. நன்றி. --Natkeeran (பேச்சு) 16:33, 2 செப்டெம்பர் 2012 (UTC)
புதுப்பயனர் கட்டுரைகளை நகர்த்தும் போது, நீக்கும் போது, மாற்றும் போது கவனிக்க வேண்டியவை
[தொகு]பெரிதாக மாற்றும் போது
[தொகு]பயனர் பங்களித்த கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பெரிதாக மாற்றும் போது அவரது பேச்சுப் பக்கத்திலே, கட்டுரையின் போச்சுப் பக்கத்திலோ குறிப்பிடுச் செய்தல் நன்று.
நகர்த்தும் போது
[தொகு]புதுப் பயனர்களுக்கு தமது கட்டுரைகள் எங்கே என்பதை கண்டுபிடிப்பது கடினமாக அமையலாம். எனவே பொருத்தமற்ற தலைப்புகளில் கட்டுரையை இட்டு இருந்தாலும் நகர்த்தி விட்டு சில காலம் அந்தப் பொருத்தமற்ற தலைப்புக்கான வழிமாற்றை வைத்துக் கொள்வது நன்று.
நீக்கு போது
[தொகு]புதுப் பயனர்கள் ஒரு பொருத்தமற்ற கட்டுரையை இடும் போது நீக்குவதற்கான வார்ப்புருவையும் காரணத்தையும் இட்டு சில காலம் விடுவது நன்று. உடனடியாக நீக்குவதால் சில புதுப் பயனர்கள் குழம்பி விட வாய்ப்பு உள்ளது. வார்ப்புரு இடுவதன் மூலம் அவரை உரையாடலுக்கு அழைக்க தூண்டுவதாகவும் அமைந்துவிடும்.
விதிகளை இளக்குதல்
[தொகு]மூன்றுவரி விதி, சான்றுகள், விக்கியாக்கம், நடை போன்ற பொதுவான விதிகளை புதிய பயனர்களோடு இறுக்கமாக அமுல்படுத்தாமல் இருந்தல் நன்று.
--Natkeeran (பேச்சு) 21:06, 2 செப்டெம்பர் 2012 (UTC)
- +1 -- சுந்தர் \பேச்சு 04:12, 3 செப்டெம்பர் 2012 (UTC)
- கருத்து
- இங்கு "இறுக்கமாக அமுல்படுத்தாமல் இருந்தல்" என்பதன் அளவுகோல் அல்லது வரையறை என்ன? ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு அர்த்தத்தினைக் கொடுக்கும். விசமத் தொகுப்புக்களைச் செய்வோரும் புதுப்பயனரே. இங்கு தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது. எ.கா. சத்தமன் எனும் கட்டுரை(?) உருவாக்கப்பட்டு ஒரு நாளுக்கு மேலாகியும் எவருமே அதில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை, ஆனால் பல முறை பார்வையிடப்பட்டுள்ளது. மூன்றுவரி விதி போய் அரைவரி நடைமுறையில் உள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.
- கலைக்களஞ்சியத்தில் எழுதுவதென்றால் மொழியறிவும் விடய அறிவும் முக்கியம். இவையில்லாத ஒருவர் எழுதும்போது பிழைகள் எழும். அதை எதுரைக்கும் திருத்தலாம்? விக்கியில் யாரும் எழுதலாம் என்பதற்காக ஆரம்பப் பாடசாலையாக இருக்கக்கூடாது.
- நெகிழ்ச்சித் தன்மை தரம் குறைந்த கட்டுரைகளை உருவாக்கிவிடும். நிலுவையில் உள்ள பணிகளே அதிகமிருக்க அதை இன்னும் அதிகரிக்க வேண்டுமா?
- விக்கிக்கு புதுப் பயனர்களை ஈர்க்க வேண்டும் என்பது கட்டாய தேவைதான். அதற்காக விதிகளை இளக்கி, அதன் மூலம் விதியை மீறுதல் என்பது சிறந்த தந்திரோபாயமாக இருக்க முடியாது.
- இங்கே தெரிவிக்கப்பட்டவை அறிவுறுத்தல்களாக அல்லது கட்டளையாகவுள்ளன. இங்குள்ள புதுப் பயனர் ஈர்ப்புத் தந்திரோபாயத்திற்கான விதிகளை இளக்குதல், தற்போதுள்ள பயனர்களுக்கு விதிகளை இறுக்குதலாக மாறியுள்ளது.
--Anton (பேச்சு) 23:29, 4 செப்டெம்பர் 2012 (UTC)
- அன்ரனின் கருத்துக்களோடு இணக்கம். கட்டுரைகளின் எண்ணிக்கையை விட தரமும் நம்பகமுமாக கட்டுரைகளே அதிகம் சிறப்பான வாசகர்களை ஈர்க்கும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:57, 4 செப்டெம்பர் 2012 (UTC)
- அன்ரன். எனது கருத்துக்களாகவே முன்வைத்தேன். உடனே எல்லோரும் செய்ய வேண்டும் என்று எதிர்பாத்து அல்ல. மேலும் உங்கள், பிறரது கருத்துக்களைக் கேட்டும் நாம் கூடிய தெளிவு பெறலாம். common sense பயன்படுத்தி இந்த விடயத்தை அணுகலாம். விசமத் தொகுப்பை விட்டு விடுங்கள் என்று நாம் கூறுவேனா!! தற்போது உள்ள பயனர்களுக்கு பணிச் சுமையை அதிகரிக்கலாம் என்று உங்கள் கருத்தை ஏற்கிறேன். எனினும் புதுப் பயனர்களைக் எவ்வாறு கையாள வேண்டு என்பதற்கான ஒரு வழிகாட்டலை நாம் கூட்டாக உருவாக்குவது உதவியாக அமையும். --Natkeeran (பேச்சு) 16:06, 5 செப்டெம்பர் 2012 (UTC)
பதிலுக்கும் இணைப்புக்களுக்கும் நன்றி நக்கீரன். த.வி. தரமாக முன்னேற, புதுப் பயனர்களைக் எவ்வாறு கையாள வேண்டு என்பதற்கான ஒரு வழிகாட்டல் இருந்தால் என் ஆதரவும் இருக்கும். --Anton (பேச்சு) 15:08, 6 செப்டெம்பர் 2012 (UTC)